கல்லுாரியில் கருத்தரங்கு

காரியாபட்டி : காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் ‘மாணவர்களுக்கு இன்றைய முன்முயற்சி மூலம் நாளைய தலைவர்களை உருவாக்கும் முயற்சிகள்’ எனும் தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. கல்லூரி நிறுவனர் முகமது ஜலீல் தலைமை வகித்தார்.

முதன்மை நிர்வாக அதிகாரி சீனி முகைதீன், இணை முதன்மை நிர்வாக அதிகாரி சீனி முகமது அலியார் மரைக்காயர் முன்னிலை வகித்தனர். நிர்வாக இயக்குனர் நிலோபர் பாத்திமா வரவேற்றார். முதல்வர் செந்தில்குமார் அறிக்கை வாசித்தார்.தேசிய திறன் மேம்பாட்டு கழக தலைவர் ஜெயகாந்த் சிங், நேவிகேட் கன்சல்டன்ட் நிறுவன திட்ட இயக்குனர் பூனம் சர்மா, ஜான் மோரிஸ் நிறுவன பங்குதாரர் ஜான் மோரிஸ் பேசினர். கொரிய மொழி, கலாச்சார தொடர்புக்கான உறுப்பினர் சுகில், பெஸ்காம் நிறுவன பொது மேலாளர் நந்தினி பாலசுப்ரமணியம், உணவு உற்பத்தி செயலாக்க ஆட்சிக் குழு தலைவர் பாலகிருஷ்ணன் செட்டி ஆகியோர் இணைய வழி மூலம் கருத்துக்களை பதிவிட்டனர். கல்லூரி ஆராய்ச்சி இயக்குனர் நாஸியா பாத்திமா நன்றி கூறினார்.

Related posts

Leave a Comment