பா.ஜ., மக்கள் சந்திப்பு கூட்டம்: நடிகை கவுதமி பங்கேற்பு

ராஜபாளையம்:ராஜபாளையம் தொகுதி யில் பா.ஜ., சார்பில் ஏற்பாடு செய்த மக்கள் சந்திப்பு கூட்டங்களில் கட்சியினருடன் நடகை கவுதமி ஊர்வலமாக சென்று மத்தியரசின் திட்டங்கள் குறித்து விளக்கினார். ராஜபாளையம் சட்டசபை தொகுதியின் பல்வேறு இடங்களில் பா.ஜ., சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. இதற்கு தலைமை வகித்த தொகுதியின் பா.ஜ., தேர்தல் பொறுப்பாளரும் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான நடிகை கவுதமி ராஜபாளையம் வேட்டை வெங்கடேஷ பெருமாள்கோயிலில் தரிசித்த பின் கட்சியினர் டூவீலரில் முன் செல்ல ஊர்வலமாக கலங்காபேரி புதுார், கம்மாப்பட்டி பகுதியில் பொது மக்களிடம் பேசினார். அப்போது, மத்திய அரசின் ஜன்தன் திட்டம், பிரதமர் காப்பீடு, முத்ரா வங்கி உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

Read More

கொரோனா பரவலுக்கு சுகாதார கேடும் காரணம்: திடக்கழிவு குழு தலைவர் ஜோதிமணி பேச்சு

சிவகாசி: ”கொரோனா பரவலுக்கு சுகாதார கேடும் காரணமாக இருந்துள்ளது,”என,திடக்கழிவு குழு தலைவர் ஜோதிமணி பேசினார். சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் கிராமப் புற தொழில் முனைவோர் சுவச்சிதா கிராமப்புற மேம்பாட்டு கழகத்தின் சார்பில் நடந்த சொற்பொழிவு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: அன்றைய காலத்தில் மனிதனின் சராசரி ஆயுட்காலம் 100 ஐ தாண்டி உள்ளது. ஆனால் தற்போது 40 வயதிலேயே மனிதனுக்கு பல்வேறு நோய்கள் வருகிறது.நீர்நிலைகளில் குப்பையை கொட்ட கூடாது. இதன் மூலம் தொற்று நோய்கள்தான் ஏற்படும். கொரோனா பரவலுக்கு கூட சுகாதார கேடும் காரணமாக இருந்துள்ளது. மாணவிகள் தங்களது வீடுகளிலேயே திடக்கழிவுகளை பிரித்தறியும் முறைகளையும், திடக்கழிவு மேலாண்மையின் முக்கியத்துவத்தையும் அறிந்து கொள்ள வேண்டும், என்றார்.கல்லுாரி முதல்வர் பழனீஸ்வரி தலைமை வகித்தார். வேதியியல் துறை உதவி பேராசிரியர் சைலஜா வரவேற்றார். நுண்ணுயிரியல் துறை தலைவர் சுபாரஞ்சனி பேசினார். நகாரட்சி…

Read More

பராமரிப்பு இல்லா பூங்கா; புதர்கள் சூழ்ந்த மின் டவர்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை காந்தி நகரில் 2 ஆண்டுகளுக்கு முன்பு 25 லட்சம் ரூபாய் நிதியில் நகராட்சி பூங்கா அமைக்கப்பட்டது. இதன் அருகில் மின் வாரிய உயர் அழுத்த டவர் உள்ளது. பூங்கா அமைக்கும் போதே உயர் மின் அழுத்த டவர் பகுதியில் பூங்கா அமைக்க கூடாது என அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். எதையும் காதில் வாங்காமல் நகராட்சியினர் பூங்கா அமைத்தனர்.இதுனால் கட்டி 2 ஆண்டுகள் ஆகியும் பூங்கா பயன்பாட்டிற்கு வரவில்லை. தற்போது பூங்கா முட்புதர்கள், செடி கொடிகள் வளர்ந்து சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி விட்டது. அதன் அருகில் உள்ள மின் வாரிய டவரிலும் புதர்கள் சூழ்ந்து கொடி மேலே படர்ந்து செல்கிறது.இந்த பகுதி மக்கள்: நகராட்சி பூங்காவினாலும் பயன் இல்லை. அதில் அமைக்கப்பட்டுள்ள மின்வாரிய டவரும் பரமாரிப்பு இல்லாமல் உள்ளது. தற்போது உள்ள நிலையில்…

Read More

இ–சேவை மையத்தில் டோக்கன்: அதிகாலை முதல் காத்திருக்கும் மக்கள்

காரியாபட்டி: இ–சேவை மையத்தில் டோக்கன் வழங்கும் முறையால் புதிய ஆதார் அட்டை பெறவும், பெயர், முகவரி திருத்தம் செய்ய விரும்புவோர் அதிகாலையிலிருந்து காத்திருந்து டோக்கன் வாங்க வேண்டிய நிலையில் சிரமப்படுகின்றனர். காரியாபட்டி மற்றும் அதன் சுற்று கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் புதிய ஆதார் அட்டை பெற, முகவரி, அலைபேசி எண், போட்டோ திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தாலுகா அலுவலகத்தில் உள்ள இ–சேவை மையத்துக்கு வருகின்றனர். தனியார் ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு வரும் இம்மையத்தில் தினமும் 40 பேர் மட்டுமே இப்பணிகளுக்காக அனுமதிக்கப்படுகின்றனர். டோக்கன் பெற்றால் மட்டுமே இப்பணிகளை மேற்கொள்ள முடியும் என்பதால் விவரம் அறியாதவர்கள் ,பல நாட்கள் அலைந்து செல்லவேண்டிய நிலை உள்ளது. டோக்கன் வாங்கவும் அதிகாலை 5:00 மணிக்கு தாலுகா அலுவலகத்தில் வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்களுக்கு 9:30 மணிக்கு பின்பே டோக்கன் கொடுக்கின்றனர்.…

Read More

வத்திராயிருப்பில் பஸ் டிப்போ : பிப்.15க்கு பின் செயல்பட வாய்ப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டடம், வத்திராயிருப்பில் அரசு பஸ் டிப்போ பிப்.15 க்கு பின் திறக்கபட உள்ளது.ஸ்ரீவில்லிபுத்துாரில் வாடகை கட்டடத்தில் இயங்கிய வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்திற்கு கிருஷ்ணன்கோவில் ரோட்டில் சொந்த கட்டடம் கட்டபட்டுள்ளது. இதேபோல் வத்திராயிருப்பில் அரசு பஸ் டிப்போவிற்கான பணிகள் நிறைவு பெற்று வருகிறது. இதையடுத்து இவ்விரு கட்டடங்களும் பிப்.15க்கு பின் திறக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.வத்திராயிருப்பில் டிப்போ திறக்கபட்டதும் மதுரை, தேனி, விருதுநகர், திருச்செந்துார், சிவகாசிக்கு பஸ்கள் இயக்க திட்டமிடபட்டுள்ளது. இதற்காக பணிகளை போக்குவரத்து கழக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

கோயில்களில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை

ராஜபாளையம்: ராஜபாளையம் பகுதி சிவன் கோயில்களில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.சங்கரன் கோயில் ரோடு பகுதியில் உள்ள பறவை அன்னம் காத்தருளிய சுவாமி கோயிலில் அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சிவபெருமானுக்கு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. பல்வேறு பகுதிகளிலிருந்து தரிசனம் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.* தளவாய்புரம் அருகே புனல்வேலி குருநாதர் ஜீவ சமாது கோயிலில் இரவு எட்டு மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. அன்னதானமும் நடந்தது.ஏற்பாடுகளை புனல்வேலி குருநாதர் ஜீவ சமாது கோயில் அமாவாசை தின வழி பாட்டுக்குழுவினர் செய்திருந்தனர்.* ஸ்ரீவில்லிபுத்துார் ரோட்டில் உள்ள அஷ்டவரத ஆஞ்சநேயர் சுவாமிக்கு மகா ஹோமம், அபிேஷகம், சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தது. முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

Read More

பார்சல் புக்கிங்: அழைக்கிறது ரயில்வே

ஸ்ரீவில்லிபுத்துார்: மாவட்டத்தில் ராஜபாளையம், சாத்துார், விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன்களிலிருந்து பார்சல்களை அனுப்பும் வசதி செய்யபட்டுள்ளதால் அதை பயன்படுத்தி கொள்ளுமாறு பொதுமக்களுக்கும்,வியாபார நிறுவனங்களுக்கும் ரயில்வே நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.இதன்படி வீட்டு உபயோக பொருட்கள், டுவீலர்கள் , வணிக உற்பத்தி பொருட்கள், விளைபொருட்கள் என அனைத்து வகை பொருட்களையும் இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும் அனுப்பமுடியும். இதற்காக ராஜபாளையத்தில் சிலம்பு, விருதுநகரில் பொதிகை மற்றும் மைசூர் எக்ஸ்பிரஸ், சாத்துாரில் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்களும் 5 நிமிடம் நின்று செல்ல அறிவுறுத்தபட்டு பார்சல்கள் புக்கிங் செய்யும் பணி துவங்கி உள்ளது. இதற்காக போதிய விளக்கங்கள் பெறுவதற்கு ரயில்வே மண்டல வணிக ஆய்வாளரை 90038 62958ல் தொடர்பு கொள்ளலாம்.

Read More

வேண்டாமே: சாக்கடைகளை ஆக்கிரமித்து கட்டடங்கள் கழிவு நீர் பிரச்னையோடு தொற்று அபாயம்

ராஜபாளையம்: மாவட்டத்தில் பெரும்பாலான கட்டடங்கள் தெருக்களில் சாக்கடைகளை ஆக்கிரமித்து கட்டப்படுவதால் கழிவு நீர் செல்வதில் பாதிப்போடு சுகாதார பணிகளுக்கும் தடை ஏற்படுகிறது. எந்த ஒரு கட்டடமும் கட்டப்படுவதற்கு முன் உள்ளாட்சியில் முறையாக அனுமதி பெற வேண்டும். இதில் கட்டுமான உயரத்திற்கு ஏற்ப அடித்தளம், மாடிப்படிகள் வெளிப்புறம் அமைப்பு, கட்டட அமைப்பிற்கு ஏற்ப அவசர கால வழி ,கழிவு நீர் சாக்கடையில் இணைப்பு , மழை நீர் சேகரிப்பு உட்பட பல்வேறு அடிப்படைகளை பூர்த்தி செய்ய வேண்டும். ஆனால் இதன் படி அனைத்து குடியிருப்புகள், வணிக வளாகங்கள் கட்டப்படுகின்றனவா என்றால் கேள்விக்குறியே .அதிகாரிகளின் ஆசியோடு பார்க்கிங் வசதியில்லாமலும், ரோட்டின் வெளிப்பகுதி வரை கட்டடங்களை நீட்டி வைப்பதும், வீடுகளின் கழிப்பறைகள், மாடியின் சன் சைடு பொதுப்பகுதிகளில் உள்ளது. இது போன்ற விதி மீறல்களால் நடைபாதையின்மை, போக்குவரத்து பாதிப்பும் தொடர்கிறது. பல…

Read More

வருது தேர்தல்; வந்தது நிதி

ஸ்ரீவில்லிபுத்துார்: தமிழகத்தில் சட்டசபைக்கு தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் மாவட்டத்தில் 8 பேரூராட்சிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டபணிகளுக்காக லட்சகணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.இதன்படி வடிகால்கள், பேவர்பிளாக் ரோடுகள், சிறுமின்விசை இறைப்பான், தரைமட்ட நீர்தேக்க தொட்டி, புதிய அலுவலக கட்டடம் உட்பட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக, சேத்துாருக்கு ரூ.3 கோடி,வத்திராயிருப்பிற்கு ரூ.2.84 கோடி, செட்டியார்பட்டி மற்றும் காரியாபட்டிக்கு தலா ரூ.3.5 கோடி, சுந்தரபாண்டியம் மற்றும் மல்லாங்கிணருக்கு தலாரூ.50 லட்சம், வ.புதுபட்டிக்கு ரூ.25 லட்சம், எஸ்.கொடிக்குளத்திற்கு ரூ.95 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. இதற்கான பணிகளை விரைவில் துவங்கவும் அறிவுறுத்தபட்டுள்ளது.

Read More

வெடி விபத்தில் காயமடைந்து சாத்தூர் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தவர்களை சாத்தூர் சட்டமன்ற தொகுதி கோசுகுண்டு சாத்தூர் திரு.S.V.சீனிவாசன் B.Com நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறிய போது

விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் *உயர்திரு . *KKSSR. இராமச்சந்திரன் அருப்புக்கோட்டை MLA அவர்கள் ஆணைப்படி விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியம் சல்வார் பட்டி ஊராட்சி அச்சங்குளம் அருகே உள்ள மாரியம்மாள் பட்டாசு தொழிற்சாலை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்து சாத்தூர் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தவர்களை சாத்தூர் சட்டமன்ற தொகுதி கோசுகுண்டு சாத்தூர் திரு.S.V.சீனிவாசன் B.Com நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறிய போது உடன் ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Read More