வாழ்வதற்கு வழியில்லை; வனத்தில் குடியேறிய மக்கள்

காரியாபட்டி – தொடர் மழையால் விவசாயம் பாதிக்கப்பட்டு கடனை அடைக்க முடியாமல் சிரமத்தில் தவித்த விவசாயிகளுக்கு வெள்ளரி விவசாயம் கை கொடுப்பதால் மகிழ்ச்சியில் உள்ளனர்.காரியாபட்டி கிராமங்கள் நிறைந்த விவசாயம் சார்ந்த பகுதி. நெல், கடலை, வெங்காயம், பருத்தி உள்ளிட்ட விவசாயங்கள் முக்கியமானவை. சில ஆண்டுகளாக சரிவர மழை பெய்யாமல் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டது. இந்தாண்டு நல்ல மழை பெய்யும் என விவசாயிகள் நம்பி கடன் வாங்கி விவசாயம் செய்த நிலையில் பலன் கொடுக்கும் நேரத்தில் தொடர் மழையால் அனைத்து விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.இதை தொடர்ந்து காரியாபட்டி எஸ்.மறைக்குளம், தேனுார், முடுக்கன்குளம் பகுதியில் காடுகளில் விதைக்கப்பட்ட வெள்ளரி செடிகள் தற்போது பலன் கொடுத்து வருவாய் ஈட்டி தருவதால் பெரும்பாலான விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related posts

Leave a Comment