பொருளீட்டு கடனுக்கு புதிய நடைமுறை : அலைக்கழிக்கும் அதிகாரிகளால் விவசாயிகள் அவதி

சாத்துார், :அதிகாரிகளின் புதிய நடைமுறையால் சாத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மக்காச்சோளத்திற்கு பொருளீட்டு கடன் பெற முடியாது விவசாயிகளை அலைக்கழிக்கின்றனர்.ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள கோடவுனில் உற்பத்தி பொருட்களை ஸ்டாக் வைத்து நல்ல விலை கிடைக்கும் போது விவசாயிகள் விற்பனை செய்து வந்தனர்.சாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திலும் விவசாயிகள் மக்காச் சோளம், பாசிப் பயிறு உள்ளிட்ட பொருட்களை கோடவுனில் வைத்து அதன் பெயரில் 50சதவீத பொருளீட்டு கடன் பெற்று வந்தனர். கடனுக்கு சான்றாக அடங்கல் நகல் வழங்கிவந்தனர். தற்போது ஒரிஜினல் அடங்கல் சான்று இருந்தால் மட்டுமே பொருளீட்டூ கடன் வழங்க முடியும் என அலுவலர்கள் புதிய நடைமுறைகளை வெளியிட்டுள்ளனர். கிராம நிர்வாக அலுவலர்களோ ஒருமுறைதான் அசல் சான்று வழங்க முடியாது என்கின்றனர். இதனால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மக்காச் சோளப் பயிர்களை ஸ்டாக் வைத்துள்ள விவசாயிகள் பொருளீட்டு கடன் பெற முடியாமல் தவிக்கின்றனர்.விவசாய பணிகளை தொடர வேறு வழியின்றி தனியாரிடம் குறைந்த விலைக்கு உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம்தான் இதன் விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related posts

Leave a Comment