சென்னை மாநகரப் பேருந்துகளில் முதியவர்கள் இலவசப் பயணம்: இன்று முதல் டோக்கன்

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் முதியவர்கள் இலவசமாக பயணம் செய்ய, இன்று முதல் டோக்கன்களைப் பெறலாம் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக சென்னையில் முதியவர்களுக்கு, இலவச பேருந்துப் பயண டோக்கன் வழங்குவது நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று முதல் கட்டணமில்லா பயண டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், டோக்கன் பெறுவதற்காக, போக்குவரத்து கழகத்தின் https://mtcbus.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், தகுதிவாய்ந்த முதியவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, தங்களது இருப்பிடத்திற்கு அருகில் உள்ள மையங்களில் டோக்கன்களைப் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள 21 பணிமனைகள் மற்றும்19 பேருந்து நிலையங்களில் டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு 10 வீதம், ஆறு மாதங்களுக்கான டோக்கன் வழங்கப்படவுள்ளது.

Read More

சமையல் சிலிண்டர் விலை ரூ.50 அதிகரிப்பு: ரூ.785ஆக நிர்ணயம்!

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தற்போது ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் ரூ.75 அதிகரித்து தற்போது சிலிண்டரின் விலை ரூ.785ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய், வெங்காயம் வரிசையில் கேஸ் விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்முன்னதாக, 2020 ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி வீட்டு உபயோக சிலிண்டர் ஒன்றின் விலை 734 ரூபாயாக இருந்தது. அதற்கு அடுத்த மாதத்திலேயே சிலிண்டரின் விலையானது 734 லிருந்து 881 ரூபாயாக உயர்ந்தது. அடுத்து வந்த மாதங்களில் சிலிண்டர் விலை இறங்குமுகத்தில் காணப்பட்ட நிலையில், மே மாதத்தில் இந்த ஆண்டின் குறைந்த பட்ச விலையாக ஒரு சிலிண்டரின் விலை 569 ரூபாய் 50 காசாக விற்கப்பட்டது.அடுத்து வந்த மாதங்களில் சிலிண்டர் விலை மாற்றமில்லாமல் காணப்பட்ட நிலையில், சென்ற செப்டம்பரில் சிலிண்டர் ஒன்றின் விலை 610 ரூபாயாகவும், டிசம்பர் ஒன்றாம்…

Read More

#வண்ணாரப்பேட்டை#மெட்ரோரயில்#பயணம்

வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் மெட்ரோ ரயில் பயணிக்க துவங்கியதையடுத்து பயணம் செய்ய ஆர்வத்துடன் குவிந்த பொதுமக்கள். இடம்- திருவொற்றியூர்.

Read More

#ADMK#AIADMK#TNAssemblyElection2021

‘ஜெ. பிறந்தநாளான பிப்.24ஆம் தேதி அதிமுகவில் விருப்பமனு விநியோகம்!’ சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 24 முதல் மார்ச் 5 வரை விருப்ப மனுக்களை பெற்று கொள்ளலாம் – அதிமுக |

Read More

சிவகாசி காவியாஸ்ரீ உலக சாதனை படைத்துள்ளார்

8 வயது மாணவி,3-ஆம் வகுப்பு மாணவி,காவியாஸ்ரீ இன்று,500 குறள் – 50 அதிகாரம் – அதன் பொருள் அனைத்தையும் சற்றேறக்குறைய 36 நிமிடத்திற்குள் ஒப்பித்து இன்று உலக சாதனை படைத்துள்ளார்.வாழ்த்துக்கள் மா…!இச்சிறுமியை தமிழ் ஆயுதமாக்கிய சொற்பொழிவு பீரங்கி திருமதி.ஜெயமேரி மேடம் அவர்களுக்கு என் நன்றி கலந்த வணக்கங்கள்…!

Read More