மும்முனை போட்டியால் திணறும் சாத்தூர்; சரிசம பலத்துடன் மோதுவதால் பிரதான கட்சிகள் ‘கிலி’

சாத்துார் : சாத்துார் தொகுதியில் அ.தி.மு.க., ம.தி.முக., இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், இதற்கு சரிசமமாக அ.ம.மு.க., வும் களத்தில் உள்ளதால்முக்கிய இரு கட்சிகளுக்கு ‘கிலி’யில் உள்ளது. கிராம பகுதிகளை உள்ளடக்கிய இத்தொகுதியில் சாத்துார் நகராட்சி, சாத்துார், வெம்பக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவி., ஒன்றியம், ராஜபாளையம் ஒன்றிய கிராமங்களும் உள்ளன. நாயக்கர், முக்குலத்தோர் சமுதாயத்தினர் அதிகளவில் உள்ளனர். தொகுதி மறுவரையறை செய்யப்பட்டதில் இருந்து இத்தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க., இடையேதான் நேரிடை போட்டி இருந்தது. 2011ல் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாத்துார் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து தி.மு.க., சார்பில் கடற்கரை ராஜ் களம் கண்டார். 29,000 வித்தியாசத்தில் அமைச்சர் ஆர்.பி.உதய குமார் வெற்றி பெற்றார். 2016 லும் அ.தி.மு.க., தி.மு.க., வேட்பாளர்களே போட்டி யிட்டனர். அ.திமு.க., சார்பில் எதிர்க்கோட்டை எஸ்.ஜி. சுப்பிரமணியன் தி.மு.க., கோசு குண்டு சீனிவாசன்…

Read More

சேத்தூர் நகராட்சியாக தரம் உயத்தப்படும்; அமைச்சர் உறுதி

ராஜபாளையம் : சேத்துார் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயத்தப்படும் என தேர்தல் பிரசாரத்தில் ராஜபாளையம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உறுதியளித்தார். ஜமீன்கொல்லங்கொண்டான், தேவதானம், சேத்துார் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பிரசாரம் செய்தார்.அவர் பேசியதாவது: ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துாரில் முக்கூடல் கூட்டு குடிநீர் திட்டம், சிவகாசி, சாத்துாரில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழியில் வல்லநாடு கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரவேண்டும் என சட்டசபையில் ஜெ.,விடம் கோரிக்கை வைத்தேன். இதன் பயனாக சேத்துாரில் முக்கூடல் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு பூஜை போட்டு ஆரம்பித்தேன். இன்று அனைத்து கிராமங்களுக்கும் தாமிரபரணித் தண்ணீர் வருகிறது.சேத்துார் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த தேவையான நடவடிக்கை எடுப்பேன்என்றார்.ராஜபாளையம்நகரசெயலாளர் ரானாபாஸ்கரராஜ், ஜெ., பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், இளைஞரணி செயலாளர் துரைமுருகேசன்,வர்த்தக அணி செயலாளர் ராதாகிருஷ்ணன்ராஜா பங்கேற்றனர்.

Read More

தபால் ஓட்டு முறைகேடு; மாற்றுத்திறனாளிகள் புகார்

விருதுநகர் : மாற்று திறனாளிகளிடம் தபால் ஓட்டு படிவங்களை வழங்கி கையெழுத்திட அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விருதுநகரில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநில பொதுச செயலாளர் நம்புராஜன் கூறியதாவது:தேர்தலில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு தபால் ஓட்டளிக்கும் வசதியை தேர்தல் ஆணையம் வழங்கியதை வரவேற்கிறோம். அதிகாரிகள் சிலர் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று தபால் ஓட்டளிக்கும் படித்த வழங்கி கையெழுத்திட கட்டாயப்படுத்துகின்றனர். கல்வியறிவு இல்லாத சிலர் கைரேகை வைத்துவிட்டால் அவர்கள் ஓட்டுச்சாவடிக்கு செல்லும் உரிமையை இழப்பர். இதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும், என்றார். மாவட்ட நிர்வாகிகள் குமரேசன், நாகராஜ், சுந்தரபாண்டியன் உடனிருந்தனர்.

Read More

ஓட்டுச்சாவடி பணியாளர் மார்ச் 17ல் சிறப்பு பயிற்சி

விருதுநகர் : மாவட்ட தேர்தல் அலுவலர் கண்ணன் கூறியதாவது: மாவட்டத்தின் ஏழு தொதிகளுக்கு உட்பட்ட 2370 ஓட்டுச்சாவடிகளில் பணிபுரியும் 11,376 ஆசிரியர்கள், அலுவலர்களை இணையதளத்தில் சுழற்சி முறையில் பிரிக்கும் பணி அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடந்தது. இவர்களுக்கான முதற்கட்ட சிறப்பு பயிற்சி வகுப்பு ராஜபாளையம் தொகுதிக்கு பி.ஏ.சி.எம்.,மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவில்லிபுத்துார் – வி.பி.எம்.எம்., நர்சிங் கல்லுாரி, சாத்துார் – எஸ்.ஆர்.,நாயுடு கல்லுாரி, சிவகாசி – எஸ்.எப்.ஆர்., கல்லுாரி, விருதுநகர் – கே.வி.எஸ்., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை – தேவாங்கர் கல்லுாரி, திருச்சுழி – சி.இ.ஓ.எ., கல்லுாரியில் மார்ச் 17 காலை 9:30 மணிக்கு நடக்கிறது என்றார்.

Read More

100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி உணவு பாதுகாப்புத்துறை கேக் கண்காட்சி

சிவகாசி : சிவகாசி ஸ்பார்க்ளின் ஓட்டலில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி உணவு பாதுகாப்புத்துறை சார்பில்கேக் கண்காட்சியை மாவட்ட தேர்தல் அலுவலர் கண்ணன் துவக்கி வைத்தார். அவர் கூறியதாவது: மாவட்டத்தில் 100 சதவிகிதம் வாக்காளர்கள் ஓட்டளிக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இது வாக்காளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனாவின் தாக்கத்திலிருந்து இன்னும் முழுமையாக விடுபடாத நிலையில் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் வாக்காளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும். கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்து குறைந்தது 6 அடி சமூக இடைவெளியை கடைபிடித்து நிற்க வேண்டும் என்றார்.சிவகாசி சிவன் கோவில் அருகில் சிவகாசி முகநுால் நண்பர்கள், அதிர்வு தமிழிசையகம் இணைந்து மாதிரி ஓட்டுச்சாவடி மையம் அமைத்து, தப்பாட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் மின்னணு வீடியோ வாகனம் மூலம் விழிப்புணர்வு குறும்படம் ஒளிப்பரப்பானது.…

Read More

பிரமுகர்களிடம் ஆதரவு திரட்டிய அ.தி.மு.க., வேட்பாளர்

சிவகாசி : சிவகாசி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் லட்சுமி கணேசன் முக்கிய பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டினார். சிவகாசி சட்டசபை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளராக லட்சுமி கணேசன் போட்டியிடுகிறார். மார்ச் 12ல் சிவகாசி, திருத்தங்கல்லில் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து பிரசாரத்தை துவக்கினார்.முன்னாள் எம்.பி., ராதாகிருஷ்ணனை அவரது இல்லத்தில் சந்தித்து லட்சுமி கணேசன் ஆசி பெற்றார். த.மா.க., மாவட்ட தலைவர் ஜி.வி.கார்த்திக், நிர்வாகி ராஜபாண்டியன், தொழிலதிபர்கள் ஏ.எஸ்.ராஜப்பன், அருண், செண்பகமூர்த்தி, ஆசைத்தம்பி, ஏ.ஆர்.டி.ஜெயராஜ், அரிராம் சுந்தரவேல், சேட்டுகள் சங்க தலைவர் தர்கார் சேட், தேவர் சமுதாய நிர்வாகிகள் சிங்கராஜ், யுவராஜ், சேனைத்தலைவர் உறவின் முறை நிர்வாகிகள் ஞானம் ஆகியோரை சந்தித்து லட்சுமி கணேசன் வாழ்த்து பெற்று ஓட்டு சேகரித்தார். நகர செயலாளர்கள் அசன் பதுரூதீன், பொன்சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், பலராம்,…

Read More

ஒரு கட்சியும் வேண்டாம்; ஒரு கொடியும் வேண்டாம்

விருதுநகர் : விருதுநகர் அருகே கூரைக்குண்டு கிராமத்தில் அரசியல் கட்சிக்கொடிகள் ஏற்றவும்,சுவரொட்டிகள் ஒட்டவும் விதிக்கப்பட்ட தடையை கிராம மக்கள் பல ஆண்டுகளாக தொன்று தொட்டு பின்பற்றி வருகின்றனர். அரசியல் கட்சியினர் தேர்தலில் போட்டியிடும் தங்களது கட்சி வேட்பாளரை அறிமுகம் செய்ய பெரிதும் உதவுவது சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள் தான். தேர்தல் சூடு பிடிக்க துவங்கியதும் சுவர்களில் கட்சியினர் ‘புல்’ என எழுதி முன் கூட்டியே இடம் பிடித்து விடுவர். தேர்தல் முடிந்ததும் புத்தம் புதிய சுவர்களில் கட்சியினர் காட்டிய கைவண்ணத்தால் அலங்கோலமாக காட்சியளிக்கும். பாழாக்கிய சுவர்களை மீண்டும் வர்ணம் பூசி சுத்தம் செய்து கொடுக்க வேண்டும் என்பது கட்சியினரின் வழக்கத்தில் இல்லாத ஒன்று. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு கட்சிக்கொடி, சுவர் விளம்பரம், சுவரொட்டிகள் ஒட்ட சில கிராமங்களில் நிலவும் கட்டுப்பாடுகள் இன்றளவும் எள் முனையளவு கூட…

Read More

அருப்புக்கோட்டை தொகுதி தேமுதிக., வேட்பாளர்

ஆர். ரமேஷ் – அருப்புக்கோட்டை வயது: 46 படிப்பு: எம்.ஏ.,எம்.பிஎட்., தொழில்: விவசாயம், கெமிக்கல் வியாபாரம். குடும்பம்: மனைவி, மகன், மகள். அரசியல் அனுபவம்: 2005 முதல் கட்சி உறுப்பினர், மாவட்ட பட்டதாரி ஆசிரியர் அணி செயலர், நெல்லை மேற்கு மாவட்ட முன்னாள் பொருளாளர், மாநில பொதுக்குழு உறுப்பினர். கிடைத்தது எப்படி: உழைப்பு, விசுவாசத்திற்கு கிடைத்தது.

Read More

தி.மு.க., கூட்டணிக்கு தான் வெற்றி

திருச்சுழி : திருச்சுழி சட்டசபைதொகுதி தி.மு.க., வேட்பாளர் தங்கம்தென்னரசு எம்.எல்.ஏ., நேற்று பிரசாரத்தை துவங்கினார். காரியாபட்டி, பாலையம்பட்டி, அருப்புக்கோட்டை, கத்தாளம்பட்டி, பசும்பொன்,வீரசோழன், மறையூர், திருச்சுழியில் உள்ள தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.சமுதாய உறவின்முறை நிர்வாகிகளை சந்தித்து ஆசி பெற்றார். அவர் கூறியதாவது: தி.மு.க., தலைமையிலான மதச்சார்பாற்ற முற்போக்கு கூட்டணி 234 தொகுதிகளிலும், வெற்றி பெறும். ஸ்டாலின் முதல்வராவது உறுதி என்றார்.

Read More

ஸ்ரீவி.,தொகுதி-காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பயோடேட்டா

ஸ்ரீவில்லிபுத்துார் பி.எஸ்.டபிள்யூ. மாதவராவ் – காங்கிரஸ் வயது: 64 படிப்பு: எம்.ஏ.,பி.எல்., எம்.பி.ஏ., தொழில்: வழக்கறிஞர், அரசியல். குடும்பம்: மனைவி (காலமானார்), மகள், அரசியல் அனுபவம்: 1986 முதல் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகள் வகித்துள்ளார். கிடைத்தது எப்படி: ஒவ்வொரு தேர்தலின் போதும் வாய்ப்பு கேட்பது வழக்கம். கிடைக்கவில்லை என்றாலும் சோர்வடையாமல் கட்சி பணியில் கவனம் செலுத்துவார். உழைப்பு, விசுவாசத்திற்கு கிடைத்தது.

Read More