ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுடன் துணை நிற்பது பாஜக மட்டுமே- மோடி

டெல்லி: ஆட்சியில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றி வருவது பாஜகதான் என தொண்டர்கள் மத்தியிலான உரையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். “முதலில் தேசம்” என்ற நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகளுடன் காணொலி காட்சி மூலம் உரையாற்றி வருகிறார்.’ இதுகுறித்து பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் பாஜக நிர்வாகிகளுக்கு முதலில் தேசத்திற்கு சேவை செய்வதுதான் முக்கியம். இந்த சோதனையான நேரத்தில் நமது தொண்டர்கள் இந்தியா முழுவதும் ஓய்வின்றி உழைத்து வருகிறார்கள். தேவையானோருக்கு உதவி வருகிறார்கள்.

இந்த பணிகள் குறித்து நான் இன்று உரையாடவுள்ளேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் நேற்றைய தினம் லடாக் எல்லையில் ஆய்வு செய்த பிரதமர் நரேந்திர மோடி ராணுவ வீரர்களுடன் உரையாடல் நிகழ்த்தினார். இன்று நடந்த உரையாடலில் தனது கட்சி நிர்வாகிகளிடம் முக்கியமான விஷயங்களை மோடி தெரிவித்தார். அதோடு கட்சி நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டறிந்தார். பிரதமர் மோடியிடம் கொரோனா பாதிப்பு குறித்து உ.பி பாஜக விளக்கினார்கள். டெல்லி பாஜக யூனிட் மிக சிறப்பாக செயல்பட்டது. அதிலும் எதிர்கட்சிகளுக்கு கூட டெல்லி பாஜக உதவிகளை செய்தது என்று டெல்லி பாஜக பிரிவு தெரிவித்தது.

கொரோனா சமயத்தில் அசாம் கடினமான விஷயங்களை எதிர்கொண்டது. அசாம் பாஜக அனைத்து பணிகளையும் சிறப்பாக எதிர்கொண்டது பிரதமர் மோடியுடன் நடக்கும் ஆலோசனையில் அசாம் பாஜக பிரிவு தகவல் தெரிவித்தது. தன்னலமற்ற பணிகளை நாம் செய்ய வேண்டும். மக்களுக்கு உதவுவதுதான் நம்முடைய நோக்கம். மக்களுக்கு உதவுவதுதான் நமக்கு மகிழ்ச்சி அளிக்கும். மாநில பாஜகவினர் செய்த பணிகளை நாம் தொகுக்க வேண்டும். மாவட்ட, மாநில, தேசிய அளவில் இந்த புத்தகங்களை நாம் உருவாக்க வேண்டும். இந்த புத்தகங்களை தலைமைக்கு மாவட்ட தொண்டர்கள் அனுப்ப வேண்டும். உத்தர பிரதேசம், கர்நாடகா நமக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளது. உத்தர பிரதேசம் கொரோனாவிற்கு எதிராக சிறப்பாக செயல்பட்டுள்ளது. கொரோனாவிற்கு எதிராக கர்நாடகா சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment