ஆஸ்திரேலியா,அமெரிக்காவில் மிரட்ட போகும் மாஸ்டர்..!

தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்த நிலையில் ஜனவரி 13ம் தேதி பொங்கலுக்கு வெளியாகும் இளைய தளபதியும், நடிகருமான விஜய்யின் நடிப்பில் உருவான மாஸ்டர் படத்தில் , விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். தமிழகத்தில் மட்டுமல்ல ஜனவரி 13ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. கொரோனாவால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக சுமார் பத்து மாத இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் முதல் பெரிய திரைப்படம் மாஸ்டர். வெளிநாடுகளை பொறுத்தவரை அமெரிக்காவில் இதுவரையில் சுமார் 100 தியேட்டர்கள் வரையில் ‘மாஸ்டர்’ படத்தை வெளியிட உறுதி செய்துள்ளன. ஆஸ்திரேலியாவில் சுமார் 70 தியேட்டர்கள் வரையில் இப்படத்தை வெளியிட உறுதி செய்துள்ளன. அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் இன்னும் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 60 ஆயிரத்து 786 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16,385 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் 16,049 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 2,660 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. மாவட்டத்தில் நேற்று மேலும் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,399ஆக உயர்ந்துள்ளது. 107 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை. 996 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 2,600-க்கும் மேற்பட்டோரின் மருத்துவ பரிசோதனை முடிவுகளை தெரிவிக்காத நிலையில் உள்ளது. தொடர்ந்து மாவட்டத்தில் பரிசோதனை முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில் அதனை விரைவுபடுத்த மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலை உள்ளது. இதனால் நோய் பரவல்…

Read More

தாமதம் இன்றி முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை : சாத்தூர் எம்.எல்.ஏ. உறுதி

ராஜபாளையம் அருகே உள்ள மலையடிப்பட்டியில் தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என்ற தலைப்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கப்பாண்டியன், ஊராட்சி ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கூறியதாவது:- சட்டமன்ற உறுப்பினராக தங்கப்பாண்டியன் பொறுப்பேற்ற பிறகு தான் ராஜபாளையம் பகுதியில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டது. சத்திரப்பட்டி சாலையில் போக்குவரத்து தாமதத்தை சரி செய்ய ெரயில்வே மேம்பாலம் திட்டம் கொண்டு வரப்பட்டது. நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மேம்பாட்டு பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் விரைவில் சீரமைப்பு செய்யப்படும். அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்று உள்ளது. இந்தநிலை மாற வேண்டும்…

Read More

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மருத்துவமுகாம்

இந்திய இயற்கை மருத்துவ சங்கம் மற்றும் சிவகாசி இன்னா்வீல் சங்கம் இணைந்து சிவகாசியில் திங்கள்கிழமை காதுகேளாதோா் மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மருத்துவமுகாம்னை நடத்தினா். முகாமினை இன்னா்வீல் சங்கத்தலைவா் பிரபாவதி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். இதில் 98 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவா் தமயந்தி, அபிநயா, அனந்ததேவி உள்ளிட்டோா் பரிசோதனை செய்தனா். ரத்த அழுத்தம், ரத்தத்தில் சா்க்கரை அளவு, இ.சி.ஜி.உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு, இலவச மருந்து, மாத்திரை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. முன்னதாக இன்னா் வீல் சங்க செயலாளா் அஞ்சாதேவி வரவேற்றாா். திட்ட ஒருங்கிணைப்பாளா் செல்வி நன்றி கூறினாா்.

Read More

HBD Kanimozhi

திமுக மகளிரணி செயலாளர் திருமதி.கனிமொழி அவர்கள் தனது பிறந்தநாளை முன்னிட்டு தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Read More

#BorisJohnson | #CoronaVirus

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்த பிரிட்டன் பிரதமரின் இந்திய பயணம் ரத்து பிரிட்டனில் உருமாறிய கொரோனா பரவிவரும் சூழலில் இந்திய பயணத்தை ரத்து செய்தார் போரிஸ் ஜான்சன்

Read More

HBD Kanimozhi Akka

இன்று பிறந்த நாள் விழா காணும் பெண்ணுரிமை போராளி திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநில மகளிரணி செயலாளர் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு .திருமதி.#கனிமொழி M.P அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் இவண்: கோஸ்குண்டு சாத்தூர் திரு.S.V.சீனிவாசன் B.Com அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகம், சாத்தூர் சட்டமன்ற தொகுதி #DMK #திமுக #Sattur_DMk #DMK_Sattur #HBDKanimozhi www.svssattur.in

Read More