திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கண்டனம்

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரை மத்திய அரசு ரத்து செய்திருப்பது கண்டனத்திற்குரியது- திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கண்டனம்

Read More

டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை தகவல்

40 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில், தமிழகத்தில் ட்ரோன் நிறுவனம் உருவாக்கப்படலாம்: டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை தகவல்

Read More

அரையாண்டு தேர்வு இந்தாண்டு கிடையாது!

சென்னை :”தமிழகத்தில், பள்ளிகளை திறக்க முடியாத சூழல் நீடிப்பதால், இந்தாண்டுக்கான அரையாண்டு தேர்வுகள் கிடையாது,” என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்று பிரச்னையால், இந்த ஆண்டு மார்ச்சில் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. நோய் தொற்று காரணமாக, மார்ச்சில் நடக்கவிருந்த, பத்தாம் வகுப்பு பொது தேர்வும் ரத்து செய்யப்பட்டது. ஒன்றாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, ‘ஆல் பாஸ்’ என, அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. பிளஸ் 1 பொதுத் தேர்விலும், ஒரு பாடத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, தேர்ச்சி வழங்கப்பட்டது. இந்நிலையில், புதிய கல்வி ஆண்டு துவங்கிய பின்பும், பள்ளிகளை திறக்க, தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. அதனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படவில்லை. தனியார் பள்ளிகளில் மட்டும், ‘ஆன்லைன்’ வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதன்…

Read More

ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் ஓய்வு ஊழியர், கான்ட்ராக்டரிடம் சிக்கியது பணம்

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம்ஸ்ரீவில்லிபுத்துார் ஊரகவளர்ச்சி முகமை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், ஓய்வு ஊழியர் மற்றும் கான்ட்ராக்டரிடமிருந்த ரூ.39 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் மடவார்வளாகத்தில் உள்ள இந்த அலுவலகத்தில் உதவி இயக்குனர் சிவகாமி, உதவி செயற்பொறியாளர் மகேஸ்வரி மற்றும் 2 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். வெம்பக்கோட்டை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு ஒன்றியங்களில் நடக்கும் பணிகளுக்கு கான்ட்ராக்டர்களுக்கு வழங்கும் பில்தொகைக்கு லஞ்சம் பெறப்படுவதாக, மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசிற்கு தகவல் கிடைத்தது. கடந்த சில நாட்களாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணித்து வந்தனர். நேற்று மதியம் 2:00 மணிக்கு டி.எஸ்.பி.,கருப்பையா, இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையிலான போலீசார், அலுவலகத்தில் நிறுத்தி வைக்கபட்டிருந்த கார், ஜீப், டூவீலர்கள் , அலுவலகத்தின் பல்வேறு அறைகளில் சோதனை நடத்தினர். ஓய்வு பெற்ற, அலுவலக உதவியாளர் அழகுமுத்து டூவீலரில்…

Read More

நொறுங்கிய எலும்புகள் ஒட்டவைப்பு : அருப்புக்கோட்டை அரசு டாக்டர்கள் சாதனை

அருப்புக்கோட்டை:விபத்தில் மூட்டு எலும்புகள் நொறுங்கிய நிலையில் அறுவை சிகிச்சையின்றி நவீன கருவி மூலம், எலும்புகளை ஒரு மணி நேரத்தில் ஒட்டவைத்து அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புளியம்பட்டி பகுதியை சேர்ந்த கட்டட தொழிலாளி அய்யாத்துரை 34. பத்து நாட்கள் முன்பு கோவில்பட்டியில் கட்டட பணியில் ஈடுபட்டபோது மின்சாரம் தாக்கி விழுந்ததில் வலது தோள்பட்டை, மூட்டு பகுதி எலும்புகள் நொறுங்கின. தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட இவர் 4 நாட்களுக்கு முன்பு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இங்குள்ள நவீன கருவி மூலம் அவரது உடைந்த எலும்புகளை ஒட்ட டாக்டர்கள் முடிவு செய்தனர். மருத்துவ அதிகாரி டாக்டர் வடிவேல் ஆலோசனையின்படி டாக்டர்கள் அருணாச்சலம், சோமமூர்த்தி நாகராஜன் ஆகியோர் சி-ஏ.ஆர்.எம்.,’ கருவி மூலம் நொறுங்கிய மூட்டு எலும்புகளை ஒட்ட வைத்தனர். அறுவை சிகிச்சையின்றி…

Read More