பி.ஓ.எஸ்., கருவிகளில் கைரேகை

விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் துறை சார்பில் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு மென்பொருள் பதிவேற்றம் செய்யப்பட்ட புதிய பி.ஓ.எஸ்., கருவிகளை கலெக்டர் கண்ணன் வழங்கினார். அப்ேபாது அவர் கூறியதாவது: முதற்கட்டமாக விருதுநகர் 109, சிவகாசி 147, திருச்சுழி 94 என 350 ரேஷன் கடைகளில் கைரேகை பதிவேற்றப்பட்டுள்ளது. கைரேகை பதிவை ஏற்காத பட்சத்தில் ஆதார் அட்டையை பயன்படுத்தி ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல் மூலம் அத்தியாவசிய பொருட்கள் பெற்று கொள்ளலாம், என்றார். டி.ஆர்.ஓ., மங்களராமசுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலர் கல்யாணக்குமார் பங்கேற்றனர்.

Read More

மார்க்கெட்டை செயல்படுத்துங்க

சிவகாசி : சிவகாசி அண்ணாதுரை காய்கறி மார்க்கெட்டை செயல்பாட்டுக்கு கொண்டு வர சிவகாசி வர்த்தகம் சங்கம் தலைவர் பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கலெக்டர் கண்ணனுக்கு அவர் அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:சிவகாசி அண்ணாதுரை காய்கறி மார்க்கெட் கடந்த 6 மாதங்களாக கொரோனா தொற்றால் இடம் மாற்றப்பட்டு காரனேசன் காலனி மற்றும் உழவர் சந்தையில் செயல்படுகிறது. காரனேசன் காலனி நான்கு ரோடு சந்திக்கும் இடம். போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளதால் நெரிசல் அதிகமாக உள்ளது. வியாபாரிகள் திறந்தவெளியில் வியாபாரம் செய்கிறார்கள். கழிப்பறை, குடிநீர் வசதி இல்லை. தீபாவளி உள்ளிட்ட விழாக்கள் வரும் காரணத்தால் வியாபாரம் அதிகளவில் நடைபெறும். இதை கருதி அண்ணாதுரை காய்கறி மார்க்கெட்டை இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,என குறிப்பிட்டுள்ளார்.

Read More

பட்டாசு வியாபாரத்தை பெருக்குங்க

சிவகாசி : பட்டாசு வியாபாரத்தை பெருக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க காங்.,எம்.பி., மாணிக்கம் தாகூர் வலியுறுத்தி உள்ளார். ரூ. 80 ஆயிரம் கோடியில் சீன பட்டாசுகள் வியாபாரத்தில் உள்ள நிலையில் ரூ. 20 ஆயிரம் கோடி மதிப்பிலான சிவகாசி பட்டாசுகளின் வியாபாரத்தை பெருக்க வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பட்டாசு விதிகளை அதிகாரிகள் முறையாக கையாளுகிறார்கள். பசுமை பட்டாசுகள் சிவகாசியில் தாயரிக்கப்பட்டு இந்தியா முழுவதும் அனுப்படுவது நமக்கு பெருமையான விஷயம். ஊரடங்கால் மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்திருக்கிறது. தீபாவளி சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் மக்களிடம் பணப்புழக்கம் வேண்டும். மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்க மத்திய , மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,என்றார்.

Read More

மழையால் உற்பத்தியாகிறது ‘கொசு’க்கள் …தடுக்கலாமே

சிவகாசி : விருதுநகர் மாவட்டத்தில் பருவ மழை துவங்கிய நிலையில் நகர் மற்றும் கிராம பகுதிகளில் கழிவுநீர் செல்லும் ஓடை, சாக்கடை துார்வாரப்படாததால் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்திக்கு துணைபோகிறது . இதை தடுக்க கொசுப்புழு ஒழிப்புணியை தற்போதே துவங்க வேண்டும்.மாவட்டத்தில் நகர் மற்றும் கிராம பகுதிகளில் மழைநீர், வீட்டுக் கழிவுநீர் வெளியேறுவதற்காக ஓடை மற்றும் தெருக்களில் சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இவைகள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. ஓடைகளில் முட்புதர்களும், கோரைப்புற்களும் நிறைந்து தண்ணீர் ஓட்டத்தை தடுக்கிறது. நாளடைவில் அந்த தண்ணீர் கழிவுநீராக மாறிவிடுகிறது. இதனால் அதிகளவில் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது. பாலிதீன் கவர் உள்ளிட்ட பொருட்கள் ஓடையில் வீசப்படுதால் தண்ணீர் முற்றிலும் அடைப்பட்டு விடுகிறது. இதில் அதிகளவில் கொசு உற்பத்தியாகிறது. இதன் மூலம் டெங்கு உள்ளிட்ட நோய்கள் எளிதாக பரவ வாய்ப்புள்ளது.தெருக்களில் உள்ள சாக்கடை…

Read More

40 ஆண்டுக்கு பின் புதிய ரோடு

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி – ராமசாமிபுரம் வரையிலான ஒரு கி.மீ., துாரமுள்ள ரோடு தினமலர் செய்தி எதிரொலியால் 40 ஆண்டுகளுக்கு பின் போடப்பட்டது. பள்ளம் மேடாக மக்களுக்கு பயன் இன்றி காணப்பட்ட இந்த ரோடு தொடர்பாக தினமலர் நாளிதழில் அவ்வப்போது தொடர்ந்து செய்தி வெளியானது. இதையடுத்து ரோடு அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான டெண்டரும் 2019 டிசம்பரில் விடப்பட்டது. டெண்டர் விட்டு பல மாதங்கள் ஆகியும் பணி துவங்கவில்லை. இதுகுறித்தும் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதைதொடர்ந்து இயந்திரங்கள் மூலம் ரோடு அமைக்கும் பணி துவங்கியது. தினமலர் செய்தியால்தான் 40 ஆண்டுகளுக்கு பிறகு ரோடு வந்தது என கஞ்சநாயக்கன்பட்டி மக்கள் நன்றி கூறினர்.

Read More

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்

புதுடில்லி : மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சி நிறுவனருமான ராம் விலாஸ் பஸ்வான், 74, உடல்நலக் குறைவால், இன்று இரவு காலமானார். மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், உடல் நலக்குறைவால், டில்லியில் உள்ள மருத்துவமனையில் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு, இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், பஸ்வான் உயிரிழந்ததாக, அவரது மகனும், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான சிராக் பஸ்வான், சமூக வலை தளத்தில் தெரிவித்தார்.

Read More