கற்போருக்கு பயிற்சி தேர்வு

காரியாபட்டி : மாவட்டத்தில் 3 லட்சத்து 35 ஆயிரத்து 825 கல்லாதோர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் எழுத்தறிவு கற்பிக்கப்படுகிறது. பெண்கள் எழுத்தறிவு சதவீதத்தை உயர்த்தும் பொருட்டு 615 கற்போர் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 25 ஆயிரத்து 6 கற்போருக்கு அடிப்படை கல்வி அறிவு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி தெரிவித்தார்.

Read More

துவங்கியாச்சு தேர்தல் குழு சோதனை

விருதுநகர் : விருதுநகரில் தேர்தல் நிலையான கண்காணிப்புக்குழு அலுவலர் மோகன்ராஜ் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நன்னடத்தை விதிகள் பிப்.,26 ல் அமலானது. இதையடுத்து மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான கண்ணன் தலைமையில் 21 பறக்கும்படை, 21 நிலையான கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் தலா எஸ்.ஐ., ஏட்டு, இரண்டு கான்ஸ்டபிள்கள் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினர் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதி களிலும் தினமும் மூன்று ஷிப்ட் வீதம் ரோந்து பணியில் தீவிர ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகத்துக்கு இடமான வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்துகின்றனர்.விருதுநகரில் நிலையான கண்காணிப்புக்குழு அலுவலர் மோகன்ராஜ் தலைமையில் வச்சக்காரப்பட்டி எஸ்.ஐ., மணிகண்டன், ஏட்டு முத்துக்கிருஷ்ணன், கான்ஸ்டபிள்கள் கார்த்திக், மாதா சிலோன் மணி ஆகியோர் சிவகாசி ரோடு, அருப்புக்கோட்டை ரோடு, கருமாதி மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனை நடத்தினர். சோதனையிடும் வாகனங்களை…

புகார்கள் மீது உடனடி நடவடிக்கை

சிவகாசி : சட்டசபை தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடமிருந்து வரும் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் அதிகாரிகளுக்கு சிவகாசி சப் கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். தேர்தல் அமைதியாக நடத்துவது தொடர்பாக சிவகாசி சப் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் அவர் பேசியதாவது: சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாத வகையில் அனைவரும் தீவிர கண்காணிப்புடன் பணியாற்ற வேண்டும். அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரத்திற்கு, தேர்தல் கமிஷன் விதித்துள்ள விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள், அரசியல் கட்சியினர் புகார் கொடுத்தால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். யாரிடமும் பாரபட்சம் காட்ட கூடாது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் , தாசில்தார் ராமசுப்பிரமணியன், டி.எஸ்.பி., பிரபாகரன், இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி கலந்து கொண்டனர்.

Read More

வாக்காளர்களுக்கு முக கவசம், கையுறை

அருப்புக்கோட்டை : ”வாக்காளர்களுக்கு தேர்தல் நாள் அன்று கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முக கவசம், கையுறை வழங்கப்படும்,” என , அருப்புக்கோட்டை தொகுதி தேர்தல் அலுவலர் முருகேசன் கூறினார். அருப்புக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நநை்த அனைத்து கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது:தேர்தல் பிரசாரத்தில் தனிநபர் பற்றி விமர்சிக்க கூடாது.தனி நபர் இடங்களில் தட்டி வைக்க கூடாது. அனைத்து பணிகளும் முன் அனுமதி பெற வேண்டும். பணப்பட்டு வாடா, பரிசு பொருட்கள் வழங்குதல் தவிர்க்க வேண்டும்.பொது கூட்டம், ஊர்வலம் நடத்த முன் அனுமதி பெற வேண்டும். வாக்காளர்களுக்கு தேர்தல் நாள் அன்று முக கவசம், கையுறை வழங்கப்படும், என்றார்.உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவீந்திரன் ஞானராஜ் முன்னிலை வகித்தார்.

Read More