12 ஆண்டுகளுக்கு பின் கண்மாயில் மறுகால்: மகிழ்ச்சியில் ஸ்ரீவி., விவசாயிகள்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பெரியகுளம் கண்மாய் 12 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி மறுகால் விழுந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்தமழையால் செண்பகதோப்பு பேயனாறு ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டு மம்சாபுரம் கண்மாய்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டது.பொங்கலுக்கு முதல்நாள் பெய்த கனமழையால் கண்மாய்கள் நிரம்பி வழிந்த தண்ணீர், பெரியகுளம் கண்மாய்க்கு வரத்துவங்கியது. நேற்று முன்தினம் காலையில் நிரம்பிய நிலையில் தொடர் நீர்வரத்தால் இரவில் மறுகால் விழுந்தது.12 ஆண்டுகளுக்கு பிறகு பெரியகுளம் கண்மாய் நிரம்பி மறுகால் விழுந்ததை ஸ்ரீவில்லிபுத்துார் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். கண்மாய் நிரம்பியதால் ஆயிரம் ஏக்கர் விவசாயநிலங்கள் பயனடையும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Related posts

Leave a Comment