பாலவநத்தம் நெடுஞ்சாலை தரம் கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

விருதுநகர்: விருதுநகரில் நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) குறித்து நெல்லை கண்காணிப்பு பொறியாளர் சாந்தி புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளை திடீர் ஆய்வுக்கு உட்படுத்தி வருகிறார்.

சந்தேகத்துக்கு இடமான சாலையில் இயந்திரம் மூலம் 10 இஞ்ச் அகலம், அரை அடி ஆழத்துக்கு வட்ட வடிவில் தோண்டி எடுத்து சம்பவ இடத்திலேயே நெடுஞ்சாலைத்துறையின் தர நிர்ணய அளவில் தார், ஜல்லி கலவை உள்ளதா என்பதை ஆய்வு செய்து வருகிறார். மேலமடை – பாலவநத்தம் சாலையை இயந்திரம் மூலம் தோண்டி பார்த்து தரம் குறித்து ஆய்வு செய்தார். இதன் மாதிரியை நெடுஞ்சாலைத்துறையின் தர நிர்ணய பரிசோதனை கூடத்துக்கு அனுப்பவும் உத்தரவிட்டார். விருதுநகர் கோட்ட பொறியாளர் முருகேசன், உதவி கோட்ட பொறியாளர் தங்க அழகர் ராஜன், உதவி பொறியாளர் ரம்யா உடனிருந்தனர்.

Related posts

Leave a Comment