உன்னை காணாத கண்ணும்க ஆனந்த கண்ணீருடன் பக்தர்கள் தரிசனம்

அதிகாலையில் எழுந்து குளித்து நெற்றியில் விபூதி பூசி, குங்குமம் இட்டு பய பக்தியுடன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்யும்போது கிடைக்கும் பேரானந்தத்திற்கு அளவே இல்லை. கொரோனா ஊரடங்கு மார்ச் 2௩ல் அமலானது. இதில் கோயில்களும் தப்பவில்லை. அனைத்து கோயில்களும் மூடப்பட்டன. பக்தர்கள் நெஞ்சில் ஈட்டி பாய்ந்தது போல் வேதனை

அடைந்தனர். எப்போது கோயில் திறக்கும் என பக்தர்கள் ஏக்கப்பெருமூச்சு விட்டனர்.

பக்தர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக ஜூலை 1 முதல் கிராம கோயில்களை திறக்க அரசு உத்தரவிட்டது. பக்தர்களும் ஆனந்த கண்ணீர் பெருக கோயில் சென்று சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்தனர். இவர்கள் உற்சாகம் பெருக பகிர்ந்து கொண்டதில் இருந்து…

வழிந்தோடிய ஆனந்த கண்ணீர்

விருதுநகர் – மதுரை ரோட்டில் உள்ள சிவ கணேசன் கோயில் பழமையும், புராதான சிறப்பும் பெற்றது. பாண்டியன் நகரில் இருந்து 3 கி.மீ., துாரம் தினமும் நடந்து வந்து தரிசனம் செய்வது வழக்கம். ஒரு நாள் தரிசனம் செய்ய முடியாமல் போனால் உணவு உண்ண பிடிக்காது. எதையோ இழந்து விட்டதாக மனம் சஞ்சலப்படும். நான் தினமும் கோயிலுக்கு வந்து

வெளியில் நின்றபடி தரிசனம் செய்து வந்தேன். நேற்று முதல் திறந்ததால் அதிகாலை

பூஜையில் கலந்து கொண்டு அய்யனை பார்த்த சந்தோஷத்தில் அழுது விட்டேன்.

– வடிவேல், மில் தொழிலாளி, பாண்டியன் நகர்

அனுமதியால் மகிழ்ச்சி

கிராம கோயில்களை திறக்க அனுமதி அளித்தது மகிழ்ச்சியாக உள்ளது. மன

நிம்மதிக்காகவும், கஷ்டங்கள் தீர்க்கவும் கடவுளை வழிபடுகிறோம். நாடும் , ஊரும்

செழிக்கவும் மழை பொழியவும், விவசாயம் வளர்ச்சி பெறவும் கிராமத்தினர் பொங்கலிட்டு சுவாமியை வழிபடுவர். தங்களது பிரச்னைகள் தீர்ந்தற்காக நேர்த்தி கடன் செலுத்தி மகிழ்வர். அந்த அளவிற்கு கோயில்களில் வழிபாடு சிறப்பாக இருக்கும். என்னதான் வீட்டில் சுவாமி

கும்பிட்டாலும் கோயிலுக்கு சென்று வழிபடுதல் தனி சிறப்பு.

பிரகாஷ், சுக்கிவார்பட்டி

கிராமமே அழகு பெறுகிறது

கிராமங்களில் கோயில் விழாக்கள் தான் மனதிற்கு நிம்மதி மகிழ்ச்சி தரும். 3 மாதங்களுக்கு மேலாக மூடி கிடந்ததால் மனக்குறையை கூறி ஆறுதல் அடையமுடியாமல் தவித்து

வந்தோம். தற்போது அரசு அனுமதி அளித்துள்ளது மகிழ்ச்சி தந்துள்ளது . காளியம்மன்,

மாரியம்மன், கருப்பசாமி, முனியசாமி தெய்வங்கள் வணங்கினாலே துன்பம் தொலைந்து போகும். கொரோனா ஒழிய கோயில் வழிபாடே பலன் தரும் . கோயில்கள் திறக்கப்பட்ட

பின்னர்தான் இருள் விலகி கிராமமே அழகாக தெரிகிறது.

அமராவதி, குடும்பத்தலைவி, கண்மாய் சூரங்குடி

Related posts

Leave a Comment