அருப்புக்கோட்டை தொகுதி கள நிலையை பீதியில் தி.மு.க.,, விரக்தியில் அ.தி.மு.க.,வினர்

அருப்புக்கோட்டை அருப்புக்கோட்டை தொகுதி கள நிலையை பார்த்து தி.மு.க., பீதியிலும், அ.தி.மு.க.,வினர் விரக்தியிலும் உள்ளனர்.அருப்புக்கோட்டை தொகுதியில் அ.தி.மு.க., சார்பாக வைகைச்செல்வன், தி.மு.க., சார்பாக சாத்துார் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., போட்டியிடுகின்றனர். இதோடு ம.நீ.ம., சார்பாக உமா தேவி, அ.ம.மு.க.,சார்பாக ஓம்ராஜ் களத்தில் உள்ளனர்.இத்தொகுதியில் நாயக்கர், ரெட்டியார் உள்ளிட்ட தெலுங்கு பேசும் மக்கள் 33 சதவீதம் உள்ளனர். தேவர், பட்டியல் இனத்தவர் தலா 10 சதவீதம், முத்தரையர், தேவாங்கர் தலா 9சதவீதம், சாலியர் 6, இதர சமுதாயத்தினர் 17 சதவீதம் உள்ளனர்.தெலுங்கு பேசுபவர்கள் 33 சதவீதம் இருப்பதால் இவர்கள் ஓட்டுக்களை அறுவடை செய்ய அனைத்து வேட்பாளர்களும் முனைப்பில் உள்ளனர்.அ.தி.மு.க., வேட்பாளர் வைகைசெல்வன் மீதுள்ள அதிருப்தியில் எளிதில் வெற்று பெறலாம் என தி.மு.க., வேட்பாளரும், 2011-16ல் எம்.எல்.ஏ., வாக இருந்த போது செய்தி சாதனைகளை கூறி மீண்டும் வெற்றி பெறலாம் என அ.தி.மு.க.,வேட்பாளர் நினைத்திருந்த நிலையில், தெலுங்கு பேசும் சமுதாயத்தை சேர்ந்தவரும் பாரம்பரிய மிக்க ஜெயவிலாஸ் குடும்பத்தை சேர்ந்தவருமான உமாதேவி ம.நீ.ம., வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.அத்துடன் அ.ம.மு.க., வேட்பாளர் ஓம்ராஜூம் தெலுங்கு பேசும் சமுதாயத்தை சேர்ந்தவராக உள்ளார்ம.நீ.ம ., வேட்பாளர் தெலுங்கு பேசும் சமுதாய ஓட்டுகளை ஓரளவு சாதகமாக்கி கொண்டுள்ளதால் சேதாரம் தி.மு.க., அ.தி.மு.க., கட்சிகளுக்கு தான்.வெற்றியை இலகுவாக பறித்து விடலாம் என்று எண்ணிய நிலையில் தெலுங்குபேசும் சமுதாயத்தை சேர்ந்த இரு வேட்பாளர்களும் ஓட்டை பிரிது விடுவார்களோ என்ற அச்சத்தில் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் உள்ளனர்.

Related posts

Leave a Comment