விருதுநகரில் தி.மு.க., டூவீலர் ஊர்வலம்

விருதுநகர்: விருதுநகர் தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் ஸ்டாலின் தான் வாராரு விடியல் தரப் போறாரு என்ற தலைப்பில் தேர்தல் பிரசார டூவீலர் ஊர்வலம் பழைய பஸ் ஸ்டாண்ட் முன் துவங்கியது.

மாவட்ட செயலாளர்களான எம்.எல்.ஏ.,க்கள் சாத்துார் ராமச்சந்திரன் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தனர்.அண்ணாதுரை சிலை, மாரியம்மன் கோயில், மெயின் பஜார், நகராட்சி அலுவலகம் ரோடு, எம்.ஜி.ஆர்., சிலை, ரோசல்பட்டி, அகமது நகர், போக்குவரத்து கழக பணி மனை ரோடு, கந்தபுரம் தெரு வழியாக சென்று தேசபந்து மைதானத்தில் நிறைவு பெற்றது.எம்.எல்.ஏ., சீனிவாசன், நிர்வாகிகள் மதியழகன், தனபாலன், கார்த்திகேயன், திருமாறன், குமார், கோதண்டராமன், காசிராஜன் பங்கேற்றனர்.ராஜபாளையம்: தென்காசி எம்.பி., தனுஷ்குமார், எம்.எல்.ஏ., தங்கப்பாண்டியன் தலைமையில் நடந்த ஊர்வலம் ராஜபாளையம் பச்சமடம் பகுதி தொடங்கி சம்மந்தபுரம், பழைய பஸ் ஸ்டாண்டு ஆவாரம்பட்டி வழியாக ஜவகர் மைதானத்தில் நிறைவடைந்தது.நகர பொறுப்பாளர் மணிகண்ட ராஜா, பொதுக்குழு உறுப்பினர் ஷியாம் ராஜா, வேல்முருகன், நவமணி, துரை கற்பகராஜ் பங்கேற்றனர்.ஸ்ரீவில்லிபுத்துார் : மேற்கு மாவட்ட அவைத்தலைவர் செல்வமணி, நகர செயலர் அய்யாவுபாண்டியன், ஒன்றிய செயலர் ஆறுமுகம் தலைமையில், பெரியமாரியம்மன் கோயில் முன்பிருந்து டூவீலர் ஊர்வலம் துவங்கியது. கட்சியினர் நகரின் பல்வேறு வீதிகள் வழியாக சென்றனர்.

Related posts

Leave a Comment