அனைத்து ஆசான்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!!!

உயிரெழுத்தில் உள்ள உயிராய் கல்வி புகட்டும் அனைத்து ஆசான்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!!! என்றும் மக்கள் நலப்பணியில் ஆனையூர் முதல்நிலை ஊராட்சி மன்றத்தலைவர் லயன் #V.கருப்பு (எ ) #லட்சுமிநாராயணன் … … … …

Read More

கட்டட பணியில் புதுமை: பாலிதீனில் தரை தொட்டி

விருதுநகர்விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மருத்துவ கல்லுாரி கட்டுமான பணிக்கு தேவையான தண்ணீரை பாலிதீன் தொட்டி அமைத்து சேமித்து வைக்கும் தொழில்நுட்பத்தை பொதுப்பணித்துறை அறிமுகம் செய்துள்ளது.உப்பு தண்ணீரை கட்டுமான பணிக்கு பயன்படுத்தினால் சில ஆண்டுகளில் சிமென்ட் பூச்சில் ஈரம் படிந்து பெயர்ந்து விழும். காங்கிரீட் கம்பிகள் துருப்பிடித்து பல்லிளித்து விடும். கட்டுமானமும் ஸ்திரத்தன்மையுடன் இருக்காது. இப்பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் பொருட்டு விருதுநகர் மருத்துவ கல்லுாரி கட்டுமான பணிக்கு உப்பு தண்ணீருக்கு பதிலாக உப்பு இல்லாத நல்ல தண்ணீரை பொதுப்பணித்துறை பயன்படுத்தி வருகிறது. இதற்காக கட்டுமானம் நடக்கும் மருத்துவ கல்லுாரி வளாகத்தில் பாலிதீன் தொட்டி அமைத்துள்ளனர். 30 அடி நீளம், 30 அடி அகலத்தில் 5 அடி பள்ளம் தோண்டினர். அதன் மீது பாலிதீன் விரிப்பை தொட்டி போல் உருமாற்றினர். அதில் லாரிகள் மூலம் 25 ஆயிரம்…

Read More

சிவகாசியில் மழை

சிவகாசி : நேற்று மாலை 4:00 மணிக்கு பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் ஓடி போக்குவரத்திற்கு சிரமத்தினை ஏற்படுத்தியது. குளிர்ந்த நிலை ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Read More

ஸ்ரீவில்லிப்புத்துார், -மேகமலை புலிகள் சரணாலயம்

கம்பம்:எஸ்.எம்.டி.ஆர் எனப்படும் ஸ்ரீவில்லிப்புத்துார்,- மேகமலை புலிகள் சரணாலயம் அமைக்க மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையில் களக்காடு முண்டன்துறை புலிகள் சரணாலயத்தை ஒட்டி அமைந்துள்ளது ஸ்ரீவில்லிப்புத்துார் சரணாலயம். இதை ஒட்டி மேகமலை சரணாலயம் அமைந்துஉள்ளது. இச்சரணாலயத்தின் ஒரு பகுதி வெள்ளிமலையுடன் பெரியாறு புலிகள் சரணாலயம் இணைகிறது. மற்றொரு பகுதி கொடைக்கானல் வனப்பகுதியில் இணைகிறது. கொடைக்கானல் வனப்பகுதியில் ஒரு பிரிவு ஆனைமலை புலிகள் சரணாலயத்துடன் சமீபத்தில் இணைத்துள்ளனர். ஆனைமலை புலிகள் சரணாலயம் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்துடன் இணைகிறது. எனவே ஸ்ரீவில்லிப்புத்துார், மேகமலை புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டால் மேற்கு தொடர்ச்சி மலை முழுவதும் புலிகள் சரணாலயமாக மாறிவிடும். வனத்துறை உயரதிகாரி கூறுகையில், ‘தமிழக வனத்துறையின் பரிந்துரையை ஏற்று ஸ்ரீவில்லிப்புத்துார் மற்றும் மேகமலையை புலிகள் சரணாலயமாக மாற்ற மத்திய வனஅமைச்கம் அனுமதியளித்துள்ளது. இதற்கென அமைச்சக உயரதிகாரிகள்…

Read More

பிளவக்கல் அணைக்கு நீர் வரத்து

வத்திராயிருப்பு : த்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரைபெய்த மழையில் பிளவக்கல் பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்தது. தற்போதைய நீர்மட்டம் 29.04 ஆக உள்ளது. கோவிலாறு அணையில் 38.4 மி.மீ ., வத்திராயிருப்பில் 4.6., மி.மீட்டர் மழை பதிவாகியது.

Read More

மழையால் மகிழ்ச்சி

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகதோப்பு பேயனாற்று மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டது.மம்சாபுரத்திலுள்ள வாழைகுளம், வேப்பங்குளம், முதலியார்குளம் கண்மாய்களின், வெட்டு கிடங்குகள் நிரம்பி பரவலாக நீர்வரத்து ஏற்பட்டது. ஒருவார காலத்திற்கு விவசாயத்திற்குரிய தண்ணீர் கிடைத்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கூறினர்.

Read More

கட்டட பணியில் புதுமை: பாலிதீனில் தரை தொட்டி

விருதுநகர்விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மருத்துவ கல்லுாரி கட்டுமான பணிக்கு தேவையான தண்ணீரை பாலிதீன் தொட்டி அமைத்து சேமித்து வைக்கும் தொழில்நுட்பத்தை பொதுப்பணித்துறை அறிமுகம் செய்துள்ளது.உப்பு தண்ணீரை கட்டுமான பணிக்கு பயன்படுத்தினால் சில ஆண்டுகளில் சிமென்ட் பூச்சில் ஈரம் படிந்து பெயர்ந்து விழும். காங்கிரீட் கம்பிகள் துருப்பிடித்து பல்லிளித்து விடும். கட்டுமானமும் ஸ்திரத்தன்மையுடன் இருக்காது. இப்பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் பொருட்டு விருதுநகர் மருத்துவ கல்லுாரி கட்டுமான பணிக்கு உப்பு தண்ணீருக்கு பதிலாக உப்பு இல்லாத நல்ல தண்ணீரை பொதுப்பணித்துறை பயன்படுத்தி வருகிறது. இதற்காக கட்டுமானம் நடக்கும் மருத்துவ கல்லுாரி வளாகத்தில் பாலிதீன் தொட்டி அமைத்துள்ளனர். 30 அடி நீளம், 30 அடி அகலத்தில் 5 அடி பள்ளம் தோண்டினர். அதன் மீது பாலிதீன் விரிப்பை தொட்டி போல் உருமாற்றினர். அதில் லாரிகள் மூலம் 25 ஆயிரம்…

Read More

ஆசிரியர்களுக்கு நன்றி கூறுவோம்: பிரதமர் மோடி வாழ்த்து

துடில்லி: ஆசிரியர் தினத்தில், நமது ஆசிரியர்களுக்கு வாழ்த்து கூறுவோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு: மனதை ஒருமுகபடுத்துவதிலும், நாட்டை கட்டமைப்பதிலும், கடினமாக உழைக்கும் ஆசிரியர்களின் கட்டமைப்புக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருப்போம். ஆசிரியர் தினத்தில், குறிப்பிடத்தக்க வகையில் சாதனைகள் படைத்த நமது ஆசிரியர்களுக்கு நன்றி கூறுவோம். டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனுக்கு அவரது பிறந்த நாளில் அஞ்சலி செலுத்துவோம். நமது நாட்டின் புகழ்பெற்ற வரலாற்றுடன் நமக்கு உள்ள தொடர்பை மேலும் வலுப்படுத்த, நமது அறிவார்ந்த ஆசிரியர்களை விட வேறு யாரால் முடியும்? சமீபத்திய மன்கி பாத் நிகழ்ச்சியில், சுதந்திர போராட்டம் குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர் கற்பிப்பது குறித்து பகிர்ந்து கொண்டேன்.

Read More