ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் அரசாங்க வேலை வேண்டுமா?

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வ.உ. சிதம்பரனார் துறைமுக கழகத்தில் காலியாக உள்ள Chief Medical Officer பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.2.60 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு எம்பிபிஎஸ் மருத்துவ படிப்புடன் முதுநிலை பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம். நிர்வாகம் : வ.உ. சிதம்பரனார் துறைமுக கழகம் மேலாண்மை : மத்திய அரசு பணி : Chief Medical Officer மொத்த காலிப் பணியிடம் : 01 கல்வித் தகுதி : எம்பிபிஎஸ் மருத்துவ படிப்புடன் PG அல்லது PG Diploma முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஊதியம் : ரூ.1,00,000 முதல் ரூ.2,60,000 வரையில் விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.vocport.gov.in எனும் அதிகாரப்பூர்வ…

Read More

சதுரகிரியில் தை அமாவாசை பக்தர்கள் வழிபாடு

வத்திராயிருப்பு:சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தி தரிசனம் செய்தனர். இங்கு பிப்.9 முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் நேற்று அதிகாலை முதலே தாணிப்பாறையில் குவியத் துவங்கினர். காலை 6:00 மணி முதல் உடல் வெப்ப பரிசோதனைக்கு பின் பக்தர்கள் மலையேறினர். நேரம் செல்லச்செல்ல வெயிலின் தாக்கம் அதிகரித்தது. மாலை 4:00 மணி வரை ஏராளமான பக்தர்கள் மலையேறினர். கோயிலில் சுந்தரமகாலிங்கம் சுவாமிகளுக்கு 18 வகை அபிேஷகங்களுடன் அமாவாசை வழிபாடு நடந்தது. மதுரை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார் பகுதிகளிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கபட்டது.

Read More

வீடுகள் தோறும் குழாய் மூலம் குடிநீர்; குந்தலபட்டிக்கு ரூ.25 லட்சம் ஒதுக்கீடு

விருதுநகர் : மாவட்டத்தில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது. இதற்காக குந்தலபட்டிக்கு ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரமான, தரமான குடிநீர் வழங்க மத்திய அரசு ஜல் ஜீவன்திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இதன்படி ஊராட்சிகள் தோறும் வீடுகளில் குழாய்கள் மூலம் குடிநீர் வழங்க ஊரக வளர்ச்சி முகமை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் அருகே குந்தலபட்டி, நாராயணபுரம் ஊராட்சியில் 950 வீடுகளில் குழாய் பதித்து குடிநீர் வழங்கப்பட உள்ளது.இதற்காக ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இத்திட்டத்தின் படி ஊராட்சி தண்ணீர் தொட்டியில் இருந்து சுகாதாரமான, தரமான குடிநீர் வீடுகளுக்கு நேரடியாக விநியோகம் செய்யப்பட உள்ளது. கோடையில் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் பொருட்டு ஏற்பாடு செய்துள்ள…

Read More

ஸ்ரீவி.,வன அலுவலர் கேரளாவிற்கு மாற்றம்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் வன உயிரின சரணாலய மாவட்ட வன அலுவலர் முகமது ஷாபாப் கேரளாவிற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். நேரடி ஐ.எப்.எஸ்., அதிகாரியான இவர், சில ஆண்டுகளாக ஸ்ரீவில்லிபுத்துாரில் மாவட்ட வன அலுவலராக பணியாற்றி வந்தார். பணியின்போது எவ்வித அறிவிப்புமின்றி வனப்பகுதியில் ஆய்வு செய்வார். இவரது பணிக்காலத்தில் வனப்பகுதியில் மாடுகளை மேய்ச்சலுக்கு அனுமதித்ததாக ரேஞ்சர் சஸ்பெண்ட் செய்யபட்டார். சாப்டூர் வனப்பகுதியில் இறந்த யானை எரிக்கபட்டபோது அப்பகுதி ரேஞ்சர் உட்பட 4 வனத்துறை அலுவலர்களை சஸ்பெண்ட் செய்தார். சில வாரங்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்துார் பந்தப்பாறையில் அனுமதியின்றி சந்தன மரங்கள் வைத்திருந்த கோவை வனத்துறை அதிகாரியின் மனைவி மீது வழக்கு பதிவு செய்தார். அதிகாரியும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு கேரள வனத்துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தற்போது மதுரை மாவட்ட வனஅலுவலர் ஆனந்த் கூடுதல் பொறுப்பாக…

Read More

தடுக்கலாமே! வீடுகளில் மின் மோட்டார் வைத்து குடிநீர் திருட்டு

சிவகாசி : மாவட்டத்தில் நகர், கிராம பகுதிகளில் வீடுகளில் உள்ள குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார் வைத்து நீரை உறிஞ்சுபவர்களால் ,முறையாக குடிநீர் பிடிப்போர் தண்ணீரின்றி தவிக்கும் நிலை தொடர்கிறது. இதன் மீது நடவடிக்கை எடுப்பதோடு மோட்டார்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் . நகர், கிராம பகுதிகளில் மக்களின் தேவைக்காக தாமிரபரணி, மானுார், திருப்பாசேத்தி உள்ளிட்ட பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலமாக குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதுதவிர குடிநீர் ஆதாரம் உள்ள இடங்களில் போர்வெல் மூலமாகவும் சப்ளை செய்யப்படுகிறது. இதற்காக நகராட்சி, ஊராட்சிகள் சார்பில் பொது குழாய்களும், வீட்டிற்கு தனியாகவும் இணைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் வாரத்திற்கு ஒரு முறைதான் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. சப்ளை குடிநீரை சிலர் மோட்டார் வைத்து மொத்தமாக உறிஞ்சி விடுகின்றனர். அனைவருக்கும் குடிநீர் சீராக கிடைப்பதில்லை. கடைசியாக உள்ள பகுதிகளுக்கு சுத்தமாக…

Read More

திடக்கழிவு திட்டத்திற்கு ரூ.1000 கோடி; கண்காணிப்பு குழு தலைவர் ஜோதிமணி தகவல்

சிவகாசி : ”திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக தமிழகத்திற்கு ரூ. 1000 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக , தேசிய பசுமை தீர்ப்பாய மாநில திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்பு குழு தலைவர் நீதிபதி ஜோதிமணி கூறினார். சிவகாசியில் அவர் கூறியதாவது: குப்பையை கண்ட இடத்தில் போடுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தால் அதிருப்தி ஏற்படும். ஆனால் நகராட்சிகளில் ஒரு சில கமிஷனர்களுக்கு அபராதம் விதித்துள்ளேன். திருத்தங்கல் நகரில் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிவகாசி நகராட்சியில் குப்பை அகற்றுவதற்கு கூடுதல் பணியாளர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 2020ல் இங்கு வந்தேன். அப்போது பார்த்ததை விட தற்போது பரவாயில்லை. சாக்கடைகள் மிகவும் மோசமாக உள்ளது. சிவகாசி மாநகராட்சியாக மாறினால் நிதி அதிகளவில் கிடைக்கும் வளர்ச்சி பணிகளும் அதிகளவில் நடைபெறும். சிவகாசியில் ஓட்டல் கழிவுகளை ஒரே இடத்தில் கொட்டி பிரிக்க…

Read More

கல்லுாரியில் சாலை பாதுகாப்பு கண்காட்சி

சிவகாசி : பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரியில் சாலை பாதுகாப்பு கண்காட்சி நடந்தது. கல்லுாரி தாளாளர் சோலைசாமி தலைமை வகித்தார். கல்லுாரி இயக்குநர் விக்னேஷ்வரி முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் விஷ்ணுராம் , கல்லுாரி டீன் மாரிச்சாமி கலந்து கொண்டனர். ஸ்ரீவில்லிபுத்துார் கிளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மேலாளர் தங்கராஜ் துவக்கி வைத்தார். மாணவர்களுக்கு போக்குவரத்து விதிகள் பொருத்துதல் என்ற போட்டி நடந்தது. முதலாமாண்டு மாணவர்கள் சதீஸ் , சுப்புலட்சுமி, நிவேதா முதல் 3 இடங்களை பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நாட்டுநலப் பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் துர்க்கை ஈஸ்வரன், இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் ஆதிமூலம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Read More

தடுக்கலாமே! வீடுகளில் மின் மோட்டார் வைத்து குடிநீர் திருட்டு

சிவகாசி : மாவட்டத்தில் நகர், கிராம பகுதிகளில் வீடுகளில் உள்ள குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார் வைத்து நீரை உறிஞ்சுபவர்களால் ,முறையாக குடிநீர் பிடிப்போர் தண்ணீரின்றி தவிக்கும் நிலை தொடர்கிறது. இதன் மீது நடவடிக்கை எடுப்பதோடு மோட்டார்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் . நகர், கிராம பகுதிகளில் மக்களின் தேவைக்காக தாமிரபரணி, மானுார், திருப்பாசேத்தி உள்ளிட்ட பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலமாக குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதுதவிர குடிநீர் ஆதாரம் உள்ள இடங்களில் போர்வெல் மூலமாகவும் சப்ளை செய்யப்படுகிறது. இதற்காக நகராட்சி, ஊராட்சிகள் சார்பில் பொது குழாய்களும், வீட்டிற்கு தனியாகவும் இணைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் வாரத்திற்கு ஒரு முறைதான் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. சப்ளை குடிநீரை சிலர் மோட்டார் வைத்து மொத்தமாக உறிஞ்சி விடுகின்றனர். அனைவருக்கும் குடிநீர் சீராக கிடைப்பதில்லை. கடைசியாக உள்ள பகுதிகளுக்கு சுத்தமாக…

Read More