தேசிய பாதுகாப்பு தினம்

ராஜபாளையம்: ராஜபாளையம் மில்ஸ் வளாகத்தில் 50 வது தேசிய பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது.ராம்கோ குரூப் முதன்மை செயல் அதிகாரி மோகனரெங்கன் தலைமை வகித்தார். நுாற்பாலைகள் துணைத் தலைவர் நாகராஜன் வரவேற்றார். சிவகாசி தொழிலக பாதுகாப்பு சுகாதார இணை இயக்குனர் வேலுமணி பேசினார்.ராஜபாளையம் மில்ஸ் முதன்மை மேலாளர் பாலாஜி உறுதிமொழி வாசித்தார். தொழிலாளர்களுக்க உடல் பரிசோதனைமுகாம் நடத்தப்பட்டு பாதுகாப்பு விதிமுறைகள் பற்றிய போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது.பாதுகாப்பு அதிகாரி மனோஜ் செல்வ காந்தி நன்றி கூறினார்.

Read More

தி.மு.க., பூத் கமிட்டி கூட்டம்

ராஜபாளையம்: ராஜபாளையம் நகர் தி.மு.க., வடக்கு பகுதி தொழில்நுட்ப பிரிவு சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் காமராஜர் மண்டபத்தில் நடந்தது.தென்காசி எம்.பி., தனுஷ் குமார், எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் தலைமை வகித்தனர். ஐ- பேக் பிரிவை சேர்ந்தவர்கள் தேர்தலில் பூத் கமிட்டியினருக்கான செயல்பாடுகள் மற்றும் ஒருங்கிணைப்பு குறித்த ஆலோசனை வழங்கினர்.ஏற்பாடுகளை நகர் வடக்கு பொறுப்பாளர் மணிகண்ட ராஜா செய்திருந்தார்.

Read More

ஒருதலை பட்சமாக நடக்குது வாகன சோதனை

சிவகாசி: தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த பின்னர் நடைபெறும் வாகன சோதனை கண்துடைப்பாக , ஒருதலைபட்சமாக உள்ளது. இதில் அப்பாவிகள் பாதிக்கின்றனர் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.தேர்தல் தேதி அறிவித்த உடன் தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்து விட்டது. மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வலியுறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனுமதியின்றி கொண்டு செல்லப்படும் பணம், பொருட்களை பறிமுதல் செய்வதுதான். அதன் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் அதிகம் பாதிக்கப்படுவது சாதாரன வியாபாரிகள், பொதுமக்கள்தான்.இவர்களும் தாங்கள் கொண்டு செல்லும் பணத்திற்கு , பொருட்களுக்கு உரிய ஆவணங்களை எடுத்து செல்வதில்லை. சோதனை செய்யும் குழுவினரோ அரசியல்வாதிகள், அரசியல் பின்புலம் வாய்ந்த வி.ஐ.பி.,…

Read More

ஆண்டாள் கோயில் வந்தது ஜெயமால்யதா : பராமரிக்க திருச்செந்தூர் கோயில் பாகன்கள் நியமனம்

ஸ்ரீவில்லிபுத்துார்: மேட்டுபாளையம் யானைகள் புத்துணர்வு முகாம்சென்ற ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா, பட்டர்கள், பக்தர்களின்உற்சாகமான வரவேற்புடன் கோயிலுக்கு வந்தது. இதை பராமரிக்க திருச்செந்துார் கோயில் பாகன்கள் இருவர் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்கு 2011ல் அசாமில் இருந்து யானை ஜெயமால்யதா கொண்டு வரபட்டது. கேரளாவை சேர்ந்த பாகன் ராஜா பராமரித்து வந்தார். மேட்டுபாளையத்தில் நடந்த யானைகள் புத்துணர்வு முகாமிற்கு பிப்.6 அன்று அழைத்து செல்லபட்டது.இதனிடையே யானையை பாகன் ,உதவியாளர் கடுமையாக தாக்கிய வீடியோ சமூக வலை தளங்களில் பரவியதையடுத்து இருவரையம் கோயில் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. கோவை வனத்துறை இருவரையும் கைது செய்தது.பாகன் சிறையிலடைக்கபட்ட நாள் முதல் யானை ஜெயமால்யதா, புத்துணர்வு முகாமில் ஒருவித பரிதவிப்புடன் காணப்பட்டது. இதனையறிந்த அறநிலையத்துறை, வனத்துறையினர் யானையை மீண்டும் ஆண்டாள் கோயிலுக்கே அனுப்ப முடிவு செய்தனர். பாகனின் கட்டளைக்கே யானை…

Read More

ராஜபாளையத்தில் போலீசார் அணிவகுப்பு

ராஜபாளையம்: தேர்தலை முன்னிட்டு ராஜபாளையத்தில் 200 க்கு மேற்பட்ட போலீசார் கொடி அணி வகுப்பு நடத்தினர்.ராஜபாளையம் தொகுதியில் 418 ஓட்டுச்சாவடிகளில் 4 வாக்கு சாவடிகள் பதட்டம் நிறைந்தவைகளாக கண்டறியப்பட்டள்ளன். பொது மக்களிடையே அச்சத்தை போக்கும் விதமாக நடந்த அணிவகுப்புக்கு டி.எஸ்.பி., நாகஷங்கர் தலைமை வகித்தார்.ராஜபாளையம் மாரியம்மன் கோயில் திடல் எதிரிலிருந்து தொடங்கி மெயின் ரோடு வழியாக காந்தி கலை மன்றம், வடக்கு போலீஸ் ஸ்டேஷன், ரவுண்டானா பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் முடிந்தது.

Read More