பொற்கால ஆட்சியை தந்தவர்: முதல்வர்அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரசாரம்

ராஜபாளையம்; ”தமிழகத்தில் முதல்வர் பொற்கால ஆட்சியை கொடுத்து வருகிறார்,” என தேர்தல் பிர்சாரத்தின்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.

ராஜபாளையம் தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் இவர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட எம்.பி.கே புதுப்பட்டி, தெற்கு வெங்காநல்லுார், நக்கனேரி, அயன் கொல்லங்கொண்டான், ஜமீன் கொல்லங்கொண்டான், இளந்திரை கொண்டான், சுந்தரர் நாச்சியார்புரம, வடக்கு தேவதானம் உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டு சேகரித்தார்.அப்போது அவர் பேசியதாவது: எம்.ஜி.ஆர்., ஜெ., வழியில் தமிழக முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை வழங்கி வருகின்றனர்.ஏழை மக்களின் நாடி துடிப்புகளை அறிந்து திட்டங்களை அ.தி.மு.க., அரசு செயல்படுத்தி வருவதுடன் ஏழைகளுக்கான அரசாகதான் இயங்கி கொண்டிருருக்கிறது.இந்த அரசு தொடர்ந்திட இரட்டை இலை சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும். முதல்வரின் உத்தரவின் படி பொங்கல் பரிசாக அனைவருக்கும் ரூ.2500 வழங்கப்பட்டது. இனி ஆண்டுக்கு 6 சிலிண்டர், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.16 லட்சத்திற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.12,110 கோடி பயிர்க்கடன், மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளார்.இந்த அறிவிப்புகளால் தமிழகத்தில் பொற்கால ஆட்சியை முதல்வர் கொடுத்து வருகிறார், என்றார்.

Related posts

Leave a Comment