பரிதவிப்பில் தளவாய்புரம் மாஞ்சோலை காலனி

ரோடு வசதி தேவை

தளவாய்புரத்திலிருந்து அம்மையப்ப புரம் இளந்திரைகொண்டான் மெயின் ரோடு பழுதடைந்துள்ளது. பல முறை போராடியும் ரோடு வசதி செய்து கொடுக்கவில்லை. மழை காலங்களில் இந்த சாலை முழுவதும் சேறும், சகதியுமாகி விடுவதால் நடந்து கூட செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. மக்கள் நலன் கருதி ரோடு வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

முருகன், சமூக ஆர்வலர்

வாறுகால்கள் இல்லை

இப்பகுதிக்கு குடிநீர் வசதி இல்லை. பல இடங்களில் வாறுகால் உடைந்த நிலையிலும், அரசு மாணவர் விடுதி தெருவில் வாறுகால் இல்லாததால் தெரு முழுவதும் கழிவு நீரால் நிரம்பி காணப்படுகிறது. இதனால் தொற்று நோய் அபாயத்துடன் உள்ளோம். அவசரத்திற்கு கூட வாகனங்கள் தெருக்களின் சில பகுதிகளில் நுழைய முடிவதில்லை.

பூபதியம்மாள், குடியிருப்பாளர், தளவாய்புரம்

சுகாதார வளாகம் மோசம்

போதிய பராமரிப்பு இல்லாததால் சுகாதார வளாகத்தில் துர்நாற்றம் வீசுகிறது. குளிப்பதற்கும், துணி துவைக்கவும் போதிய வசதிகள் இல்லை. பணியாட்களை நியமித்து சுத்தம் செய்வதுடன் தேவையான அளவு சுகாதார வளாகத்தை விரிவு படுத்தி தர வேண்டும். நடைபாதைகளை திறந்த வெளியாக்கி வரும் அவலமும் தளவாய்புரத்தில் நடக்கிறது. ராசம்மாள், குடியிருப்பாளர்

Related posts

Leave a Comment