கோடை முன்பே வந்தது நீரா பானம் ; இயற்கை என்பதால் மக்களிடம் அமோகம்

ராஜபாளையம் : உடலுக்கு குளிர்ச்சி தரும் உயர்சத்துக்களான தாது உப்புகள் அதிகம் கொண்ட நீரா பானம் ராஜபாளையத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்திக்கும் வலு சேர்க்கும் தென்னை மர இயற்கை பானம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.தமிழக அரசு கடந்த ஆண்டு இறுதியில் தென்னை மரங்களிலிருந்து நீரா பானத்தை இறக்கி விற்க அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது. இதனால் கோவை, ஈரோடு, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதி தென்னை விவசாயிகள் நீரா இறக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களிடமிருந்து பெற்று தற்போது ராஜபாளையத்தில் விற்பனை செய்யப்படுகிறது. தென்னை மரத்தில் உருவாகும் விரியாத பாளையிலிருந்து பெறப்படும் சுவை மிகுந்த திரவம் தான் நீரா பானமாகும். இது 100 சதவீதம் இயற்கையானது. சுக்ரோஸ், புரதசத்து, தாதுக்கள், நோய் எதிர்ப்பு காரணிகள் என வைட்டமின்களை அதிகளவில் தன்னகத்தே கொண்ட பானமாகும். நீராவை நேரடியாக…

Read More

ஓட்டுச்சாவடி மையங்களில் ஆய்வு

விருதுநகர் : விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி சட்டசபை தொகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களில் கலெக்டர் கண்ணன் ஆய்வு செய்தார்.1050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிகளை இரண்டாக பிரிப்பது தொடர்பாக விருது நகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி சட்டசபை தொகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்கள் ஆய்வு செய்யப்பட்டது. குடிநீர், கழிப்பிட வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தள வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த உரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ., முருகேசன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கணேசன், சந்தானலட்சுமி, தாசில்தார் சிவஜோதி பங்கேற்றனர்.

Read More

கல்லுாரியில் கருத்தரங்கு

காரியாபட்டி : காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் ‘மாணவர்களுக்கு இன்றைய முன்முயற்சி மூலம் நாளைய தலைவர்களை உருவாக்கும் முயற்சிகள்’ எனும் தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. கல்லூரி நிறுவனர் முகமது ஜலீல் தலைமை வகித்தார். முதன்மை நிர்வாக அதிகாரி சீனி முகைதீன், இணை முதன்மை நிர்வாக அதிகாரி சீனி முகமது அலியார் மரைக்காயர் முன்னிலை வகித்தனர். நிர்வாக இயக்குனர் நிலோபர் பாத்திமா வரவேற்றார். முதல்வர் செந்தில்குமார் அறிக்கை வாசித்தார்.தேசிய திறன் மேம்பாட்டு கழக தலைவர் ஜெயகாந்த் சிங், நேவிகேட் கன்சல்டன்ட் நிறுவன திட்ட இயக்குனர் பூனம் சர்மா, ஜான் மோரிஸ் நிறுவன பங்குதாரர் ஜான் மோரிஸ் பேசினர். கொரிய மொழி, கலாச்சார தொடர்புக்கான உறுப்பினர் சுகில், பெஸ்காம் நிறுவன பொது மேலாளர் நந்தினி பாலசுப்ரமணியம், உணவு உற்பத்தி செயலாக்க ஆட்சிக் குழு தலைவர் பாலகிருஷ்ணன் செட்டி ஆகியோர் இணைய…

Read More

ஆய்விற்கு வந்து ஆசிரியராக மாறிய கலெக்டர்

அருப்புக்கோட்டை : ஓட்டுச்சாவடி ஆய்விற்கு வந்த கலெக்டர் கண்ணன் ஆசிரியராக மாறி மாணவர்களுக்கு போதிய அறிவுரையும் வழங்கினார். அருப்புக்கோட்டை அருகே செம்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுச்சாவடியை விருதுநகர் மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் கண்ணன் ஆய்வு செய்தார். உடன் இருந்த அதிகாரிகளிடம் மைய ஏற்பாடுகளை கேட்டறிந்தார். அப்போது பள்ளியில் பிளஸ் 2 மாணவர்கள் வகுப்பறையில் படித்து கொண்டிருந்தனர். அங்கு சென்ற கலெக்டர் மாணவர்களிடம் எப்படி படிக்கிறீர்கள் என கேட்டதோடு எந்த பாட பிரிவு என கேட்டார். அப்போது வணிகவியல் பிரிவு என கூறியவர்களிடம், நல்ல பாட பிரிவு என்றும் ,அதற்கு வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆடிட்டருக்கு படிக்க வசதியான பிரிவு. இஷ்டப்பட்டு படித்தால் வாழ்வில் முன்னேறலாம் என ஆசிரியராக மாறி அறிவுரை வழங்கினார்.மாணவர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

Read More

விருதுநகரில் துணை ராணுவ அணிவகுப்பு

விருதுநகர் : விருதுநகரில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு துணை ராணுவ வீரர்கள் அணிவகுப்பு நடந்தது. மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக நாகாலாந்து எல்லை பாதுகாப்பு படை யில் இருந்து 82 துணை ராணுவ வீரர்கள் வந்துள்ளனர். இவர்கள் விருதுநகர் கே.வி.எஸ்., நடுநிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏப். 6 ஓட்டுப்பதிவு அன்றும், மே 2 முடிவுகள் அன்றும் முழு பாதுகாப்பு பணியில் இருப்பர். நேற்று தங்கள் அணிவகுப்பை புது பஸ் ஸ்டாண்டில் நடத்தினர். இவர்களுடன் போலீசாரும் பங்கேற்றனர்.

Read More