ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் சிவில் விமான போக்குவரத்துத் துறையில் பணியாற்ற ஆசையா?

மத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் சிவில் விமான போக்குவரத்துத் துறையில் காலியாக உள்ள Senior Inspector (Technical) பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1.42 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு சிவில் பொறியியல், தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : Ministry of Civil Aviation மேலாண்மை : மத்திய அரசு பணி : Senior Inspector (Technical) மொத்த காலிப் பணியிடம் : 01 வயது வரம்பு : விண்ணப்பதாரர் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க. ஊதியம் : மாதம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு : கீழே இணைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.civilaviation.gov.in/ என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று, அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 08.02.2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 08.02.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.civilaviation.gov.in/

Related posts

Leave a Comment