2021 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை தொடங்கியது திமுக!

2021 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை தொடங்கியது திமுக!

🔲தமிழகத்தில் 16-வது சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தலுக்கான பணிகளை திமுக தொடங்கியுள்ளது.

🔲இதன்படி ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்குச்சாவடி குழுக்கள் (பூத் கமிட்டி) அமைக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

🔲வாக்குச்சாவடிக்கான பொறுப்பாளர்களை நியமிக்கும் பணிகளை அடுத்த மூன்று வாரங்களுக்குள் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு பொறுப்பாளர், இரண்டு துணை பொறுப்பாளர்களை நியமிக்கப்பட்ட வேண்டும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

🔲மேலும், பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டப் பின்னர் ஒவ்வொரு குழுக்களிலும் 10 பேர் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் விரைவில் சூடு பிடிக்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

Leave a Comment