உங்களுக்கு சினிமா ஒரு பொழுது போக்கு மட்டுமே; எனக்கு சினிமா ஒரு தொழில் – நடிகர் அஜித்

உங்களுக்கு சினிமா ஒரு பொழுது போக்கு மட்டுமே; எனக்கு சினிமா ஒரு தொழில் – நடிகர் அஜித்

Read More

நெசவாளர்கள் முற்றுகை போராட்டம்; இன்று முதல் வேலை நிறுத்தம் அறிவிப்பு

ராஜபாளையம் : ராஜபாளையத்தில் கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குனர் பணி ஆணையை திரும்ப பெற வலியுறுத்தி நெசவாளர்கள், முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதோடு இன்று முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ராஜபாளையத்தில் சிவகாமிபுரம், தெற்கு வைத்தியநாதபுரம் துரைச்சாமிபுரம் பகுதிகளில் 3 நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கங்கள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் இதை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த 20 ஆண்டுகளாக மேலாண்மை இயக்குனர் பதவிக்கு அரசு ஊதியம் அளித்து வந்த நிலையில் கடந்த 11ம் தேதி கைத்தறி மற்றும் துணி நுால் துறையின் நிர்வாத்தில் இருந்து ராஜபாளையத்தில் செயல்படும் 3 கூட்டுறவு சங்கங்களுக்கு கோபால் என்ற மேலாண்மை இயக்குனரை நியமனம் செய்துள்ளது. இந்த இயக்குனரின் ஊதியம் ரூ. 80 ஆயிரத்தை 3 சங்கங்களும் இணைந்து வழங்குமாறு…

Read More

கட்டட பணிகளுக்கு பூமிபூஜை; அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பங்கேற்பு

சிவகாசி : சிவகாசி தொகுதி மேம்பாட்டு நிதியில் திருத்தங்கல் நகராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் நடக்க உள்ள புதிய கட்டட பணிகளை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார். இங்குள்ள முத்துமாரியம்மன் காலனி ஹிந்து புதிரை வண்ணார் தெரு, அருந்ததியர் தெருவில் கலையரங்கம், இந்திரா நகர், முருகன் காலனி கவிதா நகரில் மினி கிளினிக் கட்டடம் என ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்டுமான பணிகளுக்கான பூமிபூஜையை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார். திருத்தங்கல் நகராட்சி ஆணையாளர் பாண்டித்தாய், நகர செயலாளர் பொன் சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, சுப்ரமணியன், தெய்வம், சண்முகக்கனி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சுபாஷினி, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ரமணா, செல்வம், கிருஷ்ணமூர்த்தி, விருதுநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் சீனிவாசபெருமாள், மதுரை மண்டல தகவல்…

Read More

கேந்திரிய மாணவிக்கு பாராட்டு

விருதுநகர் : பல்வேறு விருதுகளை பெற்ற விருதுநகர் வரலொட்டி கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவி சூர்யா பிரபாவை கலெக்டர் கண்ணன் பாராட்டினார். கோ கோ போட்டியில் தேசிய அளவில் மூன்றாமிடம், சாரணர்கள், வழிகாட்டிகளில் ராஜ்ய புரஸ்கர் விருதும் பெற்றுள்ள இவர் 2019ல் சமுக அறிவியல் கண்காட்சியில் தேசிய அளவில் பங்கேற்றார். ஆங்கில விவாத போட்டியில் முதலிடம் பெற்று தேசிய அளவில் தேர்ச்சி பெற்றுள்ளார். 2020 மார்ச்சில் நடந்த ஏ.ஐ.எஸ்.எஸ்.சி.இ., தேர்வில் 500க்கு 480 மதிப்பெண்களை பெற்றார். கேந்திரியா வித்யாலய சங்கதன் சார்பில் தகுதி சான்று, அகில இந்திய மூத்த பள்ளி சான்றும் வழங்கப்பட்டுள்ளது. இவரது சாதனையை கவுரவப்படுத்தும் வகையில் சூர்யா பிரபாக்கு கேந்திரியா வித்யாலயா சங்கதன் தகுதி சான்று, ரூ.10 ஆயிரத்திற்கான காசோலையும் கலெக்டர் கண்ணன் வழங்கினார்.

Read More

12 கி.மீ., துாரத்தில் ஆம்புலன்ஸ் நிறுத்தம்: ராஜபாளையத்தில் தவிக்கும் நோயாளிகள்

ராஜபாளையம் : ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் நிறுத்திவைக்க வேண்டிய 108 ஆம்புலன்ஸ்களை 12 கி.மீ., துாரம் அப்பால் நிறுத்துவதால் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ்களை பயன்படுத்த முடியாது நோயாளிகள் அதிக கட்டணத்தில் தனியார் ஆம்புலன்ஸ்களை நாடும் நிலை உள்ளது. ராஜபாளையம் அரசு பொது மருத்துவமனைக்கென ஒதுக்கப்பட்ட ஆம்புலன்ஸ்கள் அரசு பொதுமருத்துவமனையில் நிறுத்த இடம் இல்லாமல் நகர்ப்பகுதியில் இருந்து 12 கி.மீ., தொலைவில் உள்ள ஜமீன்கொல்லங்கொண்டான் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவசர தேவைக்கு அழைத்தாலும் இருப்பிடத்தில் இருந்து வந்து பயனாளிகளை ஏற்றி கொண்டு மீண்டும் மதுரை, நெல்லை உள்ளிட்ட நகர்ப்பகுதி அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இந்த காலதாமத்தால் உயிருக்கு போராடும் நோயாளிகள் நிலை கேள்விக்குறியாகிறது. இந்நேரத்தில் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தனியார் ஆம்புலன்ஸ்களை மக்கள் நாடும் நிலை உள்ளது. அதிககட்டணத்தால் ஏழை மக்கள் பாதிப்பை சந்திக்கின்றனர்.…

Read More

வெடி விபத்தில் பெற்றோரை இழந்த சிறுமி; கல்வி செலவை காங்., ஏற்கும்

சிவகாசி : ” சாத்துார் பட்டாசு விபத்தில் பெற்றோரை இழந்து தவிக்கும் சிறுமி கல்வி செலவை காங்., எற்கும்,” என விருதுநகர் எம்.பி., மாணிக்கம் தாகூர் கூறினார். சிவகாசி பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் அதிகாரிகள் , பட்டாசு ஆலை உரிமையாளர்களுடன் ஆலோசனை நடந்தது. மாணிக்கம் தாகூர் எம்.பி., தலைமை வகித்தார். பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி சுந்தரேசன், டான்பாமா தலைவர் கணேசன், தொழிதிபர் சன்சைன் கணேசன் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து மாணிக்கம் தாகூர் எம்.பி., கூறியதாவது: பட்டாசு தொழிலை பாதுகாப்பான தொழிலாக மாற்ற வேண்டும். இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமான இத் தொழிலை மூடுவதற்கோ நிறுத்துவதற்கோ முடியாது. இந்த தொழிலில் நடக்கும் சில தவறுகளை, குறைபாடுகளை களைய வேண்டும். இதற்கு கலெக்டர், மத்திய, மாநில அரசுகள், பெசோ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.…

Read More

நாளை (பிப். 17)மின்தடை மாலை 5:00 மணி)

ஆர்.ஆர்.,நகர், துலுக்கப்பட்டி, முக்குரோடு, வச்சக்காரப்பட்டி, பட்டம்புதுார், மலைப்பட்டி, ஆவடையாபுரம், கோட்டூர், நடுவப்பட்டி, இ.முத்துலிங்காபுரம், இ.குமாரலிங்கபுரம், கன்னிசேரி, வாடியூர், முதலிப்பட்டி, மேலசின்னையாபுரம், அம்மாபட்டி, சங்கரலிங்காபுரம், வாய்பூட்டான்பட்டி, இனாம்ரெட்டியபட்டி, கணபதி மில் குவார்ட்டர்ஸ் தென்பகுதி, ஒண்டிப்புலிநாயக்கனுார்.

Read More

விருதுநகருக்கு இன்று பா.ஜ., தலைவர் வருகை

விருதுநகர் : விருதுநகரில் இன்று நடக்கும் பா.ஜ.,வின் பூத் கமிட்டி மாநாடு, தாமரை எழுச்சி விழாவில் பங்கேற்க மாநில தலைவர் முருகன் வருகை தருகிறார் விருதுநகர் சூலக்கரை மேடு வி.டி.,மில் எதிரில் திருவள்ளுவர் திடலில் விருதுநகர் சட்டசபை தொகுதிக்கான பூத் கமிட்டி மாநாடு, தாமரை எழுச்சி விழா இன்று நடக்கிறது. மாநில தலைவர் முருகன் வருகிறார். பொது செயலாளர் பேராசிரியர் சீனிவாசன், துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகை கவுதமி பேசுகின்றனர். தமிழக பொறுப்பாளரான கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.டி.ரவி, துணை பொறுப்பாளரான ஆந்திராவை சேர்ந்த சுதாகர் ரெட்டி பங்கேற்கின்றனர். 10 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பென்டகன் தொழிற்சாலை உரிமையாளர் பாண்டுரங்கன் தலைமையில் பா.ஜ.,வில் இணைகின்றனர். இதற்கான ஆவணத்தை மாநில தலைவர் முருகனிடம் மாவட்ட நிர்வாகிகள் வழங்குகின்றனர்.

Read More

பட்டாசு விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு அரசு அறிவித்த ரூ.3 லட்சம்: அமைச்சர் வழங்கல்

சாத்தூர் : சாத்துார் அருகே அச்சங்குளம் பட்டாசு வெடிவிபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு அறிவித்த ரூ. 3 லட்சம் இழப்பீடு தொகையை அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி வழங்கினார். சாத்துார் தாலுகா அலுவலக கூட்டரங்கில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் கண்ணன் தலைமை வகித்தார். எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், கோட்டாச்சியர் காசி செல்வி முன்னிலை வகித்தனர். தாசில்தார் வெங்கடேஷ் வரவேற்றார். பலியான தொழிலாளர்களில் 16 பேருக்கு மட்டும் நேற்று தமிழக அரசு அறிவித்த தலா ரூ.3 லட்சம் இழப்பீடு காசோலையை அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி வழங்கினார். காயமடைந்த 19 பேருக்கு தலா ஒரு லட்சம் காசோலையையும் அமைச்சர் வழங்கினார். மீதமுள்ள நால்வர் குடும்பத்துக்கு இரண்டாம் கட்டமாக வழங்கப்பட உள்ளது. இதோடு சாத்துார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read More

பிப்.19ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விருதுநகர் : கலெக்டர் கண்ணன் கூறியதாவது: மாவட்டத்தில் 2021 பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் பிப். 19ல் காலை 11:00 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடக்கிறது. விவசாயிகள் பொதுவான கோரிக்கைகளை மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம், என்றார்.

Read More