தவிர்க்கலாமே : மருத்துவமனை வீதிகளில் தேர்தல் பொதுக்கூட்டங்கள்

ஸ்ரீவில்லிபுத்துார்-விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளதால் பஜார் வீதிகள் , மருத்துவமனை வீதிகளில் அரசியல் கட்சிகள் தேர்தல் பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதிப்பதை தவிர்க்கவேண்டும்.

மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், மருத்துவமனை, பள்ளிகள், பஜார் வீதிகளில் தங்களின் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் முதியவர்கள், கர்ப்பிணிகள், உடல் நலன் பாதிக்கபட்டோர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதிலும் குறுகிய வீதி , ரோடு வளைவுகளில் நடத்தபடும் கூட்டங்களால் மருத்துவமனைக்கு வருவதில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு எளிதில் பயணிக்கமுடியாதநிலை காணப்படுகிறது.ஸ்ரீவில்லிபுத்துார் வடக்குரதவீதியில் இருதயமருத்துவமனை, குழந்தைப்பேறு மருத்துவமனைகள் இருக்கும்நிலையில் அங்கு அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் நடத்தும்போது, டூவீலர்களில் கூட பொதுமக்கள் செல்லமுடியாமல் மற்ற வீதிகளில் சுற்றி செல்கின்றனர். ராஜபாளையத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடக்கும்நிலையில் ஜவகர் மைதானத்தில் பொதுக்கூட்டங்கள் நடத்தபடுவதால் பஸ் போக்குவரத்து மிகவும் பாதிக்கபடுகிறது. இதேநிலை மாவட்டத்தில் பல்வேறு நகரங்களிலும் காணப்படுகிறது. தற்போது தேர்தல் பணிகள் துவங்கி உள்ளநிலையில் நெருக்கடி மிகுந்த பஜார் வீதிகள், மருத்துவமனை பகுதிகளில் தேர்தல் பொதுகூட்டங்கள் நடத்த அனுமதித்தால் பொதுமக்கள் பாதிப்பு அதிகரிக்கும். இதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மாற்று இடங்கள் தேவைமாவட்டத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் போக்குவரத்து நெருக்கடி இல்லாத வீதிகள், மைதானங்களை தற்போதே கண்டறிந்து அந்த இடங்களை மட்டுமே அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் நடத்த மாவட்ட அரசு நிர்வாகம் அனுமதிக்கவேண்டும். இதனால் பொதுமக்கள் எளிதில் மருத்துவமனைக்கு வந்து செல்லலாம். இதற்கு மாற்று இடங்களை கண்டறிந்து ஒதுக்கவேண்டும்.-நித்யானந்தம், சமூக ஆர்வலர், ஸ்ரீவில்லிபுத்துார்…………

Related posts

Leave a Comment