சிவகாசில என்ன தொழில் பண்ணுனாலும் ஆறுமாசம் பொறுமை வேணும்

சிவகாசில என்ன தொழில் பண்ணுனாலும் ஆறுமாசம் பொறுமை வேணும் .அப்புறம் முக்கியமான விஷயம் கூட்டு வியாபாரம் பண்ணவே பண்ணாதீங்க .இளைத்தவன் முதலையும் பிடுங்கிட்டு போய்டுவானுங்க .சுயமா யோசிச்சி முடிவெடுங்க ! நெறையா பேரு பட்டாசு வியாபாரத்தில் போயி விழுறாங்க .தப்பில்ல . ஆனா அதுக்கு நிறைய அனுபவம் தேவை .மாப்புள நீ பாத்துக்கோடான்னு சொல்லி ட்டா அப்பிடி இப்பிடின்னு பொய் கணக்கு காட்டிடுவாங்க ! எச்சரிக்கை அவசியம் !! பலசரக்கு கடை வைக்கலாம்னு நினைக்கிறவுங்க முதலில் ஆள் பழக்கம் ,அனுசரணை குணம் இதெல்லாம் வேணும் . இங்க தெருவுக்கு ரெண்டு டைலர் கடை இருக்கு அதனால டைலர் கடை வைக்க யோசனை பண்ணி செய்யுறவுங்க .ஒரு நல்ல விஷயம் என்னன்னா மற்ற ஊர்களை விட சிவகாசி நாணயம் உள்ளவர்கள் சில சதவிகிதம் அதிகம் உள்ள ஊர் .…

Read More

பாராட்டுக்காகத் தான் ஏங்குகிறோம்.. பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன தோனி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனி ஆகஸ்ட் 15 அன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து இருந்தார். அவரது ஓய்வுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். பிரதமர் நரேந்திர மோடி நீண்ட பாராட்டு மடல் ஒன்றை எழுதி இருந்தார். அதற்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் தோனி. ஒரு விளையாட்டு வீரர் பாராட்டுக்காக ஏங்குவார் என்பதையும் சுட்டிக் காட்டி உள்ளார். தோனி ஓய்வு 2020 ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ள தோனி சென்னையில் சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள வந்தார். அங்கே ஆகஸ்ட் 15 அன்று தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்தார். அந்த அறிவிப்பு கிரிக்கெட் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மோடி பாராட்டு பலரும் தோனியை வாழ்த்தி வந்தனர். பிரதமர் நரேந்திர மோடி இரண்டு…

Read More

ஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்!

டெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் மொத்தம் 2.4 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இந்த அதிரடி நடவடிக்கையினால், 1.2 லட்சம் ஊழியர்கள் பயன் பெறலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த பதவி உயர்வானது வரும் செப்டம்பர் மாதத்தில் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் கொரோனா தொற்று நோய்க்கு மத்தியிலும் மிக வலுவான வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது. மேலும் சர்வதேச அளவில் பல புதிய ஒப்பந்தங்களை போட்டுள்ளதாகவும் இந்த நிறுவனம் கூறியுள்ளது. இதன் காரணமாக இந்த ஊக்குவிப்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த பதவி உயர்வனானது பெரும்பாலும் ஜூனியர் லெவல் ஊழியர்கள் மற்றும் நடுத்தர உழியர்களுக்கு உள்ளதாகவும் கூறப்படுகிறது. கொரோனா வைரஸ்…

Read More

அது அவர்கள் கருத்து.. அரசு கருத்து இல்லை.. தமிழகத்திற்கு 2வது தலைநகர் கிடையாது.. முதல்வர் அறிவிப்பு

தருமபுரி: தமிழகத்திற்கு சென்னை மட்டும்தான் ஒரே தலைநகரம், 2வது தலைநகரம் குறித்து அரசுக்கு எந்த கருத்தும் இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. கடந்த சில நாட்களாகவே, மதுரை மண்டலத்தைச் சேர்ந்த தமிழக அமைச்சர்கள், மதுரையை 2வது தலைநகரமாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர். மற்றொருபக்கம், திருச்சி மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், திருச்சியை, 2வது தலைநகரமாக்க வேண்டும் என்று கருத்து கூறி வருகிறார்கள். இந்த நிலையில் தருமபுரியில் இன்று பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம், இதுதொடர்பாக கேள்வி முன்வைத்தனர் நிருபர்கள். தமிழகத்தில் இரண்டாவது தலைநகர் உருவாக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகிறார்களே, இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன என்று நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, “அது அவர்களுடைய கருத்து.. அரசின் கருத்து கிடையாது” என்று திட்டவட்டமாக தெரிவித்தார் முதல்வர். மேலும் அவர் தெரிவிக்கையில்,…

Read More

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்.. சர்வதேச மருத்துவர்கள் உதவியுடன் சிகிச்சை

சென்னை: பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை இன்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் கொரோனா நோய் தொற்றால் சென்னையில் உள்ள எம்ஜிஎம் என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையில் சில நாட்கள் முன்னேற்றம் தென்பட்டாலும் பல நாட்கள் அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக தான் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. வாழ்த்து எஸ்பிபி உடல்நிலை தேற வேண்டும் என்பதற்காக சினிமா துறையினர் மட்டுமின்றி ரசிகர்கள் பொதுமக்கள் என பல தரப்பினரும் இன்று மாலை கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்களும், எஸ்பி பாலசுப்பிரமணியம் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர். கூட்டு பிரார்த்தனை இயக்குனர் பாரதிராஜா ஏற்பாட்டின் பேரில் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பல்வேறு திரையுலக…

Read More

மத்திய அரசு வழிகாட்டுதலின்படியே.. விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி இல்லை.. முதல்வர் விளக்கம்

சென்னை: கொரோனா பரவல் காரணமாக மத ஊர்வலங்களை நடத்த மத்திய அரசு தடை விதித்து உள்ளது. அதனை பின்பற்றியே மத ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு வழிகாட்டுதல்படி விநாயகர் சதுர்த்தி கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்தி விழா வரும் 22ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் பிரம்மாண்ட சிலைகளை வைத்து 10 நாட்கள் பஜனைகள் களைகட்டும். பக்தர்கள் கூட்டம் அலை மோதும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைத்து மத பண்டிகைகள், விழாக்கள் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. சித்திரை திருவிழா மதுரையில் ரத்து செய்யப்பட்டது. மசூதிகளில் ரம்ஜான் தொழுகை நடத்த அனுமதிக்கப்படவில்லை. அதே போல ஈஸ்டர் பண்டிகை காலத்தில் தேவாலயங்களில் பிரார்த்தனை கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு…

Read More

ஒவ்வொருவரின் பிரார்த்தனையும் அப்பாவை மீட்டெடுக்கும்… நன்றி சொல்ல வார்த்தையில்லை – எஸ்பிபி சரண்

சென்னை: அப்பாவிற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடலில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றாலும் ஒவ்வொருவரின் பிரார்த்தனையும் வேண்டுதலும அவரது உயிரை மீட்டெடுக்கும் என்று எஸ்.பி.பி சரண் கூறியுள்ளார். அப்பாவிற்காக பிரார்த்தனை செய்யும் ஒவ்வொருவருக்கும் நன்றி என்று கூறியுள்ள சரண், அப்பாவிற்காக பிரார்த்தனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ள அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார். பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு கடந்த 5ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி முதல் திடீரென மோசமடைந்தது. இதனையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எஸ்.பி பாலசுப்ரமணியம். தினசரியும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நோயிலிருந்து குணமடைய வேண்டி அவரது நலம் விரும்பிகளும் நண்பர்களும் வீடியோ மூலமாக பிரார்த்தனை…

Read More