சென்னம்பட்டி கால்வாயில் தண்ணீர் நீண்ட ஆண்டுகளுக்கு பின் வந்ததால் மகிழ்ச்சி

காரியாபட்டி:சென்னம்பட்டி கால்வாயில் நீண்ட ஆண்டுகளுக்கு பின் நீர்வரத்தை கண்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

காரியாபட்டி கே. கரிசல்குளம், சித்து மூன்றடைப்பு கண்மாய்களுக்கு நீர் வரத்துக்காக 30 ஆண்டுகளுக்கு முன்பு சென்னம்பட்டியில் குண்டாற்றின் குறுக்கே கால்வாய் திட்டம் ஏற்படுத்தப்பட்டது. சரிவர மழை இல்லாததால் நீர் வரத்து எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. அவ்வப்போது திருமங்கலம் பகுதியில் பெய்யும் மழை நீர் வந்தாலும் கால்வாய் தூர்வாரப்படாமல் நீர் வரத்து முற்றிலும் தடைபட்டது.

தற்போது குடிமராமத்து பணியில் தூர்வாரப்பட்டதால் தற்போதைய கனமழையால் சென்னம்பட்டி கால்வாய் வழியாக கே.கரிசல்குளம் கண்மாய்க்கு நீர் வந்தது. கண்மாய் ஓரளவிற்கு நிரம்பியதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும், கிணற்றில் தண்ணீர் ஊரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Related posts

Leave a Comment