ஒரே நாளில் 19 இடங்களில் ஆவின் பாலகங்கள் திறப்பு

சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதிகளில் 19 இடங்களில் ஆவின் பாலகங்களை புதன்கிழமை பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தாா். திருத்தங்கல் ஸ்டேன்டா்டு காலனி, அண்ணா காலனி, காரனேசன் காலனி பேருந்து நிறுத்தம் அருகே, பாரதிநகா், மணிநகா், விஸ்வநத்தம், மாரனேரி, ரிசா்வ்லயன், செங்கமல நாட்சியாபுரம் , எம்.புதுப்பட்டி உள்ளிட்ட 19 இடங்களில் அமைச்சா் ஆவின் பாலகங்களைத் திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் திருத்தங்கல் நகர அதிமுக செயலாளா் பொன்சக்திவேல், சிவகாசி நகரச் செயலாளா் அசன்பத்ரூதின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா் .

Read More

நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சிவகாசி – திருத்தங்கலில் 320 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, 419 பேருக்கு உதவி தொகை வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் கண்ணன் தலைமை வகித்தார்.அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உதவிகளை வழங்கி பேசியதாவது: பட்டாசு தொழிலை பாதுகாப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. உங்களுக்காக உழைக்கின்ற அ.தி.மு.க., அரசுக்கு உறுதுணையாக இருங்கள்,என்றார்.மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், நகர செயலாளர் பொன்சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, சுப்பிரமணியன், தெய்வம், மாவட்ட துணைத்தலைவர் சுபாஷினி, மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப துணை செயலாளர் கருப்பசாமிபாண்டியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன், இளைஞரணி சங்கர், கார்த்திக் கலந்து கொண்டனர்.ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலெக்டர் கண்ணன் தலைமையில் நடந்தது. எம்.எல்.ஏ.,சந்திரபிரபா முன்னிலை வகித்தார். 935 பயனாளிகளுக்கு ரூ.1.77 கோடி மதிப்பிலான…

Read More

வசதிகளுக்காக ஏங்கும் ஓ.மேட்டுப்பட்டி இந்திரா காலனி

சாத்துார் – சாத்துார் ஒன்றியம் ஓ.மேட்டுப்பட்டி இந்திரா காலனியில் ரோடு, சாக்கடை உள்ளிட்ட வசதிகளுக்காக மக்கள் ஏங்குகின்றனர்.ஆண், பெண்களுக்கன கழிப்பறை வசதியில்லை. திறந்த வெளியை நாடுவதால் தொற்று நோய் அபாயம் உள்ளது. சாக்கடைகள் சேதமடைந்து கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதில் உற்பத்தியாகும் கொசுக்களால் மர்ம காய்ச்சலுக்கு ஆளாகின்றனர்.சமுதாயக்கூடம் மேற்கூரைகள், தரை பெயர்ந்த நிலையில் உள்ளது . இங்குள்ள 2 மினிபவர் பம்பில் தெற்குத்தெரு உப்புத் தண்ணீர் தொட்டி மோட்டார் பழுதால் செயல்படாமல் உள்ளது.

Read More

வாழ்வதற்கு வழியில்லை; வனத்தில் குடியேறிய மக்கள்

காரியாபட்டி – தொடர் மழையால் விவசாயம் பாதிக்கப்பட்டு கடனை அடைக்க முடியாமல் சிரமத்தில் தவித்த விவசாயிகளுக்கு வெள்ளரி விவசாயம் கை கொடுப்பதால் மகிழ்ச்சியில் உள்ளனர்.காரியாபட்டி கிராமங்கள் நிறைந்த விவசாயம் சார்ந்த பகுதி. நெல், கடலை, வெங்காயம், பருத்தி உள்ளிட்ட விவசாயங்கள் முக்கியமானவை. சில ஆண்டுகளாக சரிவர மழை பெய்யாமல் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டது. இந்தாண்டு நல்ல மழை பெய்யும் என விவசாயிகள் நம்பி கடன் வாங்கி விவசாயம் செய்த நிலையில் பலன் கொடுக்கும் நேரத்தில் தொடர் மழையால் அனைத்து விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.இதை தொடர்ந்து காரியாபட்டி எஸ்.மறைக்குளம், தேனுார், முடுக்கன்குளம் பகுதியில் காடுகளில் விதைக்கப்பட்ட வெள்ளரி செடிகள் தற்போது பலன் கொடுத்து வருவாய் ஈட்டி தருவதால் பெரும்பாலான விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Read More

தி.மு.க., ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு

காரியாபட்டி – விருதுநகர் மாவட்ட தி.மு.க., செயலாளர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு அறிக்கை:ஸ்டாலின் அறிவுறுத்தல்படி தெற்கு, வடக்கு மாவட்டம் சார்பாக பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வை கண்டித்து பிப்.22 ல் விருதுநகர் பாவாலி ரோட்டில் காலை 10:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய ,நகர் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் , தொண்டர்கள் கலந்து கொள்ள கேட்டு உள்ளனர்.

Read More

முதியவருக்கு அமைச்சர் உதவி

அருப்புக்கோட்டை – விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, திருச்சுழியில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நேற்று இரவு 7:30 மணிக்கு பாலவநத்தம் வழியாக சென்றார்.அங்கு விபத்தில் சிக்கி இருசக்கர வாகனத்தில் விழுந்து கிடந்த பாலவநத்தம் தெற்கு தெரு முனியாண்டிக்கு 65, ராஜேந்திரபாலாஜி முதலுதவி சிகிச்சை அளித்தார்.அவரை உறவினர்களுடன் காரில் அருப்புக்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

Read More