அவர் எங்கே?.. ஏன் இன்னும் உள்ளே வரவில்லை.. ரஹானேவால் குழம்பி போன ஆஸி.. பரபரக்கும் சிட்னி களம்!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரஹானே ஓவர் கொடுக்கும் விதம் மிகவும் சிறப்பாக உள்ளது. ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான மூன்றாவது டெஸ்டில் தற்போது நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரில் முன்னிலை பெற இந்திய அணி திட்டமிட்டுள்ளது.

ஆனால் இந்த போட்டி மழை காரணமாக தடைபட்டது. கடந்த 4 மணி நேரமாக மழை காரணமாக ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது மழைக்கு பின் மீண்டும் ஆட்டம் தொடங்கி நடந்து வருகிறது.

ஓவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரஹானே ஓவர் கொடுக்கும் விதம் மிகவும் சிறப்பாக உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே ரஹானே ஓவர் கொடுத்த விதம் சிறப்பாக இருந்தது. சிராஜுக்கு மிகவும் தாமதமாக ஓவர் கொடுத்து, அஸ்வினுக்கு 11வது ஓவரை வீச ரஹானே வாய்ப்பு கொடுத்தார்.

உதவியது சென்ற போட்டியில் ரஹானே இப்படி ஓவர் கொடுத்த விதம் பெரிய அளவில் வைரலானது. அதிலும் சிராஜ் உணவு இடைவேளைக்கு பின்தான் பவுலிங் செய்தார். இதன் மூலம் சிராஜ் விக்கெட் எடுக்க வசதியான சூழ்நிலை இருந்தது. தற்போது மூன்றாவது போட்டியிலும் ரஹானே இதேபோல் ஓவர் ரொட்டேஷனில் மாற்றம் செய்து வருகிறார்.

சிறப்பு அதன்படி இன்று தொடக்கத்திலேயே சிராஜுக்கு ரஹானே ஓவர் கொடுத்துள்ளார். இதன் மூலம் சிராஜ் புதிய பந்தில் விக்கெட் எடுத்தார். இன்னொரு பக்கம் 14வது ஓவரை வீச ரஹானே அஸ்வினை அழைத்தார். ஆனால் முதல் 20 ஓவர்களை இன்று சைனி வீசவே இல்லை. இதுதான் சைனிக்கு முதல் போட்டி.

ஆனால் இல்லை ஆனால் சைனியை தொடக்கத்தில் ரஹானே பயன்படுத்தவே இல்லை. பந்து நன்றாக தேயட்டும், அதுவரை சைனியை இறக்க வேண்டாம் என்பதில் ரஹானே உறுதியாக இருந்தார். ரஹானேவின் இந்த திட்டம் ஆஸி. பேட்ஸ்மேன்களுக்கு குழப்பாக இருந்தது .

குழப்பம் ஏனென்றால் சைனி அதிக வேகத்தில் வீசினாலும் ரன் கொடுப்பார். அதிலும் புதிய பந்தில் சைனி அதிகம் ரன் கொடுப்பார். இதனால் சைனியை எதிர்பார்த்து ஆஸி. பேட்ஸ்மேன்கள் காத்து இருந்தனர். ஆனால் ரஹானே சைனியை களமிறக்காமல் ஆஸி.க்கு ஆட்டம் காட்டி வருகிறார்.

Related posts

Leave a Comment