அணை பகுதிகளில் மழை அர்ச்சுனா நதியில் காட்டாற்று வெள்ளம்

விருதுநகர்: மாவட்டத்தில் நேற்றும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்தது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அர்ச்சுனாநதியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரைகளில் வசிப்போர் மேடான பகுதிக்கு இடம் பெயர்ந்தனர்.மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை அக்., 27 ல் துவங்கி தொடர்ந்து பெய்து வருகிறது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் இறுதி வரை நீடிக்கும் வடகிழக்கு பருவமழை தற்போது ஜனவரியை கடந்தும் பெய்து வருகிறது. ஜன.,13 பகல் முதல் இரவு என விடிய விடிய பெய்த மழை நேற்று முன்தினம் காலை வரை நீடித்தது. மாவட்டம் முழுவதும் நேற்றும் பரவலாக மழை பெய்தது. மழை தொடரும் என வானிலை ஆய்வு மையமும் அறிவித்துள்ளது.அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. அர்ச்சுனாநதியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரைகளில் வசிப்போர் மேடான பகுதிக்கு இடம் பெயர்ந்தனர்.வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு, கான்சாபுரம் எஸ்..கொடிக்குளம் பகுதிகளில் தொடர் மழை மற்றும்பிளவக்கல் அணை தண்ணீர் திறந்துவிட்டதால் ஏற்பட்ட வெள்ளம் விவசாய விளைநிலங்களுக்கு புகுந்ததால் நெல் பயிர்கள் பாதிப்படைந்துள்ளன.கொடிக்குளம் பேரூராட்சி அலுவலகத்தை யொட்வடிய முஸ்லிம் தெருவில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.பிளவக்கல் அணை வெள்ளங்குடி ஆற்று பாலத்தில் உடைப்பு ஏற்ப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

Related posts

Leave a Comment