#Polio_Drops#PolioCamp#Today

ஆனையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ரிசர்வ் லயன் அரசு பள்ளியில் நாளை ஐந்து வயதுக்கு உட்ப்பட்ட குழந்தைகளுக்கு #போலியோசொட்டுமருந்துமுகாம் நடைபெறுகிறது அனைவரும் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். குழந்தைகள் நலனுக்காகஎன்றும் மக்கள் நலன் காக்கும் உழைத்துக் கொண்டிருக்கும் #ஆனையூர்முதல்நிலைஊராட்சிமன்ற தலைவர் லயன் கருப்பு என்ற #Vலட்சுமிநாராயணன் அவர்கள் #Polio_Drops#PolioCamp#Tomorrow

Read More

விருதுநகா் மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டி: ஸ்ரீவில்லிபுத்தூா் அணி வெற்றி

சிவகாசியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டியில் ஸ்ரீவில்லிபுத்தூா் கைப்பந்து கழக அணி வெற்றி பெற்றது. விருதுநகா் மாவட்டகைப்பந்துக் கழகம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் சிவகாசி கிரீன்ஆகியவை சாா்பில் வியாழக்கிழமை மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டிகள் சிவகாசியில் உள்ள ஜேஸீஸ் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றன. இப்போட்டிகளில் மாவட்டத்தைச் சோ்ந்த 12 அணிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டியில் ஸ்ரீவில்லிபுத்தூா் கைப்பந்து கழகமும், ஸ்ரீவில்லிபுத்தூா் டி.எஸ். ஹிந்து கிளப் அணியும் மோதின. இதில் 31-30 என்ற கோல் கணக்கில் ஸ்ரீவில்லிபுத்தூா் கைப்பந்து கழக அணி வெற்றி பெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட கைப் பந்துகழகத் தலைவா் சி. சண்முகநாதன் பரிசு வழங்கினாா். பரிசளிப்பு விழாவில் சுழற்சங்க உதவி மாவட்ட ஆளுநா் கே. செல்வமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாவட்ட கைப்பந்து கழக பொருளாளா் எஸ்.…

Read More

குடிநீா் வசதி கேட்டு பெண்கள் சாலை மறியல்

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை 9 ஆவது வாா்டைச் சோ்ந்த பெண்கள் குடிநீா் கேட்டு காலிக் குடங்களுடன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். அருப்புக்கோட்டையிலிருந்து திருச்சுழி செல்லும் சாலையில் சொக்கநாதசுவாமி கோவிலருகே உள்ள சாலையில் வெள்ளிக்கிழமை சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து, நகா் காவல் ஆய்வாளா் பாலமுருகன், போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் சரவணக்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Read More

சாலை பாதுகாப்பு முகாம்

சிவகாசி : சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவகம் சார்பில் சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன் தலைமை வகித்தார். அணில்குமார் கண் மருத்துவமனை டாக்டர் அணில்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் சிவகாசி போலீசார் சார்பில் சிவகாசி சார்பு நீதிமன்றம் முன்பு பொதுமக்களுக்கு ஹெல்மெட் மற்றும் சீல் பெல்ட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. நீதிபதிகள் கல்யாண மாரிமுத்து, சந்தனகுமார், எஸ்.ஐ., க்கள் ராமநாதன், கணேசன் கலந்து கொண்டனர்.

Read More

பள்ளி, கல்லுாரி செய்திகள்

மாணவிகளுக்கு விஞ்ஞானி விருதுஸ்ரீவில்லிபுத்துார் : பெருமாள்பட்டி காமராஜர் மெட்ரிக்., மேல்நிலைபள்ளி ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் முத்துமாரி, பவித்ரா . தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய தேசிய அறிவியல் மாநாட்டில் பங்கேற்று இளம்விஞ்ஞானிகள் விருதினை பெற்றனர். சாதனை மாணவிகள், ஆசிரியர்கள் கார்த்தீஸ்வரி, முருகேஸ்வரி, பொன்மணி, காளீஸ்வரி ஆகியோரை நாடார் உறவின்முறை நிர்வாகிகள் முப்புடாரி, சுந்தர், முத்துராஜ், பள்ளி நிர்வாகிகள் ஜோஸ்வா, பெரியசாமி, முதல்வர் ஆனந்தகீதா பாராட்டினர்………….திருவள்ளுவர் தின விழா விருதுநகர்:வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லுாரியில் எம்.எஸ்.பி.,கருப்பையா நாடார் அறக்கட்டளை சார்பில் திருவள்ளுவர் தின விழா நடந்தது. மானேஜிங் போர்டு தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். செயலாளர் நாராயணமூர்த்தி வரவேற்றார். செந்திக்குமார நாடார் கல்லுாரி மாரிராஜ் பேசினார். திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நிர்வாகி தியாகராஜன் பரிசு வழங்கினார். முதல்வர் ஜவஹர் நன்றி கூறினார்…………..பள்ளியில் பயிற்சி பட்டறைஸ்ரீவில்லிபுத்துார்…

Read More

பசுமை பணியில் இன்ஜினியரிங் சகோதரர்கள்

சிவகாசி : சிவகாசி அருகே கல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த சகோதரர்கள் அருண் 24, ஸ்ரீகாந்த் 21. இன்ஜினியர்களான இவர்கள் பசுமையான தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் விருதுநகர் மாவட்டம் முழுவதும் சென்று மரக்கன்றுகளை நட்டு வருகிறார்கள். இதற்காக அவர்கள் சைக்கிளிலே ஒவ்வொரு கிராமமாக செல்கிறார்கள். வீடுகளுக்கு கொடுப்பதோடு அவர்களே மரக்கன்றுகளை நடுகின்றனர்.மருத்துவமனை வளாகங்கள், பள்ளிகள், அரசு அலுவலகங்கள் என பல்வேறு இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். மக்களிடம் பசுமை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துகின்றனர்.பசுமை தமிழகம் உருவாக்குவதற்காக இந்தாண்டு விருதுநகர் மாவட்ட முழுவதும் சைக்கிளில் சென்று வீடுகளுக்கு மரக்கன்றுகள் வழங்க முடிவு செய்தனர். அதன்படி தங்களது சொந்த ஊரான கல்லமாநாயக்கன்பட்டியிலிருந்து சைக்கிளில் விழிப்புணர்வு பயணத்தை துவக்கி வீடுகளுக்கு மரக்கன்று வழங்கினர்.இவர்கள் கூறியதாவது: 2019 ல் கன்னியாகுமரியிலிருந்து மும்பை வரை சைக்கிளிலேயே சென்று பிளாஸ்டிக் பாதிப்பு பற்றி பள்ளி, கல்லுாரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.…

Read More

இன்றைய நிகழ்ச்சி (ஜன. 31)

ஆன்மிகம்சிறப்பு அலங்காரம், காலை 8:30 மணி, துர்கை பரமேஸ்வரி அம்மன் கோயில், சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 9:00 மணி, விஸ்வநாதர் கோயில் , சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 9:00 மணி, அக்னி விநாயகர் கோயில், சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 9:00 மணி, சிவபால விநாயகர் கோயில், திருத்தங்கல் ரோடு, சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 8:00 மணி, பெருமாள் கோயில், சிவகாசி.சிறப்பு அலங்காரம், காலை 9:00 மணி, நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல்.சிறப்பு பூஜை, காலை 6:30 மணி, ஸ்ரீ வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர்.சிறப்பு அலங்காரம், காலை 7:00 மணி ஸ்ரீ வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர்.விசேஷ தீபாராதனை, காலை 7:30 மணி, ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர்.சிறப்பு அலங்காரம், காலை 7:00 மணி, துள்ளு மாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர்.சிறப்பு பூஜை, காலை…

Read More

விலை குறைந்தது பட்டாணி

விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில் பட்டாணி பருப்பு விலை குறைந்தும் உருட்டு உளுந்து வகைகள், பாமாயில் விலை அதிகரித்தும் காணப்படுகிறது. மார்க்கெட்டில் கடலை எண்ணெய்(15 கிலோ டின்) ரூ.100 அதிகரித்து ரூ.2550, நல்லெண்ணெய் ரூ.3900, சன்பிளவர் எண்ணெய் ரூ.2150, பாமாயில் ரூ.40 அதிகரித்து ரூ.1820, 100 கிலோ கடலை புண்ணாக்கு ரூ.200 அதிகரித்து ரூ.4200 ஆக உள்ளது. 100 கிலோ சர்க்கரை ரூ.80 குறைந்து ரூ.3440, மைதா 90 கிலோ பை ரூ.3520, 55 கிலோ பொரிகடலை ரூ.50 குறைந்து ரூ.3800, 100 கிலோ துவரம் பருப்பு புதுசு நாடு ரூ.8,500, 100 கிலோ நயம் புதுசு லயன் ரூ.9,100, நாட்டு உளுந்து 100 கிலோ ரூ.200 குறைந்து ரூ.8200, உளுந்து லயன் ரூ.100 குறைந்து ரூ.8500, மசூர் பருப்பு பருவட்டு ரூ.200 அதிகரித்து ரூ.7600க்கு விற்பனையாகிறது. உருட்டு உளுந்து…

Read More

ஆக்கிரமிப்புக்கு வழிவிடும் நகராட்சி

விருதுநகர் : விருதுநகர் சி.எஸ்.ஐ., தேவாலயம் எதிர்புறம் செல்லும் 40 அடி அகல நேருஜிநகர் ரோடு 32 அடியாக குறுகி அமைக்கப்பட்டதால் ஆக்கிரமிப்புக்கு நகராட்சியே வழிவிடும் வகையில் அமைந்துள்ளது. விருதுநகர் நகராட்சி சார்பில் நகர்ப்பகுதிகளில் ரோடு அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் 40 அடி இருந்த சி.எஸ்.ஐ., தேவாலயம் எதிர்புறம் செல்லும் நேருஜிநகர் ரோடு தற்போது புதிதாக 26 அடியாக குறுக்கி ரோடு அமைக்கப்பட்டுள்ளது. முன்பு 40 அடியில் இருபுறமும் தலா நான்கு அடி என எட்டு அடிக்கு பேவர் பிளாக் நடைபாதை போடப்பட்டிருந்தது. மீதமுள்ள 32 அடிக்கு தார் ரோடு முழுமைக்கும் இருந்தது. இதில் தற்போது 26 அடி மட்டுமே ரோடு அமைக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டு பகுதியான நடைபாதையில் பேவர் பிளாக் பதிக்கப்படவில்லை. இதனால் ரோடு மிகவும் குறுகி காணப்படுகிறது. இது ஆக்கிரமிப்புக்கு ஏதுவாக மாறிவிடும்.…

Read More