பீகாரில் 3 கட்டங்களாக அக் 28, நவ. 3, 7-ல் வாக்குப் பதிவு! நவ.10-ல் வாக்கு எண்ணிக்கை!!

டெல்லி: பீகார் மாநில சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேர்தலில் நடைபெறு என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். மேலும் 3 கட்டங்களில் பதிவான மொத்த வாக்குகளும் நவம்பர் 10-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

பீகாரில் சட்டசபை பதவிக்காலம் நவம்பர் 29-ந் தேதி முடிவடைவதால் பொதுத்தேர்தல் நடத்தப்படுகிறது. மொத்தம் 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டசபைக்கு தேர்தல் நடைபெறுகிறது.

EC to likely announce Bihar Assembly election dates today

டெல்லியில் இன்று நண்பகல் 12.30 மணிக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 3 கட்டங்களாக பீகார் சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவித்தார். முதல் கட்ட் வாக்குப் பதிவு அக்டோபர் 28ந-ந் தேதி நடைபெறும்; 2-வது கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 3, 3-வது கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 7 ஆகிய தேதிகளில் நடைபெறும். 3 கட்டங்களில் பதிவான அனைத்து வாக்குகளும் நவம்பர் 10-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

2-வது கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் அக்.9 முதல் அக்.16 வரை நடைபெறும். மொத்தம் 94 தொகுதிகளுக்கு நவம்பர் 3-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். 3-வது கட்டமாக அக்டோபர் 13-ந் தேதி முதல் அக்டோபர் 20-ந் தேதி வரை வேட்புமனுத் தாக்கல் நடைபெறும். மொத்தம் 78 தொகுதிகளுக்கு நவம்பர் 7-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். இதனையடுத்து பீகாரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன..

Related posts

Leave a Comment