ஆஸ்திரேலியா,அமெரிக்காவில் மிரட்ட போகும் மாஸ்டர்..!

தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்த நிலையில் ஜனவரி 13ம் தேதி பொங்கலுக்கு வெளியாகும் இளைய தளபதியும், நடிகருமான விஜய்யின் நடிப்பில் உருவான மாஸ்டர் படத்தில் , விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். தமிழகத்தில் மட்டுமல்ல ஜனவரி 13ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

கொரோனாவால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக சுமார் பத்து மாத இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் முதல் பெரிய திரைப்படம் மாஸ்டர். வெளிநாடுகளை பொறுத்தவரை அமெரிக்காவில் இதுவரையில் சுமார் 100 தியேட்டர்கள் வரையில் ‘மாஸ்டர்’ படத்தை வெளியிட உறுதி செய்துள்ளன.

ஆஸ்திரேலியாவில் சுமார் 70 தியேட்டர்கள் வரையில் இப்படத்தை வெளியிட உறுதி செய்துள்ளன. அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் இன்னும் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment