15-09-2020 சிவகாசியில் காலண்டர் தயாரிப்பு பணிகள் சுணக்கம்

குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசி. சிவகாசி என்றால் முதலில் நினைவுக்கு வருவது பட்டாசு தான். கிழக்காசியாவில் உள்ள ஜப்பானியர்கள் போல இங்குள்ள மக்கள் சுறுசுறுப்பாக இயங்குவதற்கே இந்த பெயர் வர காரணம். அந்த வகையில் சிவகாசியில் பட்டாசு தொழில், அச்சுத் தொழில் உள்ளிட்டவைகள் பிரதனமாகும். அச்சுத் தொழிலில் காலண்டர்கள் தயாரிக்கும் பணிகளும் அடங்கும். ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் காலண்டர்களுக்கு ஆர்டர்கள் குவியத் தொடங்கும். ஆனால் இந்தாண்டு கொரோனா தாக்கம் காரணமாக அந்த பணிகளும் சுணக்கம் அடைந்துள்ளன. ஆகஸ்ட் மாதம் முதலே அடுத்த ஆண்டிற்கான காலண்டர்கள் அச்சிடும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுவது வழக்கம். ஆனால், கொரோனா ஊரடங்கால் காலண்டர் அச்சடிப்பதற்கான ஆர்டர்கள் எதிர்பார்த்த அளவிற்கு வரவில்லை என அங்குள்ள அச்சக உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். வழக்கமாக ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஆடிப்பெருக்கு அன்று, தினசரி மற்றும் மாத…

Read More

கண்ணழகி மீனாவுக்கு இன்று பிறந்தநாள்.. திரையுலகினர் வாழ்த்து!

ரஜினிகாந்த், சிவாஜி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா. பின் 90களில் கதாநாயகியாக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். நம்பர் ஒன் நடிகையாக தென்னிந்தியாவில் கலக்கி வந்த நடிகை மீனா செப்டம்பர் 16 ஆம் தேதியான இன்று இவர் தனது பிறந்த நாளை கொண்டாடி வருவதையொட்டி திரையுலகைச் சேர்ந்த பல திரைப்பிரபலங்கள் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வரும் அதே சமயம் இவரது ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.

Read More

திமுக முன்வைக்கும் அடுத்த முழக்கம்.. தமிழ் எங்கள் உயிர்.. மு.க.ஸ்டாலின் அணிந்த கலக்கல் டி -ஷர்ட்..

சென்னை: தமிழ் எங்கள் உயிர் என்ற வாசகம் தாங்கிய டி-ஷர்ட் அணிந்தவாறு தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இன்று காலை சைக்கிளிங் உடற்பயிற்சிக்கு சென்ற போது அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே இந்தி தெரியாது போடா என்ற வாசகம் பொறித்த டி-ஷர்ட் டிரெண்ட் ஆகி வரும் நிலையில் இப்போது தமிழ் எங்கள் உயிர் என்ற வாசகம் தாங்கிய டி-ஷர்ட் டிரெண்ட் ஆகத் தொடங்கியுள்ளது. நவீன வடிவில் இந்திக்கு எதிரான குரல் நாளுக்கு நாள் தமிழகத்தில் வலுவடைந்து வருகிறது. கைகளில் பதாகைகள் தாங்கி அடிவயிற்றில் இருந்து முழக்கம் எழுப்பி போராடியது அந்தக் காலம் என்றால், சொல்லவரும் கருத்தை தொழில்நுட்ப திட்பத்தால் வெளிப்படுத்தி அந்த தகவல் யாரை சென்றடைய வேண்டுமோ அவர்களை சென்றடைய வைப்பது இந்தக் காலம். தமிழ் எங்கள்…

Read More

ஆண்டாள் கோயிலில் துணை முதல்வர்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்கு நேற்று துணை முதல்வர் பன்னீர் செல்வம் வந்தார். தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் தலைமையில் பட்டர்கள் வரவேற்றனர். கோயில் பசு, யானை, குதிரைக்கு உணவு வழங்கினார். ஆண்டாள், வடபத்ரசயனர் சன்னதியில் தரிசித்தார். இதன்பின் செண்பக தோப்பு குலதெய்வ கோயிலான வனபேச்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். எம்.எல்.ஏ.,க்கள் சந்திரபிரபா, ராஜவர்மன் உடன் சென்றனர்.

Read More