இரண்டாம் நாளாக தொடரும் ‘ஸ்டிரைக்’ : கொரோனா தொற்றிலும் நெரிசலில் பயணம்

விருதுநகர்: விருதுநகரில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறத்த போராட்டத்தால் 47 சதவீதம் பஸ்கள் இயங்கவில்லை. பஸ் கிடைக்காமல் பயணிகள் கொரோனா தொற்றிலும் நெரிசலில் பயணிக்கும் நிலை தொடர்கிறது.

தனியார் பஸ்கள், ஆட்டோ, வேன்களில் தொத்தி கொண்டு ஆபத்து பயணம் மேற்கொள்கின்றனர்.அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் 14வது ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்ற வலியுறுத்தி இரண்டாவது நாளாக நேற்றும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்தது. தொ.மு.ச., சி.ஜ.டி.யூ., உள்ளிட்ட தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். அ.தி.மு.க., தொழிற்சங்கத்தினர் ஈடுபடவில்லை. மாவட்டத்தில் 43 சதவீத பஸ்களே இயங்கி நிலையில்பஸ்கள் கிடைக்காமல் ம்ககள் பஸ் ஸ்டாண்ட், பஸ் ஸ்டாப்புகளில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர். தனியார் பஸ்கள், வேன், ஆட்டோக்களில் தொங்கிய படி ஆபத்து பயணம் மேற்கொண்டனர். கொரோனா தொற்று ரேநத்திலும் நெருக்கடி பயணத்தால் பயணிகள் பெரும் பாதிப்பை சந்தித்தனர். இந்நிலையில் போக்குவரத்து கழக ஊழியர் சங்கங்கத்தினர் கோரிக்கை தொடர்பாக அரசு உடனே பேச்சு வார்த்தை நடத்தக்கோரி போக்குவரத்து கழக பணி மனை முன்பு ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.விருதுநகரில் சி.ஐ.டி.யு., மண்டல பொதுச் செயலாளர் வெள்ளைதுரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related posts

Leave a Comment