கட்டுப்படுத்துங்க: ரோட்டில் திரியும் மாடுகளால் விபத்துக்கள் உரிமையாளர்கள் மீது தேவை நடவடிக்கைட்டில் திரியும் மாடுகளால் விபத்துக்கள் உரிமையாளர்கள் மீது தேவை நடவடிக்கை

ராஜபாளையம்: மாவட்டத்தில் போக்குவரத்து நிறைந்த ரோடுகளில் மாடுகள் திரிவதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். உரிமையாளர்கள் மீது நடவடிக்கை,கால்நடைகள் வளர்ப்பதை முறைப்படுத்தாத அதிகாரிகளால் இப்பிரச்னைகள் தொடர்கிறது.தடையற்ற போக்குவரத்திற்காக உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் விதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன் படி ரோட்டில் கால்நடைகள் திரிய விடாமல் அதற்கான பட்டிகள் மற்றும் கொட்டைகளில் அடைத்து வைத்து பராமரிக்க வேண்டும். இந்நிலையில் கேட்பாரற்று திரியும் மாடுகள் மெயின் ரோட்டின் போக்குவரத்திற்கு சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப நிலத்தின் மதிப்பு கூடியதால் கால் நடைகளுக்கு என ஒதுக்கப்பட்டிருந்த இடங்கள் குடியிருப்பு பகுதிகளாக மாறி விட்டன. அரசு சார்பில் இலவச கறவை மாடுகள், ஆடுகள் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலானவர்கள் இவற்றை இடப்பற்றாக்குறை மற்றும் தீவன செலவுகளை கணக்கிட்டு வெளியே மேய விடுகின்றனர். பால் கறக்கும் நேரத்தில் மட்டும் பிடித்து வருகின்றனர்.அதன்பின்…

Read More

12 ஆண்டுகளுக்கு பின் கண்மாயில் மறுகால்: மகிழ்ச்சியில் ஸ்ரீவி., விவசாயிகள்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பெரியகுளம் கண்மாய் 12 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி மறுகால் விழுந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்தமழையால் செண்பகதோப்பு பேயனாறு ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டு மம்சாபுரம் கண்மாய்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டது.பொங்கலுக்கு முதல்நாள் பெய்த கனமழையால் கண்மாய்கள் நிரம்பி வழிந்த தண்ணீர், பெரியகுளம் கண்மாய்க்கு வரத்துவங்கியது. நேற்று முன்தினம் காலையில் நிரம்பிய நிலையில் தொடர் நீர்வரத்தால் இரவில் மறுகால் விழுந்தது.12 ஆண்டுகளுக்கு பிறகு பெரியகுளம் கண்மாய் நிரம்பி மறுகால் விழுந்ததை ஸ்ரீவில்லிபுத்துார் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். கண்மாய் நிரம்பியதால் ஆயிரம் ஏக்கர் விவசாயநிலங்கள் பயனடையும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Read More

தொடர் மழையால் அழுகியது மல்லி, சூரியகாந்தி ; விரக்தியில் விவசாயிகள்

அருப்புக்கோட்டை: தொடர் மழையின் காரணமாக மல்லி, சூரியகாந்தி உள்ளிட்ட விவசாய பயிர்கள் அனைத்தும் பாழாகி விட்டதால் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.10 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையில் அருப்புக்கோட்டை, பெரிய மற்றும் சின்ன புளியம்பட்டி, அம்பல தேவநத்தம் மற்றும் சுற்றுகிராமங்களில் மல்லி , சூரியகாந்தி, கம்பு, சோளம், பருத்தி பயிர்கள் 6 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டன.அறுவடை செய்யும் நேரத்தில் நிலங்களில் தண்ணீர் தேங்கி மல்லி செடி அழுகி சாய்ந்து விட்டது. காயக்கின்ற பருவத்தில் சூரிய காந்தி காய்கள் கருகி விட்டன. சோளம் கருகி கதிர்களிலே முளை விட்டுள்ளது. பருத்தி செடிகளும் கருகி விட்டன. பாதிப்பை உணர்ந்து செய்வதறியாது விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Read More

7 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம்: இன்று துவக்கம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ஏழு மையங்களில் கொரோனா தொற்று தடுப்புக்கான கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று துவங்குகிறது.மாவட்டத்தில் முன்கள பணியாளர்கள், செவிலியர்கள், டாக்டர்கள் என 9720 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தும் முகாம் விருதுநகர், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை , திருச்சுழி எம்.ரெட்டியபட்டி ஆரம்ப சுகாதார நிலையம், சிவகாசி, ராஜபாளையம்அரசு மருத்துவமனைகள், எம்.புதுப்பட்டி, குன்னுார் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்று துவக்கப்படுகிறது.விருதுநகர் அரசு மருத்துவமனையில் காலை 10:30 மணிக்கு கலெக்டர் கண்ணன் தலைமையில் முகாம் துவக்கப்படுகிறது.தினமும் தலா 100 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மதுரை மருந்து கோடவுனிலிருந்துகோவிஷீல்டு தடுப்பூசி பெட்டகம் விருதுநகர் மருந்து கோடவுனுக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. கோடவுனுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Read More

அணை பகுதிகளில் மழை அர்ச்சுனா நதியில் காட்டாற்று வெள்ளம்

விருதுநகர்: மாவட்டத்தில் நேற்றும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்தது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அர்ச்சுனாநதியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரைகளில் வசிப்போர் மேடான பகுதிக்கு இடம் பெயர்ந்தனர்.மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை அக்., 27 ல் துவங்கி தொடர்ந்து பெய்து வருகிறது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் இறுதி வரை நீடிக்கும் வடகிழக்கு பருவமழை தற்போது ஜனவரியை கடந்தும் பெய்து வருகிறது. ஜன.,13 பகல் முதல் இரவு என விடிய விடிய பெய்த மழை நேற்று முன்தினம் காலை வரை நீடித்தது. மாவட்டம் முழுவதும் நேற்றும் பரவலாக மழை பெய்தது. மழை தொடரும் என வானிலை ஆய்வு மையமும் அறிவித்துள்ளது.அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. அர்ச்சுனாநதியில்…

Read More

சிட்டிஸ்போர்ட்ஸ் … ஸ்ரீவி.,யில் இளவட்டக்கல் போட்டி

ஸ்ரீவில்லிபுத்தூர்,ஜன.16-ஸ்ரீ வில்லிபுத்தூரில் மாட்டு பொங்கலை முன்னிட்டு சமுதாய நல்லிணக்க பேரவை மற்றும் சேவாபாரதி அமைப்பின் சார்பில் இளவட்டக்கல் துாக்கும் போட்டி மங்காபுரம் பள்ளி மைதானத்தில் நடந்தது. மகாஜன சங்க துணை த்தலைவர் ஜெயராஜ் தலைமை வகித்தார். கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். சிவலிங்கம், சங்கரலிங்கம் போட்டிகளை துவக்கி வைத்தனர். ஆண், பெண், சிறுமிகள் உட்பட பலர் இளவட்டக்கல் துாக்கி பரிசுகளை வென்றனர். ஏற்பாடுகளை மாரிச்சாமி, மணிகண்டன், வெங்கடேஷ் செய்திருந்தனர்.

Read More

#Physicist #RohiniGodbole #OrdreNationalduMérite

பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் இயற்பியல் பிரிவில் பணியாற்றி வரும் பேராசிரியர் ரோகினி கோட்பலேவுக்கு ஃபிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான `ஆர்டரே நேஷனல் டி மெரிட்டே என்ற விருது கிடைத்துள்ளது

Read More

தமிழர் திருநாள் தைப்பொங்கலை முன்னிட்டு சந்தித்து வாழ்த்து

இன்று (15-01-21)தமிழர் திருநாள் தைப்பொங்கலை முன்னிட்டு சாத்தூர் சட்டமன்ற தொகுதி திரு.கோசுகுண்டு S.V.சீனிவாசன் B.Com அவர்கள் தலைமையில்விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் திரு. தங்கம் தென்னரசு B.E M.L.A அவர்களை மற்றும் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. அக்கா தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு வாழ்த்தும் பெற்றுக் கொண்டோம்.உடன் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் திரு.ஜெயப்பாண்டியன் அவர்கள் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு. கிருஷ்ணகுமார் அவர்கள் கழக நிர்வாகிகள்,கழக தொண்டர்கள், கலந்து கொண்டனர். #Happy_Pongal #SatturDMK #DMKSattur www.svssattur.in சாத்தூர் சட்டமன்ற தொகுதி திராவிட முன்னேற்றக் கழகம்

Read More

*DDHS VIRUTHUNAGAR*

1. விருதுநகர் அரசு மருத்துவமனை 2. அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை 3. திருச்சுழி வட்டாரம் எம்.ரெட்டியபட்டி *DDHS SIVAKASI* 4. சிவகாசி அரசு மருத்துவமனை 5. எம்.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் 6. குன்னூர் ஆரம்ப சுகாதார நிலையம் 7. இராஜபாளையம் அரசு மருத்துவமனைமேற்கண்ட 7 இடங்களில் கொரோனா தடுப்பூசி சுகாதார பணியாளர்களுக்கு காலை 9 மணியிலிருந்து போடப்படுகிறது. *நமது மாவட்டத்திற்கு மொத்தம் 9720 கொரோன தடுப்பூசி வரப்பெற்றுள்ளன. **ஓவ்வொரு மையத்தில் ஒரு நாளைக்கு 100 நபர்களுக்கு போடப்பட உள்ளது

Read More