ஏழு தேர்வுக்கான ‘ரிசல்ட்’; டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

சென்னை : ‘குரூப் – 2’ உட்பட அரசு துறை பணிகளுக்கான ஏழு வகை தேர்வுகளின் முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘குரூப் – 2’ நேர்காணல் தேர்வு உள்ள பதவிகளில் 1334 காலியிடங்களை நிரப்ப 2019 பிப்ரவரி 23ல் போட்டி தேர்வு நடந்தது. இதில் 14 ஆயிரம் பேர் பங்கேற்றனர். தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் 19ல் நேர்காணல் நடத்தப்படும். தமிழக தகவல் தொழில்நுட்ப துறையில் உதவி கணினி ஆய்வாளர் பணியில் 60 பணியிடங்களை நிரப்ப 2019 ஏப்ரலில் தேர்வு நடந்தது. இதில் 14 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அவர்களின் மதிப்பெண் தரவரிசை வெளியிடப்பட்டு உள்ளது. கைத்தறி மற்றும் ஜவுளி துறையில் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு 19 காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு மற்றும்…

Read More

ஓட்டுச்சாவடி தேவை எனில் கருத்து

விருதுநகர் : ”மாவட்டத்தில் 1881 ஓட்டுச்சாவடிகள் உள்ள நிலையில் கூடுதலாக அமைப்பது குறித்து கட்சியினர் கருத்துக்கள் தெரிவிக்கலாம்,” என, கலெக்டர் கண்ணன் கூறினார். விருதுநகரில் நடந்த ஓட்டுச்சாவடி பகுப்பாய்வு பணிகள் தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் அவர் பேசியதாவது:2021 ஜன.1ஐ தகுதி நாளாக கொண்டு வாக்காளர் சரிபார்க்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக அனைத்து வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார் அலுவலகங்களில் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. தேசிய வாக்காளர் சேவை வசதி இணையத்திலும், ‘ஓட்டர் ஹெல்ப்லைன்’ என்ற செயலியிலும் சரிபார்த்து கொள்ளலாம், என்றார். எஸ்.பி.,பெருமாள், சப் கலெக்டர் தினேஷ்குமார் பங்கேற்றனர்.

Read More

மஞ்சக்கருவில்லா அதிசய முட்டை

காரியாபட்டி : காரியாபட்டி அருகே கடையில் விற்கபட்ட மஞ்சக்கருவில்லாத அதிசய முட்டை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதுகாரியாபட்டி அடுத்த வக்கணாங்குண்டு ஜெயவேல் பெட்டிக்கடையில் தினமும் முட்டை அவித்து மிளகுப்பொடி, காரப் பொடி துாவி விற்பனை செய்வது வழக்கம். அப்படி முட்டை அவித்து இரண்டாக வெட்டியபோது மஞ்சக்கரு இல்லாமல் வெறுமனே வெள்ளைக்கருவாகவே இருந்தது. இதை அக்கிராமத்தினர் ஆச்சரியமாகவும் பார்த்தனர்.கடை உரிமையாளர் ஜெயவேல்: முட்டை அவித்து விற்பனை செய்து வருவேன். ஒரு முட்டையை வெட்டிய போது மஞ்சக்கரு இல்லாமல் இருந்தது. என் வாழ் நாளில் இதுபோன்று முட்டையை பார்த்ததில்லை. அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது,என்றார்.

Read More

கேரளா செல்லும் காளவாசல் சுண்ணாம்பு

விருதுநகர் : கட்டுமானத்தின் ஸ்திரத்தன்மையை உறுதிபடுத்தும் விருதுநகர் காளவாசல் சுண்ணாம்புக்கு கேரள கட்டுமான பொறியாளர்கள் மத்தியில் மவுசு அதிகரிக்க வியாபாரிகள் அதிகம் வாங்கி செல்கின்றனர். விருதுநகர் அருகே புளியங்குளம் பகுதியில் மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் சுண்ணாம்பு கட்டிகளை தொழிலாளர்கள் சேகரிக்கின்றனர். அவற்றுடன் அடுப்புக்கறியை கலந்து சுண்ணாம்பு சூளையில் ஐந்து மணி நேரம் வேக வைக்கின்றனர். கொதிக்கும் சுண்ணாம்பு கட்டிகளை சூளையில் இருந்து எடுத்து தரையில் கொட்டி தண்ணீர் தெளிக்கின்றனர். அப்போது சுண்ணாம்பு கட்டிகள் நுரை பொங்கி உடைந்து துாள் துாளாகிறது.அவற்றை சுத்தியலால் உடைத்து இரும்பு சல்லடையில் கொட்டி சலித்து சுண்ணாம்பு பவுடராக்குகின்றனர். 30 கிலோ சிப்பம் ரூ.120க்கு விற்கின்றனர். ஏஜன்ட்டுகள் மூலம் காளவாசல் சுண்ணாம்பு மூடைகள் கேரளாவிற்கு பெருமளவு செல்கிறது.

Read More

பள்ளியில் மின்னொளி மைதானம் திறப்பு…

வத்திராயிருப்பு : விருதுநகர் மாவட்ட கைப்பந்து கழகத்தின் சார்பில் வத்திராயிருப்பு ஹிந்து மேல்நிலைப் பள்ளி வாலிபால் மைதானத்தில் அமைக்கப்பட்ட மின் கோபுரங்கள் துவக்க விழா, நவீனப்படுத்தப்பட்ட மின்னொளி மைதான திறப்பு விழா நடந்தது. பள்ளி முன்னாள் செயலாளர் சீதாராமன் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் ராஜசேகரன் வரவேற்றார். மாவட்ட கைப்பந்து கழக தலைவர் துரைசிங் திறந்து வைத்தார். செயலாளர் செல்வகணேஷ் புதிய மின் கோபுரங்களை இயக்கினார். கைப்பந்து கழக தலைமை செயலாளர் பொன்னியின் செல்வன், பொருளாளர் விநாயகமூர்த்தி பேசினர். பள்ளி உறுப்பினர்கள் அரிகரசுப்ரமணியம், விஜயா நிர்வாகிகள் கலந்து கொண்டனர். உடற்கல்வி ஆசிரியர்கள் ராம்சுந்தர் பாலசுப்பிரமணி ஏற்பாடு செய்தனர். ஆசிரியர் ராமசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Read More

தொண்டர்களை வசைபாடுவது தி.மு.க. கலாசாரம்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி காட்டம்

ராஜபாளையம்:தொண்டர்களை வசைபாடுவது தி.மு.க., கலாசாரம் , சகோதரர்களாக பேணுவது அ.தி.மு.க., கலாசாரம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். ராஜபாளையத்தில் அவர் கூறியதாவது: எம்.எல்.ஏ., என்ற முறையில் தி.மு.க.,வினரே கோரிக்கை விடுத்தாலும் அதை செய்து தருவது அ.தி.மு.க., அரசு.நாங்கள் செய்து முடித்த பின்னரே வெளியே சொல்வோம்.தி.மு.க., வோ நாங்கள் போராட்டம் செய்ததால் தான் பணிகள் நடைபெற்றது என கூறுகிறது. இது தவறு. தி.மு.க., கூட்டத்தில் தொண்டர் ஒருவர் ராசா வாழ்க என கூறியதற்கே அவர் நாயே என திட்டுகிறார். ஒழிக என்று கூறினால் என்ன செய்வார். தொண்டர்களை வசைபாடுவது தி.மு.க., கலாசாரம், என்றார்.

Read More

சசிகலா விரைவில் விடுதலையாவார்: சொல்கிறார் பா.ஜ., நயினார் நாகேந்திரன்

சிவகாசி:”சசிகலா விரைவில் விடுதலையாவார்,” என பா.ஜ., மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். சிவகாசியில் மேலும் அவர் கூறியதாவது:”பா.ஜ.,வும், அ.தி.மு.க.,வும் இரட்டை குழல் துப்பாக்கி போல் இணைந்து செயல்படு கின்றன. பா.ஜ., ஜெ.,வால் விரும்பிய கட்சி. இனி அமையும் அமைச்சரவையில் பா.ஜ., அங்கம் வகிக்கும். சசிகலா கட்சிக்கு வந்தால் கூட்டணியில் அங்கம் வகிப்பது குறித்து அகில இந்திய தலைவர்களின் முடிவுக்கு கட்டுப்படுவோம். தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும் வெற்றி பெறுவோம் என மாநில தலைவர் முருகன் கூறினாலும் கூட்டணியில் இல்லை என அவர் கூறவில்லை. தற்போது வரை அ.தி.மு.க.,வுடன் தான் கூட்டணியில் இருக்கிறோம். முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மோதல் போக்கை நாங்கள் சாதகமாக பயன்படுத்த மாட்டோம். இருவரும் இணைந்திருந்தால் தான் நல்லது. ஒத்த தலைமை, ஒத்த கருத்தோடு இருந்தால்தான் தொண்டர்கள் உற்சாகமாக செயல்படுவர். ரஜினி…

Read More