சேத்தூர் நகராட்சியாக தரம் உயத்தப்படும்; அமைச்சர் உறுதி

ராஜபாளையம் : சேத்துார் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயத்தப்படும் என தேர்தல் பிரசாரத்தில் ராஜபாளையம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உறுதியளித்தார்.

ஜமீன்கொல்லங்கொண்டான், தேவதானம், சேத்துார் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பிரசாரம் செய்தார்.அவர் பேசியதாவது: ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துாரில் முக்கூடல் கூட்டு குடிநீர் திட்டம், சிவகாசி, சாத்துாரில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழியில் வல்லநாடு கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரவேண்டும் என சட்டசபையில் ஜெ.,விடம் கோரிக்கை வைத்தேன்.

இதன் பயனாக சேத்துாரில் முக்கூடல் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு பூஜை போட்டு ஆரம்பித்தேன். இன்று அனைத்து கிராமங்களுக்கும் தாமிரபரணித் தண்ணீர் வருகிறது.சேத்துார் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த தேவையான நடவடிக்கை எடுப்பேன்என்றார்.ராஜபாளையம்நகரசெயலாளர் ரானாபாஸ்கரராஜ், ஜெ., பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், இளைஞரணி செயலாளர் துரைமுருகேசன்,வர்த்தக அணி செயலாளர் ராதாகிருஷ்ணன்ராஜா பங்கேற்றனர்.

Related posts

Leave a Comment