போலீஸ் ஸ்டேஷனில் மாயமான வாக்கிடாக்கி

ஸ்ரீவில்லிபுத்துார்- ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீஸ் ஸ்டேஷனிலிருந்த வாக்கிடாக்கி மாயமான நிலையில் எஸ்.பி.,பெருமாள் விசாரணை நடத்தினார்.இங்கு தகவல் தொடர்பிற்காக 10 வாக்கிடாக்கிகள் இருந்தது. ஸ்டேஷனில் நடந்த ஆய்வின்போது ஒருவாக்கி டாக்கி குறைந்து 9 மட்டுமே இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த போலீசார் ஸ்டேஷன் முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. எப்போது தொலைந்தது, எப்படி தொலைந்தது, பாதுகாப்பு பணிக்காக வாங்கியவர்கள் திரும்ப ஒப்படைக்கவில்லையா, டிரான்ஸ்பராகி சென்ற இன்ஸ்பெக்டர்கள் ஒப்படைக்காமல் மறந்து கொண்டு சென்றுவிட்டார்களா என போலீசார் புலம்புகின்றனர். விருதுநகர் எஸ்.பி.,பெருமாளும் விசாரணை நடத்தினார்.

Read More

பொற்கால ஆட்சியை தந்தவர்: முதல்வர்அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரசாரம்

ராஜபாளையம்; ”தமிழகத்தில் முதல்வர் பொற்கால ஆட்சியை கொடுத்து வருகிறார்,” என தேர்தல் பிர்சாரத்தின்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார். ராஜபாளையம் தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் இவர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட எம்.பி.கே புதுப்பட்டி, தெற்கு வெங்காநல்லுார், நக்கனேரி, அயன் கொல்லங்கொண்டான், ஜமீன் கொல்லங்கொண்டான், இளந்திரை கொண்டான், சுந்தரர் நாச்சியார்புரம, வடக்கு தேவதானம் உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டு சேகரித்தார்.அப்போது அவர் பேசியதாவது: எம்.ஜி.ஆர்., ஜெ., வழியில் தமிழக முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை வழங்கி வருகின்றனர்.ஏழை மக்களின் நாடி துடிப்புகளை அறிந்து திட்டங்களை அ.தி.மு.க., அரசு செயல்படுத்தி வருவதுடன் ஏழைகளுக்கான அரசாகதான் இயங்கி கொண்டிருருக்கிறது.இந்த அரசு தொடர்ந்திட இரட்டை இலை சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும். முதல்வரின் உத்தரவின் படி பொங்கல் பரிசாக அனைவருக்கும் ரூ.2500 வழங்கப்பட்டது. இனி ஆண்டுக்கு 6 சிலிண்டர், குடும்ப…

Read More

தவிர்க்கலாமே : மருத்துவமனை வீதிகளில் தேர்தல் பொதுக்கூட்டங்கள்

ஸ்ரீவில்லிபுத்துார்-விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளதால் பஜார் வீதிகள் , மருத்துவமனை வீதிகளில் அரசியல் கட்சிகள் தேர்தல் பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதிப்பதை தவிர்க்கவேண்டும். மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், மருத்துவமனை, பள்ளிகள், பஜார் வீதிகளில் தங்களின் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் முதியவர்கள், கர்ப்பிணிகள், உடல் நலன் பாதிக்கபட்டோர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதிலும் குறுகிய வீதி , ரோடு வளைவுகளில் நடத்தபடும் கூட்டங்களால் மருத்துவமனைக்கு வருவதில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு எளிதில் பயணிக்கமுடியாதநிலை காணப்படுகிறது.ஸ்ரீவில்லிபுத்துார் வடக்குரதவீதியில் இருதயமருத்துவமனை, குழந்தைப்பேறு மருத்துவமனைகள் இருக்கும்நிலையில் அங்கு அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் நடத்தும்போது, டூவீலர்களில் கூட பொதுமக்கள் செல்லமுடியாமல் மற்ற வீதிகளில் சுற்றி செல்கின்றனர். ராஜபாளையத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடக்கும்நிலையில் ஜவகர் மைதானத்தில் பொதுக்கூட்டங்கள் நடத்தபடுவதால் பஸ் போக்குவரத்து…

Read More

சிவகாசியில் பிரசாரம் துவங்கினார் லட்சுமி: தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை

சிவகாசி: சிவகாசி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் லட்சுமி கணேசன் தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபடி பிரசாரத்தை துவங்கினார் .சிவகாசி சட்டசபை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளராக திருத்தங்கல் நகராட்சி முன்னாள் தலைவர் லட்சுமி கணேசன் போட்டியிடுகிறார். இவர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை சந்தித்து ஆசி பெற்ற பின் சிவகாசி வந்தார். தொகுதி எல்லையான கோப்பைநாயக்கன் பட்டியில் அ.தி.மு.க., வினர், பொதுமக்கள் மேள தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். ஈஞ்சார் விலக்கில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று பிரசாரத்தை துவக்கினார்.ரிசர்வ்லைன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார். சிவகாசி காமராஜர் சிலை, அம்பேத்கர் சிலை, கம்மவார் மண்டபத்திலுள்ள எஸ்.ஆர்., நாயுடு சிலை, தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.திருத்தங்கல் சென்று அங்குள்ள அம்பேத்கர், அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவர் , வ.உ.சிதம்பரனார் சிலைகளுக்கு…

Read More

அருப்புக்கோட்டை தொகுதி கள நிலையை பீதியில் தி.மு.க.,, விரக்தியில் அ.தி.மு.க.,வினர்

அருப்புக்கோட்டை அருப்புக்கோட்டை தொகுதி கள நிலையை பார்த்து தி.மு.க., பீதியிலும், அ.தி.மு.க.,வினர் விரக்தியிலும் உள்ளனர்.அருப்புக்கோட்டை தொகுதியில் அ.தி.மு.க., சார்பாக வைகைச்செல்வன், தி.மு.க., சார்பாக சாத்துார் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., போட்டியிடுகின்றனர். இதோடு ம.நீ.ம., சார்பாக உமா தேவி, அ.ம.மு.க.,சார்பாக ஓம்ராஜ் களத்தில் உள்ளனர்.இத்தொகுதியில் நாயக்கர், ரெட்டியார் உள்ளிட்ட தெலுங்கு பேசும் மக்கள் 33 சதவீதம் உள்ளனர். தேவர், பட்டியல் இனத்தவர் தலா 10 சதவீதம், முத்தரையர், தேவாங்கர் தலா 9சதவீதம், சாலியர் 6, இதர சமுதாயத்தினர் 17 சதவீதம் உள்ளனர்.தெலுங்கு பேசுபவர்கள் 33 சதவீதம் இருப்பதால் இவர்கள் ஓட்டுக்களை அறுவடை செய்ய அனைத்து வேட்பாளர்களும் முனைப்பில் உள்ளனர்.அ.தி.மு.க., வேட்பாளர் வைகைசெல்வன் மீதுள்ள அதிருப்தியில் எளிதில் வெற்று பெறலாம் என தி.மு.க., வேட்பாளரும், 2011-16ல் எம்.எல்.ஏ., வாக இருந்த போது செய்தி சாதனைகளை கூறி மீண்டும் வெற்றி பெறலாம் என…

Read More

பொருளீட்டு கடனுக்கு புதிய நடைமுறை : அலைக்கழிக்கும் அதிகாரிகளால் விவசாயிகள் அவதி

சாத்துார், :அதிகாரிகளின் புதிய நடைமுறையால் சாத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மக்காச்சோளத்திற்கு பொருளீட்டு கடன் பெற முடியாது விவசாயிகளை அலைக்கழிக்கின்றனர்.ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள கோடவுனில் உற்பத்தி பொருட்களை ஸ்டாக் வைத்து நல்ல விலை கிடைக்கும் போது விவசாயிகள் விற்பனை செய்து வந்தனர்.சாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திலும் விவசாயிகள் மக்காச் சோளம், பாசிப் பயிறு உள்ளிட்ட பொருட்களை கோடவுனில் வைத்து அதன் பெயரில் 50சதவீத பொருளீட்டு கடன் பெற்று வந்தனர். கடனுக்கு சான்றாக அடங்கல் நகல் வழங்கிவந்தனர். தற்போது ஒரிஜினல் அடங்கல் சான்று இருந்தால் மட்டுமே பொருளீட்டூ கடன் வழங்க முடியும் என அலுவலர்கள் புதிய நடைமுறைகளை வெளியிட்டுள்ளனர். கிராம நிர்வாக அலுவலர்களோ ஒருமுறைதான் அசல் சான்று வழங்க முடியாது என்கின்றனர். இதனால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மக்காச் சோளப் பயிர்களை ஸ்டாக் வைத்துள்ள விவசாயிகள்…

Read More

விருதுநகரில் தி.மு.க., உடன் மோதும் பா.ஜ., ; முக்கிய கட்சிகளின் ஓட்டு வங்கியை உடைக்கும் அ.ம.மு.க.,

விருதுநகர்: விருதுநகர் சட்டசபை தொகுதியில் இம்முறை பா.ஜ.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், அ.ம.மு.க.,வும் களம் இறங்கிய நிலையில் இக்கட்சி வேட்பாளர் முக்கிய கட்சிகளின் ஓட்டு வங்கியை உடைப்பதால் வெற்றிக்கனியை எக்கட்சி பறிக்கும் என்ற எதிர்பார்ப்பு வாக்காளர்களிடம் அதிகரித்துள்ளது. இத்தொகுதியில் அனைத்து சமுகத்தினரும் வசிக்கின்றனர்.நாயக்கர், நாடார், தேவர், தாழ்த்தப்பட்ட சமுகத்தினர் அதிகமாக உள்ளனர். வியாபாரிகள், தொழிலாளர்கள் என அமைதியான தொகுதியாக விருதுநகர் உள்ளது. நாடார், நாயக்கர் என இதுவரை இவ்விரண்டு சமுகத்தில் இருந்து தான் பெரும் கட்சிகளில் இருந்து வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றனர். இத்தொகுதியில் தி.மு.க., எம்.எல்.ஏ.,வாக நாயக்கர் சமுகத்தை சேர்ந்த ஏ.ஆர்.ஆர்., சீனிவாசன் உள்ளார். இவர் 1996ல் எம்.எல்.ஏ.,, 2001ல் போட்டியிட்டு தோல்வியை தழுவி இருக்கிறார். 2016ல் வெற்றியை தொடர்ந்து தற்போது நான்காவது முறையாக போட்டியிடுகிறார்.இருப்பினும் தற்போது மீண்டும் தொகுதியை தக்க வைக்க சற்று சிரமம்படவேண்டிய…

Read More

அனைத்து திட்டங்களும் என்னால்தான் வந்தது: தி.மு.க., வேட்பாளர் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ., பிரசாரம்

ராஜபாளையம்: ”ராஜபாளையத்தில் மேம்பாட்டு பணிகள் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் என்னால் தான் வந்தது ,” என தி.மு.க.,வேட்பாளர் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ., தெரிவித்தார். ராஜபாளையம் தொகுதியில் தி.மு.க., சார்பில் எம்.எல்.ஏ., தங்கப்பாண்யடின் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். சேத்துார் ஆதிபுத்திரங்கொண்ட அய்யனார் கோயிலில் வழிபட்ட பின் ராஜபாளையம் பச்சமடம் தெருவில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். வழியில் தலைவர்கள் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார்.பிரசாரத்தில் அவர் பேசியதாவது: ராஜபாளையத்தில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலம், பாதாள சாக்கடை, கூட்டுக் குடிநீர் திட்டம், புறவழிச் சாலைத் திட்டம் அனைத்து திட்டங்களும் கொண்டு வந்தது தி.மு.க., எம்.எல்.ஏ., வான நான் தான்.வாக்காளர்கள் மீண்டும் எனக்கு ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும். இன்னும் ஏராளமான பணிகள் செய்ய வேண்டியுள்ளது. இந்த மண்ணில் பிறந்த, இந்த மண்ணின் மைந்தனான எனக்கு வாய்ப்பளிக்கும் போது ராஜபாளையம் அரசு மருத்துவமனையை ஹைடெக்…

Read More