மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன்:அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பரபரப்பு பேச்சு

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராஜவர்மன் எம்.எல்.ஏ. (அ.தி.மு.க.) பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது:-இந்த ஆட்சி நீடிக்குமா என்று நினைத்த எதிர்க்கட்சியினர் மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் இரட்டை குழல் துப்பாக்கியாக ஆட்சியையும், கட்சியையும் வழிநடத்தி வருகின்றனர். சாத்தூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த எதிர்க்கோட்டை சுப்பிரமணியம் மாற்று முகாம் சென்றார். அவர் மாற்று முகாம் போகக் கூடிய அளவிற்கு தள்ளப்பட்டார். அந்த அளவிற்கு இடைஞ்சல் இருந்தது. கட்சிக்கு துரோகம் செய்ய வேண்டும் என்று நினைத்து அவர் செல்லவில்லை. அவருடைய செயல்பாட்டை முடக்கினார்கள். அதனால் அவர் மாற்று முகாம் சென்றார். இதனால் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்து இடைத்தேர்தலை இந்த தொகுதி சந்திக்க நேர்ந்தது. அந்த இடைத்தேர்தலில் நான் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக…

Read More

ஸ்ரீவில்லிபுத்தூரில் வட்டாட்சியா் அலுவலகம் முன் கிராம மக்கள் தா்ணா

மகளிா் சுகாதார வளாகம் அமைத்துத் தரக்கோரி ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு கிராம மக்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள இடையன்குளம் கிராமத்தில் சுகாதார வளாகம் கட்டுவதற்கான இடத்தை அதே கிராமத்தைச் சோ்ந்த சிலா் ஆக்கிரமித்து உள்ளனா். அந்த ஆக்கிரமிப்பை அகற்றி மகளிா் சுகாதார வளாகம் அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி அக்கிராமத்தைச் சோ்ந்த கிராம மக்கள் ஊராட்சித் தலைவா் சந்தனமாரி தலைமையில் ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து அவா்கள் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி வட்டாட்சியா் சரவணனிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

Read More

மின்வாரிய தொழிலாளர்கள் போராட்டம் : மின்வாரிய பணிகள் பாதிப்பு

விருதுநகர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டுநடவடிக்கைக் குழு சார்பில் ஆதிமூலம் தலைமையில் முன்பாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து களப்பிரிவு பணியாளர்கள், வயர்மேன், போர்மென், அலுவலக பணியாளர்கள், ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் பங்கேற்றனர். களப்பிரிவில் காலியாக உள்ள ஹெல்பர், வயர்மேன் உள்ளிட்ட காலியிடங்களை காண்ட்டிராக்ட் முறையில் ஒப்பந்தகாரர்கள் மூலம் செய்ய டிச.16ல் அரசு உத்தரவிட்டது. உபமின்நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களையும் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த உத்தரவிட்டுள்ளது. இரு உத்தரவுகளையும் ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட கூட்டுநடவடிக்கை குழு நிர்வாகிகள் கூறுகையில், மின்வாரிய காலியிடங்களுக்கு ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட 15 ஆயிரம் கேங்க் மேன்கள், ஒப்பந்த தொழிலாளர்களை பணிநியமனம் செய்யவில்லை. 2,900 ஐடிஐ தொழிலாளர்களை பணியமர்த்தவில்லை. 1,300 அசர்களை எடுக்கவில்லை.…

Read More

சிவகாசி தொகுதியில் மினி கிளினிக் திறப்பு

விருதுநகர் மாவட்டத்தில் 73 முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகள் துவங்குவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுக்கிரவார்பட்டி, கங்காகுளம், வேண்டுராயபுரம், பள்ளபட்டி, அய்யனார் காலனி, பெரிய பொட்டல்பட்டி மற்றும் மம்சாபுரம் ஆகிய 7 இடங்களிலும் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டது. மினி கிளினிக்கை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார். மாவட்ட கலெக்டர் கண்ணன் தலைமை வகித்தார். அதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு பரிசோதனை முறை, கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படுகிற ஊட்டச்சத்து இணை உணவுகளை பார்வையிட்டு மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு தாய்சேய் நல ஊட்டச்சத்து பெட்டகத்தை அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) மரு.மனோகரன், துணை இயக்குநர்கள் (சுகாதாரப்பணிகள்) மரு.ராம்கணேஷ் (சிவகாசி), மரு.பழனிச்சாமி (விருதுநகர்) விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ரவிச்சந்திரன் சிவகாசி ஒன்றிய கழகச் செயலாளர்கள் புதுப்பட்டி…

Read More

விசாரணை நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை-திமுக தலைவர் ஸ்டாலின் #MKStalin || #DMK

அதிமுக அமைச்சரவை மீதான 97 பக்க ஊழல் புகார் அடங்கிய மனுவை ஆளுநரிடம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒப்படைக்கப்பட்டது.அதிமுகவினர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்

Read More

Rajapalayam News

இராஜபாளையம் தொகுதி இளந்திரைகொண்டான் ஊராட்சி பஞ்சம்பட்டி கிராமத்தில் சமுதாய கழிப்பறை திட்டத்தின் கீழ் 5.25 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கழிப்பறை அமைப்பதற்கு திரு.S.தங்கப்பாண்டியன் MLA அவர்கள் தலைமையில் ஒன்றிய சேர்மன் G.சிங்கராஜ் அவர்கள் முன்னிலையில் பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Read More

விருதுநகரில் நேற்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்

மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்காலும், அதற்கு துணை போகும் அதிமுகஅரசாலும், பொது மக்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சமையல் எரிவாயுவின் விலை நிலையற்று நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.இவ்விலை உயர்வை கண்டித்து விருதுநகர் மாவட்ட திமுக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பாக விருதுநகரில் நேற்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்

Read More