கட்டுப்படுத்துங்க: ரோட்டில் திரியும் மாடுகளால் விபத்துக்கள் உரிமையாளர்கள் மீது தேவை நடவடிக்கைட்டில் திரியும் மாடுகளால் விபத்துக்கள் உரிமையாளர்கள் மீது தேவை நடவடிக்கை

ராஜபாளையம்: மாவட்டத்தில் போக்குவரத்து நிறைந்த ரோடுகளில் மாடுகள் திரிவதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.

உரிமையாளர்கள் மீது நடவடிக்கை,கால்நடைகள் வளர்ப்பதை முறைப்படுத்தாத அதிகாரிகளால் இப்பிரச்னைகள் தொடர்கிறது.தடையற்ற போக்குவரத்திற்காக உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் விதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன் படி ரோட்டில் கால்நடைகள் திரிய விடாமல் அதற்கான பட்டிகள் மற்றும் கொட்டைகளில் அடைத்து வைத்து பராமரிக்க வேண்டும். இந்நிலையில் கேட்பாரற்று திரியும் மாடுகள் மெயின் ரோட்டின் போக்குவரத்திற்கு சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப நிலத்தின் மதிப்பு கூடியதால் கால் நடைகளுக்கு என ஒதுக்கப்பட்டிருந்த இடங்கள் குடியிருப்பு பகுதிகளாக மாறி விட்டன.

அரசு சார்பில் இலவச கறவை மாடுகள், ஆடுகள் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலானவர்கள் இவற்றை இடப்பற்றாக்குறை மற்றும் தீவன செலவுகளை கணக்கிட்டு வெளியே மேய விடுகின்றனர். பால் கறக்கும் நேரத்தில் மட்டும் பிடித்து வருகின்றனர்.அதன்பின் ரோட்டில் விட்டு விடுகின்றனர்.இப்பிரச்னை மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் தொடர்கிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த காலை ,மாலை, இரவில் ரோட்டில் நடமாடும் மாடுகளால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

மாடுகள்ரோட்டினை கடக்கும் போது வாகன ஓட்டிகள் அடிக்கும் ‘ஹார்ன்’ சப்தத்தில் மிரண்டு ஓடுகின்றன. இதனால் டூ வீலர் மற்றும் சைக்கிளில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.ஒரு சில மாடுகள் அப்படியே நின்று போக்குவரத்திற்கு இடையூறினை ஏற்படுத்துகிறது. தேசிய நெடுஞ்சாலை டிவைடர் அருகே சில மாடுகள் நிரந்தர தங்கும் இடமாக மாற்றியுள்ளது. இவை திடீரென குறுக்கே கடந்து உயிர்பலியை ஏற்படுத்துவதுடன் அவற்றிற்கும் பாதிப்புகளை ஏற்படுத்தி கொள்கிறது……………

Related posts

Leave a Comment