அருப்புக்கோட்டையில் தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்னை

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டையில் தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு எப்போது என மக்கள் புலம்புகின்றனர்.

அருப்புக்கோட்டைக்கு நகராட்சி மூலம் வைகை, தாமிரபரணி குடிநீர் விநியோகம் நடக்கிறது. தினமும் 90 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. ஆனால் வைகை குடிநீர் ஆண்டுக்கு நான்கு மாதங்கள் மட்டும் தினமும் 25 லட்சம் லிட்டர் கிடைக்கிறது. தாமிரபரணி குடிநீர் தினமும் 50 லட்சம் லிட்டர் கிடைக்க வேண்டும். ஆனால் 30 லட்சம் லிட்டர் தான் கிடைக்கிறது.

வைகை குடிநீர் விநியோகம் மூன்று மாதமாக நிறுத்தப்பட்டுள்ளது.தாமிரபரணி குடிநீர் தினமும் 30 லட்சம் லிட்டர் மட்டுமே கிடைப்பதால் நகரை ஏழு பிரிவாக பிரித்து பத்து நாட்களுக்கு ஒரு பகுதி வீதம் குடிநீர் வழங்கப்பட்டது. கடும் தட்டுப்பாட்டால் 20 நாட்களுக்கு ஒரு முறை விநியோகிக்கின்றனர். தாமிரபரணி குழாய் உடைப்பு, வால்வில் கசியும் குடிநீரை பெண்கள் பல மணி நேரம் காத்திருந்து பிடித்து செல்கின்றனர். சிலர் தனியார் குடிநீர் லாரிகளில் அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர்.

Related posts

Leave a Comment