பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்குநாடாளுமன்ற உறுப்பினர்கள் மலர்தூவி மரியாதை

இன்று (03.02.2021), பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் உள்ள, அவரது திருவுருவச் சிலைக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலர்தூவி மரியாதை

Read More

விரிவாக்க பகுதிகளில் இல்லை வசதிகள்

ஸ்ரீவில்லிபுத்துார் : முறையான ரோடு, சாக்கடைகள், தெருவிளக்குகள் இல்லாமலும், தாழ்வாக செல்லும் மின்ஒயர்களாலும் தவித்து வருகின்றனர் . ஸ்ரீவில்லிபுத்துார் கோவிந்தன் நகர் காலனி மக்கள்.நாளுக்குநாள் குடியிருப்புகள் அதிகரித்து வரும் இப்பகுதியில் ஆரம்ப காலத்தில் உள்ள தெருக்களில் மட்டுமே ரோடு, சாக்கடைகள், தெருவிளக்குகள் இருக்கும்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வீடுகள் அதிகரித்து வரும் தெருக்களில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை.20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டபட்ட சாக்கடைகள் சேதமடைந்து கழிவுநீர் தேங்கி, கொசுத்தொல்லையுடன் சுகாதாரக் கேடாக காணப்படுகிறதுவிரிவாக்கபகுதிகளில் சாக்கடைகள் ஆழமின்றி கட்டபட்டுள்ளதால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. ஆறுமுகச்சாமி கோயில் பின்புறம், கண்மாய் கரை, மயானத்திற்கு செல்லும் ரோடுகளில் முட்புதர்கள் வளர்ந்து காணப்படுவதால் விஷப்பூச்சிகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து விடுகிறது.ராணுவ கேண்டீனில் வேலைநாட்களில் அதிகளவு பொதுமக்கள் வரும்போது வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தபட்டு இடையூறு ஏற்படுகிறது. பஸ் ஸ்டாப்பிலிருந்து பருத்தி…

Read More

ரயிலில் தவறி விழுந்த பெண் கால் முறிவு

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே ஸ்டேஷனில் பிளாட்பார்ம் பணி தாமதத்தால் ரயிலில் இருந்து இறங்கிய பெண் பயணிதவறி விழுந்ததில் கால் எலும்பு முறிந்தது.இங்குள்ள பிளாட்பார்ம்கள் தாழ்வாக இருப்பதால் உயர்த்திகட்டும்பணி 2020 ஜூலை முதல் நடக்கிறது. ஆமைவேகத்தில் நடக்கும்பணியால் 2வது பிளாட்பார்மில் தான் சென்னை ரயில்கள் வருகிறது. மந்தநிலையில் நடக்கும் பணியால் தினசரி ரயில் பயணிகள் தட்டுத்தடுமாறி வருகின்றனர். முதியவர்கள் தவறி விழுகின்றனர்.இந்நிலையில் நேற்று காலை சென்னையிலிருந்து வந்த பொதிகை சிறப்பு ரயிலில் பயணித்த எஸ்.ராமச்சந்திரபுரத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி அமுதமொழி 51,இறங்கும்போது ரயில் நகர்ந்ததால் தவறி விழுந்ததில் இடதுகால் எலும்பில் முறிவு ஏற்பட்டது. ஸ்ரீவி., அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனவே, சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தி பயணிகளின் நலன்காக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Read More

புதுசும் வரல; நிறுத்தப்பட்டதும் வரல ; அவதியில் அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை ரயில்வே வழிதடத்தில் வந்த ஒரு ரயிலும் நிறுத்தப்பட்ட நிலையில்,ஆண்டுகள் கடந்தும் புதிய ரயில்களையும் இயக்காத நிலையில் இங்குள்ள ஸ்டேஷன் காட்சி பொருளாகவே உள்ளது. மானாமதுரை விருதுநகர் ரயில்வே பாதை அகலப்பாதையாக மாறியும் இவ்வழியில் ஒரு ரயிலை தவிர ஒன்றும் வருவதில்லை. சிலம்பு ரயில் வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் சென்னை செல்கிறது. விருதுநகர் – திருச்சி வரை சென்ற ரயில் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டு இன்று வரை இயங்கவில்லை. அதை மீண்டும் இயக்க ரயில்வே நிர்வாகம் முனைப்பு காட்டவில்லை.அருப்புக்கோட்டையிலிருந்து சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு தினசரி 200 க்கு மேற்பட்ட பயணிகள் ரயிலில் செல்வதுண்டு. ரயில் வசதி இல்லாததால் மதுரை ,விருதுநகர் சென்றும் செல்லும் நிலை தொடர்கிறது. சிலம்பு ரயிலை தினசரி இயக்க கோரிக்கை வைத்தும் இது நாள் வரை நடவடிக்கை…

Read More