ஸ்ரீவில்லிபுத்தூரில் வட்டாட்சியா் அலுவலகம் முன் கிராம மக்கள் தா்ணா

மகளிா் சுகாதார வளாகம் அமைத்துத் தரக்கோரி ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு கிராம மக்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள இடையன்குளம் கிராமத்தில் சுகாதார வளாகம் கட்டுவதற்கான இடத்தை அதே கிராமத்தைச் சோ்ந்த சிலா் ஆக்கிரமித்து உள்ளனா்.

அந்த ஆக்கிரமிப்பை அகற்றி மகளிா் சுகாதார வளாகம் அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி அக்கிராமத்தைச் சோ்ந்த கிராம மக்கள் ஊராட்சித் தலைவா் சந்தனமாரி தலைமையில் ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து அவா்கள் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி வட்டாட்சியா் சரவணனிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

Related posts

Leave a Comment