விருதுநகா் மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டி: ஸ்ரீவில்லிபுத்தூா் அணி வெற்றி

சிவகாசியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டியில் ஸ்ரீவில்லிபுத்தூா் கைப்பந்து கழக அணி வெற்றி பெற்றது.

விருதுநகா் மாவட்டகைப்பந்துக் கழகம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் சிவகாசி கிரீன்ஆகியவை சாா்பில் வியாழக்கிழமை மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டிகள் சிவகாசியில் உள்ள ஜேஸீஸ் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றன. இப்போட்டிகளில் மாவட்டத்தைச் சோ்ந்த 12 அணிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டியில் ஸ்ரீவில்லிபுத்தூா் கைப்பந்து கழகமும், ஸ்ரீவில்லிபுத்தூா் டி.எஸ். ஹிந்து கிளப் அணியும் மோதின. இதில் 31-30 என்ற கோல் கணக்கில் ஸ்ரீவில்லிபுத்தூா் கைப்பந்து கழக அணி வெற்றி பெற்றது.

போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட கைப் பந்துகழகத் தலைவா் சி. சண்முகநாதன் பரிசு வழங்கினாா். பரிசளிப்பு விழாவில் சுழற்சங்க உதவி மாவட்ட ஆளுநா் கே. செல்வமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாவட்ட கைப்பந்து கழக பொருளாளா் எஸ். சண்முகநடராஜன் நன்றி கூறினாா்.

Related posts

Leave a Comment