தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு [05-07-2020] எவை இயங்கும்.. எவை இயங்காது.? தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு [05-07-2020] எவை இயங்கும்.. எவை இயங்காது.? தமிழக அரசு அறிவிப்பு

🔲தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் 5, 12, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

🔲மேலும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகம் பரவி உள்ள மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் வரும் 5ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இந்த ஊரடங்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்காக வரும் திங்கட்கிழமை முதல் மாற உள்ளது.

🔲மருத்துவமனை, மருத்துவர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவை மட்டுமே இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

🔲மருந்தகங்கள் தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருக்கும். அனைத்து போக்குவரத்து சேவைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

🔲கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஜூலை மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட இருப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment