சிவகாசியில் பிரசாரம் துவங்கினார் லட்சுமி: தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை

சிவகாசி: சிவகாசி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் லட்சுமி கணேசன் தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபடி பிரசாரத்தை துவங்கினார் .சிவகாசி சட்டசபை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளராக திருத்தங்கல் நகராட்சி முன்னாள் தலைவர் லட்சுமி கணேசன் போட்டியிடுகிறார். இவர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை சந்தித்து ஆசி பெற்ற பின் சிவகாசி வந்தார். தொகுதி எல்லையான கோப்பைநாயக்கன் பட்டியில் அ.தி.மு.க., வினர், பொதுமக்கள் மேள தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். ஈஞ்சார் விலக்கில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று பிரசாரத்தை துவக்கினார்.ரிசர்வ்லைன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார். சிவகாசி காமராஜர் சிலை, அம்பேத்கர் சிலை, கம்மவார் மண்டபத்திலுள்ள எஸ்.ஆர்., நாயுடு சிலை, தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.திருத்தங்கல் சென்று அங்குள்ள அம்பேத்கர், அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவர் , வ.உ.சிதம்பரனார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.திறந்த வேனில் வந்த லட்சுமி கணேசனுக்கு வழி நெடுகிலும் கடசியினர், பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.நகர செயலாளர்கள் அசன் பதுரூதீன், பொன்சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, பலராம், சுப்பிரமணியன், தெய்வம், வழக்கறிஞர் கணேசன், ஊராட்சி தலைவர் லட்சுமி நாராயணன் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment