உங்கள் தொகுதியில் ஸ்டாலின்

பிப்ரவரி 07.02.2021 அன்று”உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சிக்கு விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தரும் கழக தலைவர் மாண்புமிகு. நாளைய முதல்வர் ஸ்டாலின் அவர்களை சாத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக வருக வருக என வரவேற்கிறேன்…” ஸ்டாலின்தான் வாராரு விடியல்தரப் போறாரு” #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின்#ஸ்டாலினுடன்_சாத்தூர் இவன் : கோஸ்குண்டு சாத்தூர் திரு. S.V.சீனிவாசன் B.Com அவர்கள் சாத்தூர் சட்டமன்ற தொகுதி #Sattur_Dmk# Dmk_Sattur www.svssattur.in

Read More

பத்மஸ்ரீ விருது கிடைத்தது கூட அறியாத ஒரு அறியாமையாளர்தான் கூடையில் ஆரஞ்சுப்பழம் கூவிக்கூவி விற்கும் ஏழை ஹஜப்பா

பத்மஸ்ரீ விருது கிடைத்தது கூட அறியாத ஒரு அறியாமையாளர்தான் கூடையில் ஆரஞ்சுப்பழம் கூவிக்கூவி விற்கும் ஏழை ஹஜப்பா..ஆனால் புண்ணியம் கோடிக்குசொந்தக்காரர்!2020-ஆம் ஆண்டு குடியரசு தினத்துக்கு முதல் நாள். அன்று சனிக்கிழமை. அழுக்கேறிய உடைகளுடன் ரேஷன் கடை வரிசையில் பொருட்கள் வாங்க சோர்வோடு நின்று கொண்டிருந்தார் ஹரேகலா ஹஜப்பா. கூட்டம் நிறைய இருந்தது. 35 கிலோ ரேஷன் அரிசியை வாங்கி வீட்டில் கொடுத்துவிட்டு அவர் தன்னுடைய ஆரஞ்சுப் பழ வியாபாரத்திற்குச் செல்ல வேண்டும். அப்போது அவரது செல்போன் சிணுங்கியது. இந்த வேளையில் நம்மை அழைப்பது யார் என்று புரியாமல் செல்போனை எடுத்து, “யார் பேசுறீங்க?” என்று கேட்டார்.அதில் ஒலித்த குரல் ஹிந்தியில் இருந்தது.யார் எங்கிருந்து பேசுகிறார்கள் என்று புரியாமல், பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஆட்டோ டிரைவரை அழைத்துத் தன்னுடைய செல்போனைக் கொடுத்து “யார் பேசுவது என்று புரியவில்லை. தயவு…

Read More

வியாபாரிகள் மனித சங்கிலி

விருதுநகர் : விருதுநகர் பஜார் வழியாக பஸ்கள் செல்ல எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் நான்கு வழிச்சாலை அமைவதற்கு முன்பு வரை கன்னியாகுமரி, அருப்புக்கோட்டை மார்க்கமாக செல்லும் பஸ்கள் நெடுஞ்சாலை அமைந்துள்ள பஜார் வழியாக செல்வது வழக்கம். நான்கு வழிச்சாலை அமைந்த பின் கன்னியாகுமரி, நெல்லை மார்க்கமாக செல்லும் பஸ்கள் பஜார் வழியாக செல்லாமல் நான்கு வழிச்சாலையில் நேரடியாக செல்கின்றன.முன்பு கலெக்டராக இருந்த சிவஞானம் பஜார் வழியாக அருப்புக்கோட்டை, சாத்துார் மார்க்கமாக பஸ்கள் செல்ல அனுமதித்தார். இது இன்றளவும் நடைமுறையில் உள்ளது. பஜார் வழியாக பஸ்கள் இயக்கப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி வியாபாரிகள் சங்க நிர்வாகி செந்தில்குமார் தலைமையில் பஜார் வியாபாரிகள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

Read More

நிலத்தடி நீர் சேகரிப்பில் புதுமை.. மத்திய அரசு நிதியில் அருப்புக்கோட்டையில் மும்முரம்

அருப்புக்கோட்டை : தண்ணீர் பற்றாக்குறையை கருத்தில்கொண்டு மழை நீர் சேகரிப்பு, நீரை சிக்கனமாக செலவழிப்பது, பயன்படுத்திய நீரை சேகரிப்பது உட்பட பல கட்டமைப்புகளை உருவாக்கும் வகையில் இதற்கான பணி மத்தியரசு நிதியில் ஆமணக்கு நத்தம் ஊராட்சியில் மும்முரமாக நடந்து வருகிறது. மத்திய அரசானது துாய்மை இந்தியாதிட்டத்தின் கீழ் மாநில அரசுக்கு தேவையான நிதிகளை கொடுத்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு பல ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில்,நாம் அன்றாடம் பயன்படுத்தி வரும் தண்ணீரை வீணாக்காமல் அதை நிலத்தில் விட்டு நிலத்தடி நீரை சேகரிக்கும் வகையில் கட்டமைப்புஉருவாக்கி உள்ளது. அதாவது வீடுகளில் நாம் பாத்திரம் மற்றும் மற்ற புழக்கங்களுக்கு தண்ணீரை செலவழிக்கும் போது பயன்படுத்த பட்ட தண்ணீர் வீணாக செல்கிறது. இதை முறைப்படுத்தி நிலத்தில் மீண்டும் விட்டு விட்டால் நிலத்தடி நீர் உயர…

Read More

தொழில் வர்த்தக சங்கம் பாராட்டு

ராஜபாளையம், : கடினமான பொருளாதார சூழலிலும் புதிய வரிகள், இலவச சலுகை அறிவிப்புகளின்றி நல்ல முன்னேற்றம் காணும் வகையில் மத்திய அரசின் பட்ஜெட் உள்ளதாக ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க செயலாளர் வெங்கடேஸ்வர ராஜா பாராட்டு தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: 7 ஜவுளி பூங்காக்களில் இரண்டு தமிழ்நாட்டில் அமையவிருப்பது வரவேற்கத்தக்கது. சிறுகுறு நடுத்தர தொழில் திட்டங்களுக்கு கடந்த ஆண்டை விட இரு மடங்கான ரூ.15,700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.விவசாய கடன் ரூ.16.5 லட்சம் கோடியாகவும், விளை பொருள்களுக்குகுறைந்த பட்ச ஆதார விலை 1.5 மடங்கு அதிகம் கிடைக்க நடவடிக்கை 15 ஆயிரம் பள்ளிகளின் தரத்தை உயர்த்தல், 100 புதிய சைனிக் பள்ளிகள் தொடக்கம் என்பதும் வரவேற்கத்தக்கதாகும்.மதுரை——கொல்லம் தேசியநெடுஞ்சாலைக்கு முக்கியத்துவம் அறிவிப்பு வரவேற்பிற்குறியது என, குறிப்பிட்டுள்ளார்.

Read More

வாகன காப்பகமாக மாறும் கலெக்டர் அலுவலகம்

விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இஷ்டத்துக்கு டூவீலர்கள், ஆட்டோக்களை நிறுத்துவதால் சிரமம் ஏற்படுகிறது. கலெக்டர் அலுவலகத்தில் டூவீலர், கார்களை நிறுத்த நிழற்குடையுடன் பார்க்கிங் வசதி உள்ளது.எனினும் இங்கு பல்வேறு பணிகள் காரணமாக வருவோர் அதற்கான இடங்களில் வாகனங்களை நிறுத்துவது கிடையாது.நுழைவு வாயிலின் இருபுறம், பக்கவாட்டு பகுதிகள், கலெக்டர் அலுவலக வளாகத்தில் டூவீலர்கள், ஆட்டோக்களை இஷ்டத்துக்கு நிறுத்தி விட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் நடக்கக்கூட வழியின்றி சிரமம் ஏற்படுகிறது. இங்கு24 மணி நேரமும் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சிலர்தங்களின் வாகனங்களை வளாகத்தில் நிறுத்தி விட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.பணி முடிந்து வீடு திரும்பும் போது கூட்டத்தோடு கூட்டமாக தங்களின் வாகனங்களை எடுத்து செல்கின்றனர். இதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read More

மரத்துபோகும் மரங்கள்… விளம்பரங்களால் விபரீதம்

விருதுநகர் மாவட்டம் வறட்சி மாவட்டம் என்ற பெயரிலே இன்றும் திகழ்கிறது. இதை போக்க பல்வேறு தன்னார்வ அமைப்புகள் ,இளைஞர்கள் அமைப்புகள் ஆங்காங்கு மரங்கள் வளர்க்கும் பணியில் அதி தீவிரம் காட்டி வருகிறது. அதற்கேற்ப அதிகளவு மரங்களும் வளர்ந்து வருகிறது. இவ்வாறு வளர்க்கப்படும் மரங்களில் சிலர் விளம்பரம் எனும் பெயரில் ஆணி அடித்து விளம்பர பதாகைகளை மாட்டி வருகின்றனர். இதுவும் ஒர் உயிர்தான் என்பதை மறந்து விடுகின்றனர். இது போன்றவர்கள் மீது நடவடிக்கை அவசியமாகிறது.

Read More

ஹெல்மெட் அணிவதில்லையே… மாவட்ட நீதிபதி முத்துசாரதா வேதனை

ஸ்ரீவில்லிபுத்துார் : ”போலீசார் பலமுறை அபராதம் விதித்தும் உயிர்காக்கும் ஹெல்மெட் அணிவதில் வாகனஓட்டிகள் அலட்சியம் காட்டி வருவது வேதனைக்குரியது,” என, மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா வேதனை தெரிவித்தார். ஸ்ரீவில்லிபுத்துாரில் சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு டூவீலர் ஊர்வலத்தை துவக்கி வைத்த அவர் பேசியதாவது: விபத்துகளிலிருந்து நம்மை காக்க ஹெல்மெட் அணியவேண்டும் என்பதற்காக போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். இதில் தங்களுக்கு மட்டுமே போலீசார் பலமுறைஅபராதம் விதிப்பதாக சிலர் நீதிமன்றத்தில் தெரிவிக்கின்றனர். பலமுறை அபராதம் விதித்தும் ஹெல்மெட் அணிந்து வாகனங்கள் ஓட்டுவதில் அலட்சியத்துடன் இருப்பது வேதனைக்குரியது ,என்றார். நீதிபதிகள் காஞ்சனா, ஆனந்தி, மாரியப்பன், கதிரவன், பரம்வீர், வட்டாரபோக்குவரத்து அலுவலர் முருகன், டி.எஸ்.பி.,நமசிவாயம், ரோட்டரி வெஸ்ட்டர்ன்கார்ட்ஸ் சங்கதலைவர் சங்கர்கணேஷ் பங்கேற்றனர். மோட்டார் வாகன ஆய்வாளர் ஜாஸ்மின் மெர்சி நன்றி கூறினார்.

Read More

கழிவுகளின் கேந்திரமாகிவிட்ட ஊரணி … ராஜபாளையம் இந்திரா நகரில் பரவுது ‘டெங்கு’

ராஜபாளையம் : தேவையான தெரு விளக்குகள், முறையான ரோடு வசதி, நாய்கள் தொல்லை, பன்றிகள் உலா என சுகாதாரக்கேடால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் நிலையால் தெற்கு வெங்காநல்லுார் ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் பகுதி மக்கள் தவிக்கின்றனர். ராஜபாளையம் நகரை யொட்டிய சஞ்சீவி மலைப்பகுதி அருகே அமைந்துள்ள இந்நகரில் மெயின் ரோட்டிற்கு மட்டும் ரோடு வசதி செய்து மற்ற பகுதியில் மண் ரோடாக காட்சியளிக்கிறது. புதிதாக போடப்பட்டுள்ள ரோடும் பாதியில் நிற்கிறது. ஒரு பகுதி கண்மாய் மற்றும் அடுத்த பக்கம் சஞ்சீவி மலையடிவாரம் என்பதால் புதர்பகுதியாக உள்ளதால் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. மலை யடிவாரப்பகுதியாக உள்ளதால் லேசான மழைக்கும் தண்ணீர் ஆங்காங்கு தேங்கி நிற்கிறது. இங்குள்ள ஊரணியில் கழிவுகள் கொட்டப்படுவதால் நோய் பரப்பும் கேந்திரமாகி விட்டது. குடியிருப்பு நடுவில் உள்ள நாகம்மாள் கோயில் முன்பு தண்ணீர்…

Read More

மருத்துவமனைக்கு சலவை இயந்திரங்கள்

சிவகாசி : சிவகாசி அரசு மருத்துவமனைக்கு லயன்ஸ் கிளப் ஆப் சிவகாசி சார்பில் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் நவீன சலவை இயந்திரங்கள் வழங்கப்பட்டது. தலைமை டாக்டர் அய்யனார் தலைமை வகித்தார். அரிமா முன்னாள் மாவட்ட ஆளுநர் வைரபிரகாசம், அரிமா சங்க முன்னாள் தலைவர்கள் செல்வராசன், அசோகன் துவக்கி வைத்தனர். லயன்ஸ் கிளப் தலைவர் பிரபாகரன், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் சிவசக்திபாலன், இணை செயலாளர் சுரேஷ்சந்தர், இணை பொருளாளர் செந்தில்குமார் கலந்து கொண்டனர்.

Read More