டாட்டா.. தோனியையும் கூட்டிக்கிட்டு கிளம்புறோம்.. மற்ற ஐபிஎல் அணிகளை அதிர வைத்த சிஎஸ்கே!

டெல்லி : ஐபிஎல் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் ஐபிஎல்லின் சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஆட்டத்தை காண ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்

வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் நவம்பர் 8ம் தேதிவரை யூஏஇயில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளதாக அதன் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 29ம் தேதி துவங்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலக கோப்பையை தள்ளிவைத்து ஐசிசி அறிவித்துள்ளது. இதையடுத்து வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் நவம்பர் 8ம் தேதிவரை ஐபிஎல் போட்டிகள் யூஏஇயில் நடைபெறவுள்ளதாக அதன் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

இந்த தொடரில் தோனியின் ஆட்டத்தை காண சர்வதேச அளவில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதற்கு சாதாரண ரசிகர்கள் முதல் சக வீரர்கள் உள்ளிட்ட யாரும் விதிவிலக்கில்லை. இந்நிலையில் பேட்மிண்டன் வீரர் கடாம்பி ஸ்ரீகாந்த், ஐபிஎல் அறிவிப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள ஸ்ரீகாந்த், இந்த தொடரில் தோனியின் ஆட்டத்தை மீண்டும் காண தான் ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment